Thursday, December 22, 2016

இந்தியாவிற்கான 'போகிமான் கோ'

இந்தியாவுக்கான போகிமான் கோ விளையாட்டு அப்ளிகேஷன் கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கின்றது.

https://play.google.com/store/apps/details?id=com.nianticlabs.pokemongo

கூகுள் டாய்லட் லொக்கேட்டர்

டில்லி மற்றும் மத்திய பிரதேசத்தில், எங்கெங்கு பொது கழிப்பறைகள் உள்ளன என்பதை, 'கூகுள் டாய்லட் லொக்கேட்டர்' ஆப் மூலம் தெரிந்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, டாய்லெட்டைக் கண்டறியும், கூகுள் டாய்லட் லொக்கேட்டர் ‛ஆப்'பை வெளியிட்டார். பிரதமரின் ‛தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், திறந்த வெளியில் இல்லாமல், பொது கழிப்பறையை பயன்படுத்தும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த ஆப் வெளியிடப்பட்டுள்ளது. 6,200 பொதுக் கழிப்பறைகள் எங்கெங்கு உள்ளன விபரங்கள் தரப்பட்டுள்ளது. டில்லி மற்றும் ம.பி.,யில் மட்டும் உள்ள கழிப்பறைகள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம், விரைவில் மற்ற மாநிலங்களுக்கும் விரிவு படுத்தப்பட உள்ளது.




Saturday, December 17, 2016

ஜிபோர்டு

கூகுள் கீபோர்டுடன் கூகுள் சர்ச் எஞ்சினையும் இணைத்து கூகுள் வெளியிட்டிருக்கும் புதிய கீபோர்டுதான் இந்த ஜிபோர்டு. இதன் மூலம் யூடியூப் வீடியோ லிங்க உட்பட, எந்த ஆப்பிலிருந்தும் கூகுள் சர்ச் செய்து பகிர முடியும். இனி மொபைல் கீபோர்ட்டில் இருந்தே கூகுள் சர்ச் செய்து கொள்ளலாம். ஆன்ட்ராய்ட் போன்களுக்கு மட்டுமே இந்த அம்சம்!

Thursday, December 15, 2016

ரூ.1.3 லட்சம் கோடிக்கு வாட்ஸ்அப்-ஐ வாங்குகிறது ஃபேஸ்புக்!

செல்போன் தகவல் பரிமாற்ற சேவை அளிக்கும் வாட்ஸ்அப் நிறுவனத்தை முன்னணி சமூக இணைய தளமான ஃபேஸ்புக் வாங்குகிறது.

அதன்படி, வாட்ஸ்அப்-ஐ சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க ஃபேஸ்புக் ஒப்பந்தம் செய்துள்ளது. அதோடு ஃபேஸ்புக் தனது இயக்குனர் வாரியத்தில் வாட்ஸ்அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜான் கோமை இடம்பெறச் செய்துள்ளது.

Saturday, November 19, 2016

ரூ.1000-க்கு 4ஜி ஸ்மார்ட் போன் - ஜியோ

ஜியோ அடுத்த அதிரடியாக ரூ.1000-க்கு 4ஜி ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனுடன் இலவச வாய்ஸ் கால்ஸ்களும் வழங்கப்படுகிறது. மேலும், இதனுடன் இலவச வீடியோ கால்ஸ்களும் வழங்கப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி ஜியோ ரூ.1000-க்கு ஜியோ ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தும் பட்சத்தில் இது ஸ்மார்ட் போன் சந்தையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Wednesday, November 16, 2016

போட்டோ ஸ்கேன்

போட்டோக்களை அதன் இயல்பு தன்மை மாறாமல் ஸ்கேன் செய்வதற்கு கூகுள் நிறுவனம் 'போட்டோ ஸ்கேன்' என்ற புதிய ஆப் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப், ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களில் இலவசமாக கிடைக்கின்றது. ஸ்கேன் செய்ய வேண்டிய புகைப்படங்களை ஐந்து இடங்களில் படம் பிடித்து, ஒன்றாக இணைப்பதால், இதில் வழக்கமாக போனின் மூலம் படம் பிடித்தால் வரும் 'கிளாரிட்டி' இருக்காது.

லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.photos.scanner


Monday, November 07, 2016

பேஸ்புக் - வேலை தேடல் அறிமுகம்

பேஸ்புக் நிறுவனம், லிங்ன்டின் (LinkedIn) போன்ற வேலைவாய்ப்பு தளங்களுக்கு போட்டியாக களமிறங்க உள்ளது. இது குறித்து ஃபேஸ்புக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஃபேஸ்புக் பேஜ் அட்மின்கள் இனி வேலை வாய்ப்புகளை பற்றி பேஸ்புக் பக்கங்களில் அறிவிக்கவும், வேலைக்கான விண்ணப்பங்களை ஃபேஸ்புக் பேஜ் மூலமாகவே பெற்றுக் கொள்ளவும் ஃபேஸ்புக் நிறுவனம் வழி வகுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது இந்த அம்சம் சோதனை கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

Monday, October 17, 2016

கம்ப்யூட்டர் உபயோகித்த நேரம்

விண்டோஸில் கம்ப்யூட்டர் எவ்வளவு நேரம் 'ஆன்' செய்து இருந்தோம்( உபயோகித்த நேரம் ) என தெரிந்து கொள்ள வேண்டுமா?

விண்டோஸ் டாஸ்க் மேனேஸர்( Task Manager ) இதற்கு உதவுகின்றது


மேற்கண்ட படத்தின் படி 3:32 மணி நேரம் 42 வினாடிகள்.

Thursday, September 08, 2016

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7+


ஐபோன் 7, 32 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் குறைந்தபட்ச மாடலின் விலையாக $649வும், அதிகபட்ச மாடலின் விலை $849 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் முறையே சுமார் 43 ஆயிரம் மற்றும் 56 ஆயிரமாக இருக்கும். 
இதேபோல் ஐபோன் 7 பிளஸ் மாடலும் 32 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஆகிய வகைகளில் கிடைக்கிறது. இதன் குறைந்தபட்ச மாடலின் விலையாக $769வும், அதிகபட்ச மாடலின் விலை $969 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் முறையே சுமார் 51ஆயிரம் மற்றும் 64 ஆயிரமாக இருக்கும் 

டிஸ்ப்ளே( Display ):
ஐபோன்  7,
4.7” அங்குல ரெட்டினா எச்டி டிஸ்ப்ளேயுடன் 3டி தொடுதிரை கொண்டது. இதன் தடிமன் 7.1 மி.மீ.
ஐபோன் 7 ப்ளஸ் மாடல்
5.5” அங்குல ரெட்டினா எச்டி டிஸ்ப்ளேயுடனும் 3 டி தொடுதிரையுடனும் வெளிவந்துள்ளது. இதன் தடிமன் 7.3 மி.மீ ஆகும்

எடை( weight ):
ஐபோன் 7 138 கிராம் எடையும் 7 ப்ளஸ் 188 கிராம் எடையும் கொண்டுள்ளது.

பிராசஸர் ( Processor ):
ஐபோன் 7மற்றும் 7 ப்ளஸ் ஆகிய இரண்டும் 4 ஜிபி ரேம் நினைவகத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிளின் பிரத்யேகமான “A10 பியூசின்”  சிப்கள் முதல் முறையாக இந்த இரண்டு மாடல்களிலும் பொருத்தப்பட்டுள்ளன. 
மேலும் இது 2.4GHz பிராசஸர் கொண்டுள்ளதால் அதிக அளவிலான ஆஃப்களை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். அதே போன்று இந்த மேம்படுத்தப்பட்ட பிராசஸரின் காரணமாக கடந்த மாடல்களைவிட அதிகளவு சார்ஜ் நிற்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கேமரா( Camera ):
ஐபோன் 7
12 MP பின்பக்க கேமராவும் 7 MP HD முன்பக்க கேமராவும் கொண்டுள்ளது.
ஐபோன் 7 ப்ளஸ்
அதிக தூரத்தில் உள்ளதை படம் பிடிக்கும் வகையில் இரண்டு 12 MP பின்பக்க கேமராவும் 7 MP HD  முன்பக்க செல்ஃபி கேமராவும் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட டிஎஸ்எல்ஆர் கேமராவிற்கு இணையான புகைப்படங்களை எடுக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 

பேட்டரி( Battery ):
3ஜி நெட்ஒர்க்கில் 7எஸ் மாடலில் 14 மணி நேரமும்
7எஸ் பிளஸ் மாடலில் 21 மணி நேரமும் பயன்படுத்தும் வகையிலான பேட்டரியைக் கொண்டுள்ளது.
இரண்டு மாடல்களிலுமே நானோ சிம் கார்டு மட்டுமே பயன்படுத்த இயலும்.

