Tuesday, January 10, 2017

ஐஆர்சிடிசி புதிய ஆப் அறிமுகம்!

ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய புதிய செயலியை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தொடங்கி வைத்தார்.

ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில், விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகிறது. பயனாளர்கள் மற்றும் ஏஜென்டுகளுக்கு தனித் தனி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐஆர்சிடிசி புதியசெயலியை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தொடங்கி வைத்தார். இந்த புதிய செயலில், டிக்கெட் முன்பதிவு, தட்கல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெறலாம்.


வாட்ஸ் அப்பின் ட்ரிக்ஸ்

  • வார்த்தைக்கு முன்னும், பின்னும் * குறியை சேர்த்தால் போல்டாகவும்,  _  குறியை சேர்த்தால் சாய்வு எழுத்துக்களாகவும், ‍ ‍‍~ குறியை சேர்த்தால் அடித்துக்காட்டப்பட்ட எழுத்துக்களாகவும் இருக்கும்.


  • புதிய அப்டேட்டுடன் வாட்ஸ் அப் வைத்திருப்பவர்கள் போட்டோவை க்ரூப் அல்லது தனது நண்பருக்கு அனுப்பும் போது போட்டோவின் மேல் உள்ள எடிட் ஆப்ஷனை க்ளிக் செய்து அதனை கொண்டு படத்தின் மேல் கைகளாலேயே வரைய, எழுத முடியும்.


  • Account > Privacy-யில் சென்று  ‘Read Receipts’ ஆப்ஷனை ஆஃப் செய்தால் போதும் ப்ளூடிக் தெரியாது. 


  • (Group)க்ரூப்ல நீங்க யார்கிட்ட பேசணுமோ அவங்க பேர @ சிம்பளுடன் டைப் செய்தால் போதும் அவரை அது சரியாக ஞாபகப்படுத்தும்.


  • Account > Privacy > Last Seen Timestamp ல‌ ’Nobody’ செலக்ட் செஞ்சுட்டா உங்களோட லாஸ்ட் சீன் யாருக்குமே தெரியாது. 


Thursday, December 22, 2016

இந்தியாவிற்கான 'போகிமான் கோ'

இந்தியாவுக்கான போகிமான் கோ விளையாட்டு அப்ளிகேஷன் கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கின்றது.

https://play.google.com/store/apps/details?id=com.nianticlabs.pokemongo

கூகுள் டாய்லட் லொக்கேட்டர்

டில்லி மற்றும் மத்திய பிரதேசத்தில், எங்கெங்கு பொது கழிப்பறைகள் உள்ளன என்பதை, 'கூகுள் டாய்லட் லொக்கேட்டர்' ஆப் மூலம் தெரிந்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, டாய்லெட்டைக் கண்டறியும், கூகுள் டாய்லட் லொக்கேட்டர் ‛ஆப்'பை வெளியிட்டார். பிரதமரின் ‛தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், திறந்த வெளியில் இல்லாமல், பொது கழிப்பறையை பயன்படுத்தும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த ஆப் வெளியிடப்பட்டுள்ளது. 6,200 பொதுக் கழிப்பறைகள் எங்கெங்கு உள்ளன விபரங்கள் தரப்பட்டுள்ளது. டில்லி மற்றும் ம.பி.,யில் மட்டும் உள்ள கழிப்பறைகள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம், விரைவில் மற்ற மாநிலங்களுக்கும் விரிவு படுத்தப்பட உள்ளது.
Saturday, December 17, 2016

ஜிபோர்டு

கூகுள் கீபோர்டுடன் கூகுள் சர்ச் எஞ்சினையும் இணைத்து கூகுள் வெளியிட்டிருக்கும் புதிய கீபோர்டுதான் இந்த ஜிபோர்டு. இதன் மூலம் யூடியூப் வீடியோ லிங்க உட்பட, எந்த ஆப்பிலிருந்தும் கூகுள் சர்ச் செய்து பகிர முடியும். இனி மொபைல் கீபோர்ட்டில் இருந்தே கூகுள் சர்ச் செய்து கொள்ளலாம். ஆன்ட்ராய்ட் போன்களுக்கு மட்டுமே இந்த அம்சம்!

Thursday, December 15, 2016

ரூ.1.3 லட்சம் கோடிக்கு வாட்ஸ்அப்-ஐ வாங்குகிறது ஃபேஸ்புக்!

செல்போன் தகவல் பரிமாற்ற சேவை அளிக்கும் வாட்ஸ்அப் நிறுவனத்தை முன்னணி சமூக இணைய தளமான ஃபேஸ்புக் வாங்குகிறது.

அதன்படி, வாட்ஸ்அப்-ஐ சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க ஃபேஸ்புக் ஒப்பந்தம் செய்துள்ளது. அதோடு ஃபேஸ்புக் தனது இயக்குனர் வாரியத்தில் வாட்ஸ்அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜான் கோமை இடம்பெறச் செய்துள்ளது.

Saturday, November 19, 2016

ரூ.1000-க்கு 4ஜி ஸ்மார்ட் போன் - ஜியோ

ஜியோ அடுத்த அதிரடியாக ரூ.1000-க்கு 4ஜி ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனுடன் இலவச வாய்ஸ் கால்ஸ்களும் வழங்கப்படுகிறது. மேலும், இதனுடன் இலவச வீடியோ கால்ஸ்களும் வழங்கப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி ஜியோ ரூ.1000-க்கு ஜியோ ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தும் பட்சத்தில் இது ஸ்மார்ட் போன் சந்தையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Wednesday, November 16, 2016

போட்டோ ஸ்கேன்

போட்டோக்களை அதன் இயல்பு தன்மை மாறாமல் ஸ்கேன் செய்வதற்கு கூகுள் நிறுவனம் 'போட்டோ ஸ்கேன்' என்ற புதிய ஆப் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப், ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களில் இலவசமாக கிடைக்கின்றது. ஸ்கேன் செய்ய வேண்டிய புகைப்படங்களை ஐந்து இடங்களில் படம் பிடித்து, ஒன்றாக இணைப்பதால், இதில் வழக்கமாக போனின் மூலம் படம் பிடித்தால் வரும் 'கிளாரிட்டி' இருக்காது.

லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.photos.scanner


Monday, November 07, 2016

பேஸ்புக் - வேலை தேடல் அறிமுகம்

பேஸ்புக் நிறுவனம், லிங்ன்டின் (LinkedIn) போன்ற வேலைவாய்ப்பு தளங்களுக்கு போட்டியாக களமிறங்க உள்ளது. இது குறித்து ஃபேஸ்புக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஃபேஸ்புக் பேஜ் அட்மின்கள் இனி வேலை வாய்ப்புகளை பற்றி பேஸ்புக் பக்கங்களில் அறிவிக்கவும், வேலைக்கான விண்ணப்பங்களை ஃபேஸ்புக் பேஜ் மூலமாகவே பெற்றுக் கொள்ளவும் ஃபேஸ்புக் நிறுவனம் வழி வகுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது இந்த அம்சம் சோதனை கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

Monday, October 17, 2016

கம்ப்யூட்டர் உபயோகித்த நேரம்

விண்டோஸில் கம்ப்யூட்டர் எவ்வளவு நேரம் 'ஆன்' செய்து இருந்தோம்( உபயோகித்த நேரம் ) என தெரிந்து கொள்ள வேண்டுமா?

விண்டோஸ் டாஸ்க் மேனேஸர்( Task Manager ) இதற்கு உதவுகின்றது


மேற்கண்ட படத்தின் படி 3:32 மணி நேரம் 42 வினாடிகள்.