Tuesday, December 24, 2013

ஆன்லைன் ரீசார்ஜ்





கீழ்காணும் வெப்சைட்டை உபயோகித்து மொபைல் ரீசார்ஜ்( Recharge ), DTH ரீசார்ஜ், இன்டர்நெட் பில்(bill) போன்றவற்றை ஆன்லைன் மூலமாக கட்டலாம்.

https://www.freecharge.in
http://www.rechargeitnow.com/

Thursday, December 12, 2013

கேப்சர் டெஸ்க்டாப்

உங்கள் டெஸ்க்டாப்பில்(desktop) நீங்கள் செய்யும் வேலைகளை வீடியோவாக பதிவு(capture) செய்ய வேண்டுமா கீழ்காணும் இலவச சாப்ட்வேர்(free software) உங்களுக்கு உதவும். இதில் நேரடியாக யூடிப்ல்(youtube) அப்லோட் செய்யும் வசதியும் உண்டு.



மேலும் சில,





Thursday, December 05, 2013

வருகிறது மோட்டோரோலா ஜி


மோட்டோரோலா மோட்டோ ஜி Motorola Moto G வரும் ஜனவரி 2014ல் இந்தியாவில் வெளியீடு.
  • பிராசசர்  - Qualcomm Snapdragon 400 processor with 1.2 GHz quad-core CPU
  • டிஸ்பிளே - 4.5 inches diagonal (11.3 cm) 1280 x 720 HD, 329 ppi
  • ஆப்பரேட்டிங் சிஸ்டம் - Android 4.3 (Jelly Bean) பின் நாளில் 4.4(Kit Kat) பதிப்புக்கு உத்திரவாதம்.
  • 5MP கேமரா
  • உள்கட்ட நினைவகம் 8/16 GB 1GB RAM
  •  கூகிள் டிரைவ் - Google Drive (50 GB storage)
  • விலை ரூபாய் 15000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 மோட்டோரோலாவை கூகுள் வாங்கிவிட்டதால் தரமான மொபைல் போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tuesday, December 03, 2013

Wi-Fi Direct என்றால் என்ன?

 Wi-Fi P2P என முதலில் அழைக்கப்பட்டது. இது பல Wi-Fi சாதனங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்துகொண்டு தகவல்களை பரிமாரிக் கொள்ள உதவுகின்றது. முக்கியமான விஷயம் என்னவென்றால் இதற்கு இணைய இணைப்பு தேவை இல்லை. சாதனங்களில் Wi-Fi Direct/Wi-Fi வசதி இருந்தாலே போதுமானது. 

மொபைல் போன்கள், பிரின்டர்கள்(printers), கேமரா, கம்ப்யூட்டர், விளையாட்டு சாதனங்கள்(PS3) போன்றவை ஒன்றோடு ஒன்று தங்களுக்குள் இணைந்து தகவல்கள்(datas), அப்ளிகேசன்கள்(applications), பைல்கள்(files) போன்றவற்றை பகிர்ந்து கொள்ள முடியும்.

எதிர்காலத்தில் இந்த வசதி மூலம் வீட்டின் விளக்குகளை மொபைலின் மூலம் அணைக்கவோ எரியவைக்கவோ இயலும்..இதுபோல பல விஷயங்கள் இந்த தொழில்நுட்பத்தில் உள்ளன..வருங்காலம் இந்த தொழில்நுட்கத்தை உபயோகித்து பயன்பெறும் என்பதில் ஐயமில்லை..
இந்த பயனை குறிக்கும் வீடியோ இதோ..



Wi-Fi Direct சாதனம் WPA2™ என்னும் பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் இயங்குவதால் தகவல் பாதுகாப்பு குறித்து கவலைபட தேவை இல்லை.

Wi-Fi Direct உள்ள மொபைல் போன்கள்,
Samsung Galaxy S3,S4
LG Nexus 5

Thursday, November 21, 2013

புதிய அப்ளிகேஷன் - லொக்கேஷன் சர்ச் 1.0

Location Search 1.0
இந்த அப்ளிகேஷன் நீங்கள் தற்போது இருக்கும் இடத்தின் முகவரியை கொடுக்கும்.. அதாவது தெரு பெயர் ஊர் பெயர் பின் கோடு மற்றும் மாவட்டத்தின் பெயரையும் காட்டும். அதுமட்டுமல்லாமல் உங்கள் தற்போதைய மொபைல் இருப்பிடத்தை கூகுள் மேப்பில் சிறிய அளவில் படமாக காட்டும்.

