Thursday, June 21, 2012

இங்கிலீஸ் யோகி


இங்கிலீஸ் கிராமர்(Grammer) வோகாபுலரி(Vocabulary) கேள்விகள், பதில்கள், ஆங்கில சொல்லுக்கான அர்த்தம், கிராமர் பரீட்சை, இங்கிலீஸ் நாம் பேசும்போது செய்யும் தவறுகள் என பலவிதத்தில் நம் ஆங்கில ஆற்றலை வளர்த்துக்கொள்ள உதவுகின்றது இந்த சைட்

இவரு உண்மையிலேயே இங்கிலீஸ் யோகிதான்..
http://www.englishyogi.com/

ஆன்லைன் மின்கட்டணம்


நீங்க இன்னும் கீயூல நின்னுதான் மின்கட்டணம் கட்டுரிங்களா?

தமிழ்நாடு மின்சார வாரியம் ஆன்லைன் மின்கட்டணம் பணம் கட்டும் வெப்சைட்க்கு ஏகப்பட்ட வரவேற்பாம்..பல பயனாளர்கள் இந்த வெப்சைட்ல் கணக்கு ஆரமித்து உள்ளார்களாம்..எனவே வெப்சைட்டை மேலும் மெருகேற்ற மின்சாரவாரியம் முடிவுசெய்துள்ளாதாம்..

நீங்கள் கீழ்காணும் வெப்சைட்டில் புதிதாக கணக்கு துவக்கியபின் மின்கட்டணத்தை கடன்அட்டை(creditcard) அல்லது உங்கள் ஆன்லைன் வங்கி கணக்கு(online banking) மூலமாக செலுத்தலாம்..


வெப்சைட் லிங்க்
https://www.tnebnet.org/awp/login

Wednesday, June 20, 2012

தும்பி & விஸ்காபுலரி


தும்பி

www.tumbhi.com

இந்த இணையதளத்தில் உங்களின் தனித் திறமைகளை உலகுக்கு சொல்ல வாய்ப்பளிக்கிறது. இசை, ஆவணப்படம், போட்டோகிராபி, அனிமேஷன், எழுத்து, ஃபைன் ஆர்ட்ஸ், ஃபேஷன், கலை போன்ற எட்டு துறைகளிலிருந்து படைப்புகளை அனுமதிக்கிறது இத்தளம்.

இதற்கென தனியாக ஆலோசனை குழு இருக்கிறது. போட்டோகிராபி, மியூசிக், ஆவணப்படம் என ஒவ்வொன்றுக்கும் தனி குழு செயல்படுகிறது. அந்தந்த குழுவில் இடம் பெற்றிருப்பவர்கள் அந்த துறையைச் சார்ந்த வல்லுனர்கள். இவர்கள் இந்த இணையதளத்திற்கு வரும் படைப்புகளை ஆராய்ந்து, இந்த வலைதளத்தில் வெளியிடுகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் அவர்களது திறமையை வெளிக்கொணர  மாதத்திற்கு ஒருமுறை  போட்டியும் நடத்துகிறார்கள்.

விஸ்காபுலரி

http://www.wizcabulary.com/

ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கான, ஆங்கிலச் சொல் அறிவினைச் சோதித்து வளர்த்திடும் தளமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. வெளியே வெய்யிலோ அல்லது மழையோ இருப்பின், சிறுவர்களை வீட்டுக்குள் கட்டிப் போடும் வகையில், சவால் விடும் தளமாகவும் இது அமைக்கப்பட்டுள்ளது.


Tuesday, June 12, 2012

நிம்கோ


வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு குறைந்த செலவில் கால் பண்ண நிம்கோ உதவுகின்றது. இந்தியாவிற்கு கால்( call ) செய்ய நிமிடத்திற்கு 0.013 அமெரிக்க டாலரை கட்டணமாக நிர்ணயித்துள்ளது. அதாவது இன்றைய இந்திய மாதிப்பில் நிமிடத்திற்கு 0.007 பைசா மட்டுமே. இதற்கு நீங்கள் நிம்கோவை இன்ஸ்டால் செய்து அதிலிருந்து இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளுக்கு போன் கால் ( Phone Call )செய்யலாம்..இதில் டையல் பேட் உள்ளது..கால் பண்ணுங்க சீப்பான விலையிலே..ஆண்ட்ராய்டு(Android), ஐபோன்(I-Phone) மற்றும் கம்ப்யூட்டரிலும் இன்ஸ்டால் செய்து உபயோகிக்கலாம்..

லிங்க்