Friday, July 15, 2016

பெர்­சனல் கம்ப்­யூட்டர் - சந்தை பங்களிப்பில் டாப் 5 பிராண்ட்


லெனோவா( LENOVO ) 20.5%

எச்.பி., ( HP ) 19.1%

டெல் (DELL) 15.2%

ஏசஸ்( AZUS ) 7.3%

ஆப்பிள்( APPLE ) 7.1%

Tuesday, May 24, 2016

‘ஆலோ’, ‘டியோ’ கூகுள் அதிரடி!


ஃபேஸ்புக், வாட்ஸ் அப்க்கு போட்டியாக ‘ஆலோ’, ‘டியோ’ என இரு ஆப்களை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். இரண்டே ஆப்கள் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என வைத்துக்கொண்டு மொத்த டெக்னாலஜி உலகையும் ஆண்டுகொண்டிருக்கிறார் சூக்கர்பெர்க். ஒரு காலத்தில் உலகையே வியக்கவைத்துக் கொண்டிருந்த கூகுளால் சும்மா இருக்க முடியவில்லை.

மெசேஜிங் ஆப்பான ‘ஆலோ’வில் ,தற்போது வாட்ஸ் அப்பில் அப்டேட் ஆகியிருக்கும் மெசேஜ்களை பாதுகாக்கும் ‘என்கிரிப்ஷன்’ வசதியோடு, நமக்கு வரும் மெசேஜ்களுக்கு தானாக ரிப்ளை(auto reply) செய்யும் ஆல்ஷன்களும் உள்ளன. இதன்மூலம் நாம் ரிப்ளை செய்ய டைப் செய்ய வேண்டிய அவசியம் கூட இருக்காதாம். யாரேனும் ‘ எப்படி இருக்கிறாய்?’ என்று கேட்டால், ‘நன்றாக இருக்கிறேன்’ என்ற பதில் ஒரு ஸ்மைலியோடு ஸ்கிரீனில் சஜெஷனாகக் காட்டும்.

மிக மோசமான சூழ்நிலையில் கூட துல்லியமான வீடியோ காலிங்
செய்ய உதவுவதே டியோ ஆப்பின் மிகப்பெரிய பலம். பிற ஆப்களைப் போல் கால் செய்து சில நேரம் கழித்து லோட் ஆகாமல், உடனுக்குடனேயே கால்கள் இணைக்கப்படுகின்றன. இதனால் வீடியோ காலிங் ஆப்களில் டுவோ ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு ஆப்களும் ஆன்டிராய்டு மற்றும் ஐ-ஓஸ் மொபைல் தளங்களில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் அளவிற்கு வெற்றி பெரும் அளவிற்குப் பெரிதாக இந்த ஆப்களில் ஏதுமில்லை என்கிறார்கள் கேட்ஜெட் கில்லாடிகள். 

சூக்கர்பெர்க்கின் ஐடியாவைத் தாண்டி கூகுளால் ஏதேனும் சாதிக்க முடியுமா? பொருத்திருந்து பார்க்கலாம்..


Monday, May 23, 2016

டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களுக்கும் வாட்ஸ் அப்

விண்டோஸ் இயக்கத்திற்கான புதிய வாட்ஸ் அப் செயலி ஒன்றை வாட்ஸ் அப் வெளியிட்டுள்ளது. இதன் மூலம், வாட்ஸ் அப் வாடிக்கையாளர்கள், டாகுமெண்ட்களைத் தங்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளலாம். பி.டி.எப். பைல்களையும் இதன் வழியே அனுப்பலாம். வாட்ஸ் அப் தளத்திற்கு, விண்டோஸ் இயக்கம் ஒரு சிறந்த வழியாகும். ஏற்கனவே, விண்டோஸ் போன் இயக்கத்தில் இந்த வசதி தரப்பட்டிருந்தது. தற்போது, விண்டோஸ் சிஸ்டம் மட்டுமின்றி, மேக் கம்ப்யூட்டர்களிலும் இந்த வசதி தரப்பட்டுள்ளது. இவற்றை https://www.whatsapp.com/download என்கிற இணைய தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். 