முகவரியை உடனடியாக அறிய பதுப்பித்தல்(Refresh) வசதியும் உள்ளது

டவுன்லோட் செய்ய,
https://play.google.com/store/apps/details?id=com.vijaynetwork.locationsearch

Monday, September 23, 2013

கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி-9

back tracking - பின் நகர்தல்
background - பின்னணி
background color - பின்னணி வண்ணம்
background job -  பின்னணி பணி
background noise - பின்னணி இரைச்சல்
background processing - பின்னனிச் செயலாக்கம்
background program - பின்னணி நிரல்
backing store - காப்புப் பதிவகம்
backing up - காப்பு எடுத்தல்
backup - காப்பு
backup copy - காப்பு நகல்
backvolume - முன்தொகுதி

Sunday, September 08, 2013

தமிழ் பங்குச்சந்தை

இந்திய பங்கு சந்தை பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்ள இந்த முகபுத்தக பக்கம்(facebook page) துவங்கப்பட்டுள்ளது..

லிங்க்:
தமிழ்-பங்குச்சந்தை

விருப்பம் உள்ளவர்கள் லைக்(like) பட்டனை கிளிக் செய்து இணைந்து கொள்ளலாம்.. நாட்டு நடப்பு,எந்த பங்குகளை வாங்கலாம் விற்கலாம்,கம்பெனிகளை பற்றிய செய்திகள்,தங்கம் விலை,டாலர் விலை, சந்தையை பாதிக்கும் காரணிகள், மற்ற பிற சந்தை தொடர்பான செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம்....

புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்


கைபேசி மற்றும் சிம் கார்டின் தகவல்களை காண இந்த அப்ளிகேஷன் உதவுகின்றது..

https://play.google.com/store/apps/details?id=com.vijaynetwork.mobilenetworkinfo

பதிப்பு: 1.0

Sunday, August 18, 2013

யூடியுப் விளம்பரங்களை தடை செய்ய

யூடியுப்பில்(youtube) வீடியோ ஓடும் போது குறுக்கே வரும் விளம்பரங்கள் இடையூறு செய்கின்றதா? கூகிள் குரோம் பிரவுசர் உபயோகிப்பவரா நீங்கள்?குரோம் பிரவுசர்கென ஒரு யெக்டென்ஸன்(extension) உள்ளது. அதுதான் ஆட்பிளாக் பிளஸ்(Adblock plus). இதை கூகிள் குரோம் பிரவுசரில் இன்ஸ்டால் செய்தால் போதுமானது..இதுவே வீடியோ ஓடும் போது வரும் விளம்பரங்களை தடுத்துவிடும். விளம்பர தொந்தரவின்றி வீடியோ பார்க்கலாம்..

லிங்க்
https://chrome.google.com/webstore/detail/adblock-plus/cfhdojbkjhnklbpkdaibdccddilifddb?hl=en-US

Tuesday, July 23, 2013

பேப்ளேட்(Phablet) என்றால் என்ன?

திரை அளவு 5 முதல் 7 இன்ச் வரை உள்ள ஸ்மார்ட் போன்களே பேப்ளேட்(Phablet) என அழைக்கப்படுகின்றன. இது ஸ்மார்ட் போன்(Smart Phone) மற்றும் டேப்லெட்ன்(Tablet) அனைத்து சிறப்புகளையும் கொண்டது. அதாவது ஸ்மார்ட், டேப்லெட் என இரண்டு வெவ்வேறு வகையான சாதனங்களை உபயோகிப்பதை தவிர்க்கவே வந்ததுதான் பேப்ளேட்.

இனி நீங்கள் வாங்கப்போவது பேப்ளேட் தானே??!!


  • Samsung Galaxy Note
  • Nokia N810
  • Dell Streak

Sunday, July 21, 2013

Auxus Nuclea N1 முன்பதிவு

சிறப்புகள்:

  • 5 இன்ச் FULL HD டிஸ்பிளே
  • 1.5GHz குவார்ட் கோர் டர்போ பிராசசர்
  • கொரில்லா கிளாஸ்3
  • 13MP கேமரா
  • 8MP முன்பக்க கேமரா
  • ஆன்ட்ராய்ட் 4.2
  • இரட்டை சிம் வசதி
  • விலை 15990 ரூபாய்

