Wednesday, October 22, 2014

கூகுள் மெயில் 5.0

கூகுளின் ஜி-மெயில் வசதி பற்றி அனைவருக்குமே தெரிந்திருக்கும். தற்போது கூகுள் நெக்சஸ் போனில் ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த இருக்கும் கூகுள். அதன் ஜி-மெயில் வசதியிலும் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

கூகுளிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகத நிலையில் ஜி-மெயிலின் புதிய மாற்றங்கள் குறித்த தகவல்கள் ஒரு குறும் வீடியோ பதிவாக வெளியாகியுள்ளன. இந்த வீடியோ பதிவின் படி கூகுள் மெயிலான ஜி-மெயிலுக்காக தனி ஆப்ஸ் ஒன்றை கூகுள் உருவாக்கியுள்ளது. இதில் மற்ற மின்னஞ்சல் சேவைகளான யாகூ, ஹாட்மெயில் போன்றவற்றில் ஒருவர் வைத்திருக்கும் கணக்குகளையும் இணைத்துக்கொள்ள முடியும்.

இதன் மூலம் ஒரே ஆப்ஸில் அனைத்து இ-மெயில்களயும் இணைத்து கொள்வதால் இந்த ஆப்ஸ் வாடிக்கையாளர்களை கவரும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பேரோ எனும் மல்டி மெயில் ஆப்ஸை கூகுள் விலைக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Wednesday, October 15, 2014

கூகிள் நெக்ஸஸ் 6 & 9 விரைவில் வருகிறது..

நெக்ஸஸ் 6 ஸ்மார்ட் போன்  மற்றும் நெக்ஸஸ் 9 டேப் (tab) விரைவில் வருகிறது..

http://www.google.com/nexus/9/

















http://www.google.com/nexus/6/




Thursday, October 09, 2014

ஆன்லைன் (தீபாவளி) விற்பனை


Flipkart, amazon,snapdeal, ebay ஆகிய வெப்சைட்டுகளில் தீபாவளி ஆன்லைன் விற்பனை படு சோராக நடந்து வருகின்றது. நிறைய தள்ளுபடி விலையில் தேவையான பொருட்கள் கிடைக்கின்றன.உங்களுக்கு தேவையானதை இத்தருணத்தை உபயோகித்து வாங்கிக்கொள்ளவும்.

அமேசான் வெப்சைட் அக்டோபர் 10 முதல் 16 வரை தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை நடத்தவுள்ளது.

ebay.in இன்னும் 4 நாட்களில்  சிறப்பு தள்ளுபடி விற்பனையை ஆரம்பிக்க உள்ளது.
http://deals.ebay.in/ebaydeals/index.php

http://www.amazon.in/gp/goldbox/ref=Weblab?pf_rd_p=536274927&pf_rd_s=nav-sitewide-msg&pf_rd_t=4201&pf_rd_i=navbar-4201&pf_rd_m=A1VBAL9TL5WCBF&pf_rd_r=1NHV3C3AY18W23BFRXPR

http://www.snapdeal.com/

Tuesday, October 07, 2014

ரூ.1.3 லட்சம் கோடிக்கு வாட்ஸ்அப்-ஐ வாங்குகிறது ஃபேஸ்புக்!


செல்போன் தகவல் பரிமாற்ற சேவை அளிக்கும் வாட்ஸ்அப் நிறுவனத்தை முன்னணி சமூக இணைய தளமான ஃபேஸ்புக் வாங்குகிறது.

அதன்படி, வாட்ஸ்அப்-ஐ சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க ஃபேஸ்புக் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதோடு, ஃபேஸ்புக் தனது இயக்குனர் வாரியத்தில் வாட்ஸ்அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜான் கோம் இடம்பெறச் செய்துள்ளது.

வாட்ஸ்அப்-ஐ வாங்கும் விருப்பத்தை கடந்த பிப்ரவரி மாதத்திலேயே ஃபேஸ்புக் அறிவித்திருந்தது. அதன்பிறகு, இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி விலையை முடிவு செய்யும் நடைமுறை இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

ஃபேஸ்புக் ஏற்கனவே உலகம் முழுவதும் பிரபலமான சமூக இணைய தளமாக உள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வாட்ஸ்அப் வேகமாக வரவேற்பை பெற்று வருகிறது.

Thursday, October 02, 2014

2015ல் விண்டோஸ் 10

வெகு காலமாக எதிர்பார்த்திருந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ்9 விரைவில் விண்டோஸ்10 ஆக வெளியிடப்பட இருக்கிறது. விண்டோஸ்-10, 2015ம் ஆண்டில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐ.ஓ.எஸ்.8

தன் புதிய ஐபோன்களை வெளியிட்டதனைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம், ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் பயன்படுத்த, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐ.ஓ.எஸ்.8 னையும் வெளியிட்டது. சென்ற ஜூன் மாதத்தில் நடந்த, தன் உலகளாவிய டெவலப்பர் கருத்தரங்கில், ஆப்பிள் புதிய மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த தகவலை வெளியிட்டது. சென்ற செப்டம்பர் 17ல், புதிய ஐ.ஓ.எஸ். 8 சிஸ்டத்தினை, தன் வாடிக்கையாளர்கள் தரவிறக்கம் செய்திட தந்தது. வழக்கம் போல, இது இலவசமாகவே கிடைக்கிறது.

2013 ஆம் ஆண்டில், ஐ.ஓ.எஸ். 7 வெளியான போது, அது ஆப்பிள் நிறுவனத்தின், ஐபோன், ஐபாட் டச் மற்றும் ஐ பேட் சாதனங்களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மிகப் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தது. இப்போது வந்திருக்கும் ஐ.ஓ.எஸ்.8, அந்த அளவிற்கு புதிய மாற்றங்களைத் தரவில்லை என்றாலும், பல புதிய வசதிகளைத் தந்துள்ளது.