Thursday, December 22, 2016

இந்தியாவிற்கான 'போகிமான் கோ'

இந்தியாவுக்கான போகிமான் கோ விளையாட்டு அப்ளிகேஷன் கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கின்றது.

https://play.google.com/store/apps/details?id=com.nianticlabs.pokemongo

கூகுள் டாய்லட் லொக்கேட்டர்

டில்லி மற்றும் மத்திய பிரதேசத்தில், எங்கெங்கு பொது கழிப்பறைகள் உள்ளன என்பதை, 'கூகுள் டாய்லட் லொக்கேட்டர்' ஆப் மூலம் தெரிந்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, டாய்லெட்டைக் கண்டறியும், கூகுள் டாய்லட் லொக்கேட்டர் ‛ஆப்'பை வெளியிட்டார். பிரதமரின் ‛தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், திறந்த வெளியில் இல்லாமல், பொது கழிப்பறையை பயன்படுத்தும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த ஆப் வெளியிடப்பட்டுள்ளது. 6,200 பொதுக் கழிப்பறைகள் எங்கெங்கு உள்ளன விபரங்கள் தரப்பட்டுள்ளது. டில்லி மற்றும் ம.பி.,யில் மட்டும் உள்ள கழிப்பறைகள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம், விரைவில் மற்ற மாநிலங்களுக்கும் விரிவு படுத்தப்பட உள்ளது.




Saturday, December 17, 2016

ஜிபோர்டு

கூகுள் கீபோர்டுடன் கூகுள் சர்ச் எஞ்சினையும் இணைத்து கூகுள் வெளியிட்டிருக்கும் புதிய கீபோர்டுதான் இந்த ஜிபோர்டு. இதன் மூலம் யூடியூப் வீடியோ லிங்க உட்பட, எந்த ஆப்பிலிருந்தும் கூகுள் சர்ச் செய்து பகிர முடியும். இனி மொபைல் கீபோர்ட்டில் இருந்தே கூகுள் சர்ச் செய்து கொள்ளலாம். ஆன்ட்ராய்ட் போன்களுக்கு மட்டுமே இந்த அம்சம்!

Thursday, December 15, 2016

ரூ.1.3 லட்சம் கோடிக்கு வாட்ஸ்அப்-ஐ வாங்குகிறது ஃபேஸ்புக்!

செல்போன் தகவல் பரிமாற்ற சேவை அளிக்கும் வாட்ஸ்அப் நிறுவனத்தை முன்னணி சமூக இணைய தளமான ஃபேஸ்புக் வாங்குகிறது.

அதன்படி, வாட்ஸ்அப்-ஐ சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க ஃபேஸ்புக் ஒப்பந்தம் செய்துள்ளது. அதோடு ஃபேஸ்புக் தனது இயக்குனர் வாரியத்தில் வாட்ஸ்அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜான் கோமை இடம்பெறச் செய்துள்ளது.