வெப் லிங்க்

Friday, July 05, 2013

அமேஸான் இந்தியா

ஜீன் மாதத் தொடக்கத்தில் செயல்படத் தொடங்கிய அமேஸான் இந்தியா டாட் இன்(amazon.in) இணைய வர்த்தகத் தளத்தில், மொபைல் போன்களும் அவற்றிற்கான துணை சாதனங்களும் விற்பனைக்கு இடம் பெற்றுள்ளன. நோக்கியா, எச்.டி.சி., மைக்ரோமேக்ஸ், பிளாக்பெரி, சாம்சங், ஸென்ஹெய்சர் போன்ற நிறுவனங்களின் மொபைல் போன்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றுடன்,

 டேப்ளட் பிசிக்கள்( Tablet PC ), போர்ட்டபிள் மீடியா பிளேயர்கள், கேமராக்கள் மற்றும் போட்டோகிராபி சார்ந்த துணை சாதனங்களுடன் இடம் பெற்றுள்ளன. ஏறத்தாழ, 200 நிறுவனங்களிடமிருந்து, 20 ஆயிரம் சாதனங்கள் விற்பனைக்குப் பட்டிலிடப்பட்டுள்ளன. வாங்கப்படும் பொருட்கள், வாடிக்கையாளர்களின் வீடுகளிலேயே வழங்கப்படும் வசதி, வாங்கப்பட்ட பொருட்கள், வீடுகளுக்கு அனுப்பப் படும் வழியைக் கண்காணிக்கும் வசதி, பொருட்கள் பிடிக்கவில்லை எனில் திரும்ப அளிப்பதற்கான வசதி போன்ற அமேஸான் இணையதளம் வழக்கமாக தரும் அனைத்து வசதிகளையும், இந்த தளத்தில் தங்கள் பொருட்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்கள் தருகின்றன. தொடக்கத்தில், நூல்கள் மற்றும் திரைப்படங்கள் மட்டுமே இந்த தளத்தில் விற்பனைக்கு இருந்தன. 

தொடக்க காலச் சலுகையாக, குறிப்பிட்ட மொபைல் போன் மாடல்களுக்கு, அமேஸான் 10 சதவித விலை தள்ளுபடி அளிக்கிறது. ஒருவருக்கு ஒரு மொபைல் போனுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி கிடைக்கும். சில டிஜிட்டல் கேமராக்களுக்கு 15 சதவீதத் தள்ளுபடி தரப்படுகிறது.



Wednesday, June 19, 2013

ஆபிஸ் மொபைல்

மைக்ரோ சாப்ட் நிறுவனம் ஆப்பிள் ஐ-போன்க்கு என தனித்துவம் வாய்ந்த அப்பிளிகேஷனை தயாரித்துள்ளது. அதுதான் ஆபிஸ் மொபைல்(Office Mobile). இதனை  உபயோகிக்க  “ஆபிஸ் 365“ல் தனி கணக்கு வைத்திருக்க‌ வேண்டும். இந்த வசதி 1 மாதத்திற்கு இலவசமாகவும் அதற்கு மேல் பணம் கட்டி தொடரவும் என மைக்ரோசாப்ட் கூறுகின்றது. இந்த அப்ளிகேஷன் மூலம் மைக்ரோசாப்ட் வேர்டு(MS-WORD),   மைக்ரோசாப்ட் பவர்பாய்ண்ட்(POWER POINT), எக்ஸல் ஷீட்(EXCEL SHEET) என அனைத்தையும் ஐ-போன் வழியாக உபயோகிக்கலாம்.

ஆபிஸ் 365 கணக்கு தொடங்க

அப்ளிகேஷன்

கீழ்காணும் ஆப்பிள் சாதனங்கள் மட்டும் இந்த அப்ளிகேஷனை உபயோகிக்கமுடியும்.

  • iPhone 4
  • iPhone 4S
  • iPhone 5
  • iPOD Touch( 3,4,5 generation )
  • iPad mini
  • IOS 6.1


இது போக மைக்ரோசாப்ட் ஆப்பிள் சாதனங்களுக்கென கீழ்காணும் அப்ளிகேஷன்களை தயாரித்துள்ளது..

