Monday, February 23, 2015

பேஸ்புக் 'Legacy Contact'

சமூக இணைய தளமாகிய பேஸ்புக், அண்மையில், 'Legacy Contact' என்னும் டூல் ஒன்றைப் புதியதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இத்தளத்தில் அக்கவுண்ட் வைத்துள்ள ஒருவர் இறந்தால், அவருடைய அக்கவுண்ட்டினை, அவரின் பக்கத்தினை நிர்வகிக்க ஒருவரை நியமிக்கும் வசதி தரப்பட்டுள்ளது.
நாமே நமக்கான வாரிசை நியமிக்கலாம். இவர் நம் பக்கத்தில் தகவல்களைப் பதியலாம்; நண்பர்களின் வேண்டுகோள்களை நிர்வகிக்கலாம். நம் முகப்பு பக்கம், அதில் உள்ள போட்டோக்கள் மற்றும் நாம் தேக்கி வைத்துள்ள தகவல்களை, இறந்தவர் சார்பாக நிர்வகிக்கலாம். ஆனால், அவர்கள் நாம் லாக் இன் செய்வது போல நம் பக்கத்தில் செல்ல முடியாது. நம் தனிப்பட்ட தகவல்களைப் படிக்க இயலாது. டைம்லைன் மற்றும் முன்பு நாம் இட்ட லைக் மற்றும் கமெண்ட்களைப் படிக்க முடியாது. 
பல வாடிக்கையாளர்கள், தாங்கள் இறந்த பின்னர், தங்களின் பக்கத்திற்கு என்ன கதி ஏற்படும் எனக் கவலைப் பட்டதால், இந்த ஏற்பாட்டினை பேஸ்புக் மேற்கொண்டுள்ளது என பேஸ்புக் நிறுவன வலை மனைப் பக்கத்தில் தரப்பட்டுள்ளது. 


To add a legacy contact:
  1. Click  in the top right of Facebook and select Settings
  2. In the left menu, click Security
  3. Click Legacy Contact
  4. Type in a friend's name and click Add
  5. Click Message to let your friend know they're now your legacy contact

Tuesday, February 03, 2015

வாட்ஸ் சிம்

உலகின் எந்த இடத்திலிருந்தும் வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்ப உதவிடும், வாட்ஸ் சிம் (WhatSim) என்ற ஒரு சிம் வெளியாகியுள்ளது. இந்த சிம் கார்ட், அதன் பயனாளர்கள், உலகில் உள்ள, 150 நாடுகளில் இயங்கும் 400 மொபைல் சேவை நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, இந்த சேவையைப் பெற்றுத் தருகிறது. இந்த சிம் கார்டின் விலை 10 யூரோ. மாதக் கட்டணம் அல்லது குறிப்பிட்ட காலக்கெடு என இந்த சிம் கார்டிற்குக் கட்டுப்பாடு இல்லை. 

இந்த வாட் சிம் கார்டை வடிவமைத்து, சேவைக் கட்டமைப்பினை வழங்குவது 'ஸீரோ மொபைல்' என்னும் இத்தாலிய தொலை தொடர்பு நிறுவனமாகும். மெசேஜ் அனுப்ப, இது வாட்ஸ் அப் போலவே இயங்குகிறது. ஆனால், படங்கள் அனுப்ப, பாடல்களை இணைத்து அனுப்ப, குரல் ஒலியைப் பதிவு செய்து அனுப்ப, கூடுதலாகக் கட்டணம் செலுத்த வேண்டும்.
மொபைல் சாதனங்கள் வழி மெசேஜ் அனுப்ப வாட்ஸ் அப் மிகச் சிறந்த அப்ளிகேஷனாக உள்ளது. இதனுடைய ஒரே கட்டுப்பாடு, டேட்டா தொடர்பு தான். குறிப்பாக நீங்கள் பயணத்தில் இருக்கையில், ரோமிங் கட்டணம் அதிகமாக இருக்கும். அதனால், வாட்ஸ் அப் வழி செய்தி அனுப்புவது செலவு அதிகம் கொள்ளும் இனமாக அமைந்துவிடும். மேலும், அனைத்து இடங்களிலும் வை பி வசதி கிடைக்கும் என நாம் உறுதி செய்திட முடியாது. மேலும், வை பி இலவசமாகவும் கிடைக்காது. 

இந்த பிரச்னைகளில் இருந்து விடுபடும் வழி குறித்து சிந்திக்கையில், இந்த அப்ளிகேஷன் மற்றும் சிம் கார்ட் யோசனை வந்ததாக, ஸீரோ மொபைல்ஸ் நிறுவனர் தெரிவித்துள்ளார்.