Tuesday, February 25, 2014

நோக்கியா + ஆன்ட்ராய்டு

புதிய முயற்சியாக ஆன்ட்ராய்டு தொழில்நுட்பத்துடன் கூடிய நோக்கியா X, நோக்கியா X + ஆகிய இரண்டு 4 இன்ச் போன்களையும், நோக்கியா XL என்ற 5 இன்ச் போனையும் அறிமுகப்படுத்தவுள்ளது, இதன் விலை சுமார் 7500 ரூபாயில் தொடங்கி 10,000 ரூபாய் வரை இருக்கும் என அறிவித்துள்ளது.

http://www.gsmarena.com/nokia_announces_androidapp_running_nokia_x_and_nokia_x-news-7909.php

Sunday, February 23, 2014

யு டியூப் டிவி( Youtube TV )


யு டியூப்ல்(youtube) உள்ள வீடியோக்களை நீங்கள் உங்கள் லேப்டாப் அல்லது ஸ்மார்ட் டிவி மூலம் பிளே(play) செய்து பின் உங்கள் மொபைல் மூலம் அவற்றை கையாளலாம். அது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.

உங்கள் லேப்டாப்(laptop) அல்லது ஸ்மார்ட் டிவியில்(Smart TV) கீழ்காணும் முகவரிக்கு செல்லவும்( வெப் பிரவுசர் மூலம் ),
https://www.youtube.com/tv

பின்பு இடது புறத்தில் Settings உள்ள ஐக்கானை கிளிக் செய்யவும்.

கீழ்காணும் விண்டோ காட்டப்படும்.அதை கிளிக் செய்யவும்


அதில் உங்கள் டிவைசை(device( tablet, smart phone, laptop ) இணைக்க கோடு(Pair code) காட்டப்படும். மேலும் ஒரு லிங்க்(youtube.com/pair) கொடுக்கப்படும்.


இந்த லிங்கை(youtube.com/pair) உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள பிரவுசர் மூலம் திறக்கவும். அது  உங்களிடம் லேப்டாப்பில் அல்லது ஸ்மார்ட் டிவியில் காட்டப்பட்ட கோடினை(pair code) தரும்படி கேட்கும்.
அவ்வாறு நீங்கள் அந்த கோடை தரும் பட்சத்தில் லேப்டாப் அல்லது ஸ்மார்ட் டிவின் யு டியூப் வீடியோகளை நீங்கள் மொபைல் போனில் இருந்து கையாளலாம்(அடுத்த வீடியோக்கு செல்வது, வீடியோகளை நிறுத்த, பிளே(play) செய்ய, வீடியோகளை தற்காலிகமாக நிறுத்த).
அதாவது கிட்டதட்ட ஒரு ரிமாட் கன்ரோல் போல் உங்கள் ஸ்மார்ட் போனானது செயல்படும்.

இதற்கு தேவை இன்டர்நெட் இணைப்பு மட்டுமே.ஒரு டிவைசை இன்னொரு டிவைசுடன்(device) இணைத்து நாம் பயன்பெறுகின்றோம்.இந்த டெக்னாலேஜ்க்கு யுடியூப் லீன்பேக்( youtube leanback) என பெயர்.

Monday, February 10, 2014

கம்ப்யூட்டர் சரித்திரம்


1956ம் ஆண்டு, ஐ.பி.எம். நிறுவனம் தன்னுடைய IBM 305 RAMAC என்ற சிஸ்டத்தில் மிகப் பெரிய அளவிலான கொள்ளளவுடன் கூடிய ஹார்ட் டிஸ்கினை இணைத்து அறிமுகப்படுத்தியது. இந்த மிகப் பெரிய கொள்ளளவு எவ்வளவு தெரியுமா? 5 எம்.பி( MB ). அப்போது அது உண்மையிலேயே மிகப் பெரிய அளவிலான திறன்தான். ஒரு எம்.பி டேட்டா கொள்ளளவிற்கு 10ஆயிரம் டாலர்( 10,000 USD) விலை எனக் குறிக்கப்பட்டது. இதன் திட அளவு இரண்டு ரெப்ரிஜிரேட்டர் அளவிற்கு இருந்தது. இதில் 24 அங்குல அளவுள்ள 50 பிளாட்டர்கள்(plotters) இருந்தன.