Thursday, April 16, 2015

கூகுள் பைபர் & காம் காஸ்ட் கிகாபிட் ப்ரோ 2Gbps வேகம்

கூகுள் நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளாக, ”கூகுள் பைபர்” என்ற திட்டத்தின் அடிப்படையில், விநாடிக்கு 1 கிகா பிட் வேகத்தில் இணைய இணைப்பினை அமெரிக்காவில் தேர்ந்தெடுத்த சில நகரங்களில் வழங்கி வருகிறது. 2012 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கான்சஸ் நகரத்தில் அறிமுகமாகி, தற்போது 35 நகரங்களுக்கு மேல் இணைப்பினை வழங்கி வருகிறது. இதன் வேகம் விநாடிக்கு 1 கிகா பிட் அளவாகும். இந்த அளவில், இணைய இணைப்பு மற்றும் இணைய இணைப்பின் வழி டி.வி. ஒளிபரப்பு ஆகியவை தரப்படுகின்றன. 
அமெரிக்காவில், இணைய இணைப்பு வழங்கி வரும் காம் காஸ்ட் (Comcast) என்னும் நிறுவனம், தற்போது கூகுள் நிறுவனத்தின் ”கூகுள் பைபர்” போல ”கிகாபிட் ப்ரோ” (Gigabit Pro) என்ற பெயரில் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. முதன் முதலில் ஜியார்ஜியா மாநிலத்தில் உள்ள அட்லாண்டா நகரில் இது அறிமுகமாகிறது. 
இதன் அடிப்படையில், விநாடிக்கு 2 கிகா பிட்ஸ் வேகத்தில், இணைய இணைப்பு வழங்கப்படும். பைபர் இழை மூலம் வீடுகளுக்கு நேரடியாக இணைப்பு வழங்கப்படும். இந்த ஆண்டு முடிவிற்குள், அட்லாண்டா நகரில் 1 கோடியே 80 லட்சம் வீடுகளை இத்திட்டத்தின் கீழ் கொண்டு வர, காம் காஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. காம்காஸ்ட் இதற்கான கட்டணம் குறித்து எந்த அறிவிப்பும் தரவில்லை.
கூகுள் பைபர் திட்டத்தின் கீழ், மாதம் 70 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது காம் காஸ்ட் நிறுவனம் வழங்கும் இணைய இணைப்பிற்கு 505Mbps வேகத்திற்கு 400 டாலர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 
ஆனால், புதிய கிகாபிட் ப்ரோ திட்டத்தில் அந்த அளவிற்குக் கட்டணம் இருக்காதென்றும், தற்போது வீடுகளில் இணைப்பு வைத்திருப்பவர்கள், தானாகவே கிகாபிட் ப்ரோ திட்டத்திற்க்கு மாற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

எக்ஸெல் - ஆல்ட்+ஷிப்ட் ஷார்ட் கட்


F1 +ALT+SHIFT : புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும்.
F2 +ALT+SHIFT :அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும்.
F3 +ALT+SHIFT :நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம்.
F6 +ALT+SHIFT :ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக் விண்டோக்கள் திறக்கப்பட்டிருப்பின் தற்போதைய ஒர்க்புக்கிற்கு முந்தைய ஒர்க்புக் விண்டோ திறக்கப்படும்.
F9 +ALT+SHIFT: திறந்திருக்கும் அனைத்து ஒர்க்ஷீட்களிலும் அனைத்து ஒர்க் புக்குகளிலும் அனைத்து கால்குலேஷன்களும் செயல்படுத்தப்படும்.
F10 +ALT+SHIFT: ஸ்மார்ட் டேக்கிற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட் டேக் திறக்கப்பட்டிருந்தால் அடுத்த டேக் சென்று அதற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும்.
F11 +ALT+SHIFT: மைக்ரோசாப்ட் ஸ்கிரிப் எடிட்டர் திறக்கப்படும்.
F12 +ALT+SHIFT : பிரிண்ட் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.