  • skydrive
  • microsoft onenote
  • photo synth
  • wordament

Saturday, June 08, 2013

கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி-8

auxiliary equipment - துணைக் கருவி
auxiliary function - துணை செயல்கூறு
auxiliary memory - துணை நினைவகம்
auxiliary operation - துணைச் செயல்பாடு
auxiliary storage - துணைத் தேக்ககம்
availability - கிடைத்தல்
available time - கிடைக்கும் நேரம்
average search length - சராசரித் தேடு நீளம்
axes - அச்சுகள்
babble - பிறழ்ச்சி
back panel - பின்புறப் பலகம்
back plane - பின்தளம்
back space - பின்நகர்வு

Thursday, May 16, 2013

முதல்வர் கணினித் தமிழ் விருது

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, கணினித் தமிழுக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குவோருக்கு, "முதல்வர் கணினித் தமிழ் விருது" வழங்கப்படும். இவ்விருது, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை கொண்டிருக்கும்.

Friday, May 10, 2013

சிறந்த போட்டோ வெப்சைட்ஸ்


www.shutterfly.com

  • அளவற்ற போட்டோ சேமிக்க இலவச இடம்
  • போட்டோ பிரிண்ட்( photo print )
  • வெப் ஆல்பம்


  • போட்டோ பிரிண்ட்( photo print )
  • அளவற்ற போட்டோ சேமிக்க இலவச இடம்
  • வெப் ஆல்பம்

http://www.photobucket.com/

http://www.smugmug.com/

http://picasa.google.com/


Saturday, February 23, 2013

டவுன்லோட் லிங்க்

‌இங்கே எந்த ஒரு டவுன்லோட் லிங்கையும்( வீடியோ,ஆடியோ,பைல்.. ) உள்ளீடாக கொடுத்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்..

http://www.file2hd.com/

Thursday, February 07, 2013

உங்களுக்கு தமிழில் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் வேண்டுமா?

இந்த லிங்கை கிளிக் செய்து அது என்ன என்று கூறுங்கள்..

https://docs.google.com/forms/d/1eRPic7cTzfVR4vx3NOD1DDMj8DiFxBqb7yGJqfP6xns/viewform

நீங்கள் விரும்பும் அப்ளிகேஷன் சாத்தியம் என்றால் உங்களுக்கு விரைவில் கிடைக்கலாம்..

அதிகம் விரும்பப்படும் தமிழ் ஆன்ராய்டு அப்ளிகேஷன் வெளியிட இது உதவும்..

நன்றி..

Friday, January 11, 2013

ஐ பெர்ரி அறிமுக சலுகை Auxus CoreX2 3G


 விலை ரூபாய் 10,990.

iberry சிறப்பம்சங்கள்
  • 3G அழைப்பு
  • ஆன்ட்ராய்டு 4.1
  • 7 இஞ்ச் 1280x800 தொடுதிரை
  • 1.6 GHz Dual Core Arm Cortex A9 பிராசஸர்
  • 1GB RAM நினைவகம்
  • 8GB உள்ளியக்க நினைவகம்
  • 2MP கேமரா
  • AGPS
  • IPS Display
  • USB
திரையின் காட்சியமைப்பு தெளிவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கேமிரா 2MP என்பதை தவிர 10990 ரூபாய்க்கு  நேர்த்தியான சிறப்பம்சங்களை கொண்டுள்ள பட்ஜெட் டேப்லெட் என்றே கூறலாம். 

http://www.facebook.com/iberryindia
http://deals.ebay.in/deals/iberry.html

கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி-7

automata - தன்னியக்க எந்திரங்கள்
automated data processing - தன்னியக்கத் தரவு செயலாக்கம்
automated flow chart -  தன்னியக்கச் செயல்வழிப் படம்
automatic - தன்னியக்க
automatic carriage - தன்னியக்க ஏற்றி
automatic check - தன்னியக்கச் சரிபார்ப்பு
automatic coding - தன்னியக்கக் குறிமுறையாக்கம்
automatic controller - தன்னியக்கக் கட்டுப்படுத்தி
automatic digital network - தன்னியக்க லக்க வலையமைப்பு
automatic error correction - தன்னியக்க பிழைதிருத்தம்
automatic message switching - தன்னியக்கச் செய்தி மாற்றம்
automatic quality control - தன்னியக்கத் தர கட்டுப்பாடு
automatic shutdown - தன்னியக்கப் பணி நிறுத்தம்
automatic teller machine - தன்னியக்கக் காசளிப்பு எந்திரம்
automation - தன்னியக்க முறை
automonitor - தன்னியிக்கக் கண்காணிப்பு
autopilot -  தன்னியிக்க வலவன்
autoscore - தன்னியிக்க அடிகோடிடல்