Monday, May 30, 2011

திருக்குறள்





திருக்குறள் குறட்பாக்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியாக்கமும் பிடிஎப் வடிவில் படிக்க,

இங்கே கிளிக் செய்யவும்

ஈதர்நெட் ஹப்(Ethernet Hub)


இரண்டிற்கு மேற்ப்பட்ட கம்ப்யூட்டர்களை இணைக்க ஹப்(HUB) பயன்படுகின்றது. இதனை பல்வேறு வகைகளில் இணைக்க இயலும்.உதாரணத்திற்கு Topology என்கின்ற உத்தியை பயன்படுத்தி கம்ப்யூட்டரை இணைத்துக்கொள்ளலாம். இணைக்கும் முறைகளில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. அவையாவன,

1. Bus Topology
2. Star Topology
3. Ring Topology
4. Mesh Topology
5. Hybrid Topology

டிப்ஸ் - விண்டோஸ்

உங்கள் திரையில் பல விண்டோக்களைத் திறந்து வைத்து இயங்கிக் கொண்டிருக்கிறீர்களா? அனைத்தையும் மூடி திரையில் இருக்கும் ஒரு ஐகானைக் கிளிக் செய்திட விரும்புகிறீர்களா? விண்டோஸ் (Windows) கீயை (கண்ட்ரோல் மற்றும் ஆல்ட் கீகளுக்கு நடுவே விண்டோஸ் படத்துடன் உள்ள கீ) அழுத்திக் கொண்டு அதனுடன் D கீயை அழுத்தவும். அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும். இல்லை இல்லை மீண்டும் அவை வேண்டுமே என்று எண்ணுகிறீர்களா? மறுபடியும் அதே போல அந்த இரண்டு கீகளையும் அழுத்துங்கள். மீண்டும் அவை கிடைக்கும்.

Wednesday, May 25, 2011

இலவச ஐகான்கள்

கணக்கில் அடங்கா பல்வேறு அளவுகளில் ஐகான்கள் வேண்டுமா? இங்கே சென்று இலவசமாக டவுன்லோட் செய்து உபயோகிங்கள்.


Tuesday, May 24, 2011

வாக்கெடுப்பு முடிவுகள்

சி மொழி வினா
sizeof(NULL) இந்த கோடு கீழ்கண்டவற்றில் எதை வெளியீடு செய்யும் ( 32 bit processor & 32 bit compiler )

விடை
4 Bytes

NULL என்பது கீழ்க்கண்டவாறு குறிக்கப்பட்டிருக்கும். ஆக 'integer' டேட்டா டைப்பின் அளவு, அதாவது 4 Bytes என விடை கொடுக்கும்.

#define NULL 0

Tuesday, May 17, 2011

டாக்ஸ் வியுவர் - Docx Viewer

அண்மையில் வேர்ட் 2010 ஆபீஸ் தொகுப்புடன் வந்துள்ள வேர்ட் ப்ராசசர் புரோகிராமில், வழக்கமான வேர்ட் பைல்கள், மாறா நிலையில் Docx என்ற வடிவில் அமைக்கப்படுகின்றன. இதனைப் பழைய வேர்ட் 2003 மற்றும் அதற்கு முந்தைய புரோகிராம்களில் திறந்து படிக்க இயலாது.

இத்தகைய டாகுமெண்ட் களைப் படிக்க முடியாமல் பலர் சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் நமக்கு இலவசமாகக் கிடைப்பது Docx Viewer. இதன் மூலம் நாம் Docx பார்மட்டில் உள்ள பைல்களை, நம் கம்ப்யூட்டரில் வைத்தே, திறந்து படிக்கலாம். இதற்கு நம் கம்ப்யூட்டரில் வேர்ட் அல்லது வேர்ட் போன்ற புரோகிராமும் தேவையில்லை. இந்த புரோகிராமில் திறந்து படித்த பின்னர், அதனைக் காப்பி செய்து, அப்படியே நாம் பயன்படுத்தக் கூடிய டெக்ஸ்ட் புரோகிராமில், நாம் பயன்படுத்தும் பார்மட்டில் சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம்.

Docx Viewer- ஒரு சிறிய, எங்கும் எடுத்துச் செல்லக் கூடிய புரோகிராம். இதனைக் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவையில்லை. இந்த புரோகிராமை டவுண்லோட் செய்து, ஸிப் பைலை விரித்து வைத்து இயக்கினால் போதும். உடனே, நமக்கு Docx பார்மட்டில் உள்ள பைலைத் திறப்பதற்கான மெனு கிடைக்கிறது. அதே புரோகிராமில் பார்மட்டில் சேவ் செய்திட முடியாது. அதனைப் படிக்கலாம்; திருத்தலாம் மற்றும் காப்பி செய்து கிளிப் போர்டுக்குக் கொண்டு போகலாம். பின்னர் கிளிப் போர்டில் இருப்பதை, டெக்ஸ்ட் ப்ராசசருக்குக் கொண்டு செல்லலாம்.

Saturday, May 07, 2011

இலவச டிக்ஸ்னரி டவுன்லோட்

இலவச டிக்ஸ்னரி டவுன்லோட்( free dictionary download ) செய்ய இங்கே http://wordweb.info/free/ செல்லவும்..
இதை நீங்கள் இன்ஸ்டால்(install) செய்தபின் alt+ctrl+w ஆகிய பட்டன்களை ஒன்றாக அமித்தினால் இந்த சாப்ட்வேர் திறக்கப்படும்..

உதாரணமாக நீங்கள் ஒரு வார்த்தையை தேர்வு செய்து, பின் alt+ctrl+w ஆகிய பட்டன்களை ஒன்றாக அமித்தினால் அந்த வார்ததைக்கான பொருள் இந்த(word web) சாப்ட்வேரால் காண்பிக்கப்படுகின்றது.



Monday, May 02, 2011

மைசூர் அரண்மனை

மைசூர் பேலஸ்( Mysore Palace ) ஆன்லைனில் சுற்றிப்பார்க்க இங்கே செல்லவும்(www.mysorepalace.tv). 360 டிகிரி பார்க்கும் வசதி, ஆங்கில வர்ணனை, போட்டோ கேலரி என எளிதாக பார்க்க முடிகின்றது. செலவில்லாமல் மைசூர் அரண்மனையை சுற்றிப்பாருங்கள்..

http://www.mysorepalace.tv/360_Eng/index.html