Friday, May 20, 2016

பெங்களூரில் ஆப்பிள் டெவலப்மென்ட் சென்டர்

ஆப்பிள் ஐபோன் விற்பனையை அதிகரிக்க அதன் சிஇஓ டிம் குக் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இங்கு மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலுக்குச் சென்ற அவர் பின்னர் பெங்களூருவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் டிசைன் மற்றும் டெவலப்மென்ட் சென்டர் ஒன்றை நிறுவப் போவதாகக் கூறியுள்ளார்.

வரும் 2017-ம் வருடத்தின் தொடக்கத்தில் அந்த மையம் தொடங்க இருப்பதாகவும் கூறினார். முக்கியமாக அவர் இந்தியா வருகை தந்ததற்கு காரணமே ஆப்பிள் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதுதான். ஏனெனில் சீனாவில் ஆப்பிள் விற்பனைக் குறைந்துள்ளது.

உலகில் சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக ஸ்மார்ட் போன் புழக்கம் இந்தியாவில்தான் இருக்கிறது. எனவே ஆப்பிள் தனது சந்தையை விரிவுபடுத்த இந்தியாவைத் தேர்ந்தெடுத்துள்ளது.

Sunday, April 24, 2016

ஆண்ட்ராய்ட் போனுக்கான மைக்ரோசாப்ட் வேர்ட்( WORD )

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய வேர்ட் செயலியை, ஆண்ட்ராய்ட் போன்களில் பயன்படுத்தும் வகையில், கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாகத் தரவிறக்கம் செய்திடப் பதிந்து தந்துள்ளது. இதற்கு முன், வேர்ட் செயலி பயன்படுத்த விரும்பும் பயனாளர்கள், Microsoft Office Mobile என்னும் முழு செயலி தொகுப்பினையும் தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டியிருந்தது. இதில் Word, Excel மற்றும் PowerPoint என அனைத்து செயலிகளும், இணைந்து கிடைத்தன. இதுவும் ஒரு நல்ல செயலியாகவே இருந்தது. ஆனால், சில வேளைகளில், Office 365 கட்டணம் கட்டிப் பெற்றவர் மட்டுமே பயனாளர்களில் பலர், வேர்ட் மட்டுமே போதும் என விரும்பியதால், தற்போது வேர்ட் செயலி மட்டும் தனியே தரப்படுகிறது. 

Tuesday, March 22, 2016

புதிய ஆப்பிள் ஐபோன்


ஐபோன் எஸ்இ: IPHONE SE
64-பிட் ஆப்பிள் ஏ9 செயலி, 4 இன்ச் திரையுடன் 4k வீடியோ ரெக்கார்டிங், 1 ஜிபி ரேம், 12 மெகா பிக்சல் கேமரா, Hey Siri, லைவ் போட்டோ, 16 ஜிபி மற்றும் 32 ஜிபி சேமிப்பு, புளூடூத் (4.2), மேம்படுத்தப்பட்ட வை-பை, புதிய மைக்ரோ போன், பிங்கர் பிரிண்ட் சென்ஸாருடன் கூடிய ஆப்பிள் பே ஆகிய முக்கிய அம்சங்கள் உள்ளன.

இந்தியாவில் 16 ஜிபி போனின் விலை ரூ.39,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதல் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


ஐபாட் புரோ: IPOD PRO
9.7 இன்ஞ் ஐபாட் புரோ 12 மெகா பிக்சல் கேமரா, 4 ஜி.பி ரேம், ஸ்மார்ட் கீ போர்ட், 64-பிட் A9X செயலி, ட்ரு டோன் டீஸ்பிளே, iOS 9.3-ன் நைட் ஷிப்ட் வசதி, நான்கு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஆப்பில் பென்சில், 5 மெகா பிக்சல் முன்புற கேமரா போன்ற முக்கிய அம்சங்கள் 9.7 இன்ஞ் ஐபாட் புரோவில் அடங்கியுள்ளது. 32 ஜி.பி, 126 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி என மூன்று மாடல்களில் ஐபாட் புரோ வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.49,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.