Thursday, September 08, 2016

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7+


ஐபோன் 7, 32 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் குறைந்தபட்ச மாடலின் விலையாக $649வும், அதிகபட்ச மாடலின் விலை $849 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் முறையே சுமார் 43 ஆயிரம் மற்றும் 56 ஆயிரமாக இருக்கும். 
இதேபோல் ஐபோன் 7 பிளஸ் மாடலும் 32 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஆகிய வகைகளில் கிடைக்கிறது. இதன் குறைந்தபட்ச மாடலின் விலையாக $769வும், அதிகபட்ச மாடலின் விலை $969 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் முறையே சுமார் 51ஆயிரம் மற்றும் 64 ஆயிரமாக இருக்கும் 

டிஸ்ப்ளே( Display ):
ஐபோன்  7,
4.7” அங்குல ரெட்டினா எச்டி டிஸ்ப்ளேயுடன் 3டி தொடுதிரை கொண்டது. இதன் தடிமன் 7.1 மி.மீ.
ஐபோன் 7 ப்ளஸ் மாடல்
5.5” அங்குல ரெட்டினா எச்டி டிஸ்ப்ளேயுடனும் 3 டி தொடுதிரையுடனும் வெளிவந்துள்ளது. இதன் தடிமன் 7.3 மி.மீ ஆகும்

எடை( weight ):
ஐபோன் 7 138 கிராம் எடையும் 7 ப்ளஸ் 188 கிராம் எடையும் கொண்டுள்ளது.

பிராசஸர் ( Processor ):
ஐபோன் 7மற்றும் 7 ப்ளஸ் ஆகிய இரண்டும் 4 ஜிபி ரேம் நினைவகத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிளின் பிரத்யேகமான “A10 பியூசின்”  சிப்கள் முதல் முறையாக இந்த இரண்டு மாடல்களிலும் பொருத்தப்பட்டுள்ளன. 
மேலும் இது 2.4GHz பிராசஸர் கொண்டுள்ளதால் அதிக அளவிலான ஆஃப்களை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். அதே போன்று இந்த மேம்படுத்தப்பட்ட பிராசஸரின் காரணமாக கடந்த மாடல்களைவிட அதிகளவு சார்ஜ் நிற்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கேமரா( Camera ):
ஐபோன் 7
12 MP பின்பக்க கேமராவும் 7 MP HD முன்பக்க கேமராவும் கொண்டுள்ளது.
ஐபோன் 7 ப்ளஸ்
அதிக தூரத்தில் உள்ளதை படம் பிடிக்கும் வகையில் இரண்டு 12 MP பின்பக்க கேமராவும் 7 MP HD  முன்பக்க செல்ஃபி கேமராவும் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட டிஎஸ்எல்ஆர் கேமராவிற்கு இணையான புகைப்படங்களை எடுக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 

பேட்டரி( Battery ):
3ஜி நெட்ஒர்க்கில் 7எஸ் மாடலில் 14 மணி நேரமும்
7எஸ் பிளஸ் மாடலில் 21 மணி நேரமும் பயன்படுத்தும் வகையிலான பேட்டரியைக் கொண்டுள்ளது.
இரண்டு மாடல்களிலுமே நானோ சிம் கார்டு மட்டுமே பயன்படுத்த இயலும்.