Monday, May 28, 2012

ஸ்கைபயர்


பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை காண முடியாது. 
இணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு.ஸ்கைபயர் கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. 

யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன.மொத்தத்தில் ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது.ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை மொபைல்களையும்( ஆன்ட் ராய்ட் போன், ஆப்பிள் ஐ பேட், ஐ போன் ) ஆதரிப்பது சிறப்பம்சம்.

வெப்சைட்:

Tuesday, May 22, 2012

கூகுள் டிரைவ்

கூகுள் அக்கவுண்ட் உள்ள யாரும் இதனை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். 5 ஜிபி[இலவசமாக] அளவிலான பைல்களை இதில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் அந்த பைல்களை, உலகின் எந்த மூலையில் இருந்தாலும், இன்டர்நெட் இணைப்பின் மூலம், கூகுள் ட்ரைவ் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம். 


மேலும் தெரிந்துகொள்ள,
https://drive.google.com/start#home

https://drive.google.com/#my-drive




Friday, May 18, 2012

'பின்ட்ரெஸ்ட்'

பின்ட்ரெஸ்ட்டில் அமெரிக்க அதிபரும் உறுப்பினராகி இருக்கிறார், சாமான்யர்களும் பின்ட்ரெஸ்ட்டை நோக்கி படையெடுக்கின்ற‌னர். குறிப்பாக பெண்கள் அலை அலையாக உறுப்பினர்களாகி வருகின்றனர். சொல்லப்போனால் பின்ட்ரெஸ்ட் மகளிர் ராஜ்யம் தான். அதில் பெண்களே அதிக அளவில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்த வகையில் அதனை 'பெண்களின் பேஸ்புக்' என்றும் சொல்லலாம்.

பின்ட்ரெஸ்ட் தளம் இணைய குறிப்பு பலகை என்று அழைத்து கொள்கிறது. அதாவது இணையத்தில் குத்தி வைத்து குறித்து வைக்கும் பலகை.

பள்ளி கல்லூரி போன்ற இடங்களில் அறிவிப்பு பலகை இருக்கும் அல்லவா? அதில் அறிவிப்புகளையும் புகைப்படங்களையும் இதர செய்திகளையும் 'பின்'னால் குத்தி வைப்பார்கள். அதே போல இந்த தளத்தில் இணையவாசிகள் தாங்கள் இணையத்தில் பார்க்கும் சங்கதிளை குத்தி வைத்து கொள்ளலாம். இதற்காக என்று அறிவிப்பு பலகைகளை சுலபமாக உருவாக்கி கொள்ளலாம். எத்தனை பலகைகளை வேண்டுமானாலும் உருவாக்கி கொள்ளலாம்.

இணையதள‌ முகவரி: http://pinterest.com/

Saturday, May 12, 2012

இம்மேஜ் ரீசைஸர்


 இம்மேஜ் ரீசைஸர் ( Image Re-sizer ) விண்டோசுக்கான இம்மேஜ் ரீசைசர் இது..




இதனை டவுன்டோட் செய்து இன்ஸ்டால் செய்ததும் ஒரே கிளிக்கில் புகைப்படங்களை நமக்கு தேவையான அளவுக்கு மாற்றிக்கொள்ளலாம்..

புகைப்படத்தில் ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் ‘ரிசைஸ் பிட்சர்ஸ்’(Resize Pictures) ஐ கிளிக் செய்யவும்..பின்வரும் விண்டோ திறக்கப்படும்..

இதில் உங்களுக்கு தேவையான அளவை தேர்வு செய்து படங்களின் அளவை மாற்றி அமையுங்கள்.

Friday, May 11, 2012

பிளாக்வேர்

பிளாக்வேர் (Blogware) என்பவை பிளாக்குகள் தயாரிப்பதிலும் நிர்வகிப்பதில் மேம்படுத்துவதிலும் உதவும் சாப்ட்வேர் தொகுப்புகள். இவற்றை வெப்லாஃக் சாப்ட்வேர், பிளாக்கிங் சாப்ட்வேர்(weblog software, blogging software) என்றும் அழைப்பார்கள்.

பிளாக்வேர்க்கு வேர்டு பிரஸ்( Word Press ) டூலை உதாரணத்திற்கு கூறலாம்.

Wednesday, May 02, 2012

ஜிடாக் டிப்ஸ்

  •  CTRL கீ மற்றும் மவுஸ் நடுவில் உள்ள உருளையை மேலே/கீழே நகர்தவும்( CTRL + Mousewheel up/down ) உங்கள் பான்ட்டின் அளவினை கூட்டவோ அல்லது குறைக்கவோ உதவுகின்றது..
  • நீங்கள் சேட்(chat) செய்து கொண்டிருக்கும் போது அந்த நபருக்கு மெயில் அனுப்ப வேண்டும் என நினைத்தால் F9 கீயை(key) அமுத்தவும்..இது உங்களை ஜிமெயிலுக்கு அழைத்து சென்று அந்த நபருக்கு மெயில் அனுப்பும் விண்டோ திறக்கப்படும்..
  • நீங்கள் தற்போது சேட் செய்யும் விண்டோவை மூட வேண்டுமா அப்படியே ESC கீயை(key) அமுத்தினால் போதும் விண்டோ மூடப்பட்டுவிடும்..
  • நீங்கள் ஒரு நபருக்கு மேற்பட்டோருடன் ஒரே சமயத்தில் சேட்(chat) செய்து கொண்டிருக்கையில் ஒரு விண்டோவில் இருந்து மற்றோரு விண்டோவிற்கு தாவி செல்ல CTRL+I கீயை(key) அமுத்தவும்..