Tuesday, September 26, 2017

இன்று கூகுளுக்கு 19-வது பிறந்தநாள்

இன்று கூகுளுக்கு 19-வது பிறந்தநாள். கூகுள் டூடுளில் முக்கியமான தலைவர்களின் பிறந்தநாளுக்காக வித்தியாசமாக வடிவமைக்கப்படுவது வழக்கம். அதேபோன்றுதான் இன்றும் தன்னுடைய பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தன்னைப் புதுமாதிரியாக வடிவமைத்துள்ளது கூகுள்.

சர்ப்ரைஸ் ஸ்பின்னை கிளிக் பண்ணுங்க.. விளையாடுங்க.


Thursday, April 06, 2017

யு டியூப் டிவி ( Youtube TV )

யு டியூப் வழியாக தற்போது லைவ் டிவி சேனல்களையும் பார்க்கலாம்இந்தியாவிற்கான சேனல் சேவை இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. ஒரு மாத இலவச சேவையையும் வழங்குகின்றது.

Saturday, March 18, 2017

ஜி.மெயில் வீடியோ வியூ

ஜி.மெயில் மூலம் அனுப்பும் வீடியோக்களை இனிமேல் டவுன்லோடு செய்யாமல் அப்படியே பார்க்கும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

இதன் மூலம் கணினியின் ஹார்ட் டிஸ்கில் உள்ள மெமரி பாதுகாக்கப்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், எளிதாகவும் வீடியோவைப் பார்க்க முடியும். டவுன்லோடு ஆகும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் 25 MP-க்கு குறைவான மெமரி கொண்டிருக்கும் வீடியோக்களை மட்டுமே இப்படி பார்க்க முடியும். இந்த சேவை 15 நாள்களுக்குள் அறிமுகமாகிவிடும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Sunday, February 12, 2017

கூகுள் குரோம் பிரவுசர் தரும் அறிவிப்புகளைத் தடுக்க

இந்த பாப் அப் கட்டச் செய்தியினை கூகுள் குரோம் பிரவுசரில் தடை செய்திட, கீழ்க்காணும் செயல்முறைகளைப் பின்பற்றவும். குரோம் பிரவுசரை இயக்கி, மேலாக, வலது மூலையில் கிடைக்கும் மெனு பட்டனில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் கீழ் விரி மெனுவில், 'Settings' தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் பட்டியலில் கீழாக உள்ள, “Show Advanced Settings” என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின்னர், Privacy என்ற பிரிவில், “Content Settings” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு காட்டப்படும், Notifications என்ற பிரிவில், கீழாகச் சென்று, “Do not allow any site to show notifications” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேர்ந்தெடுத்து அமைத்த பின்னர், ஏற்கனவே நீங்கள் அனுமதி கொடுத்த இணைய தளங்களிலிருந்து அறிவிப்புகள் வந்து கொண்டு தான் இருக்கும். இதற்கு “Manage Exceptions” என்பதில் கிளிக் செய்து, அதில் நீங்கள் அனுமதி அளித்துள்ள இணைய தளங்களின் பெயர்ப் பட்டியலைக் காணலாம். அதில் தரப்பட்டுள்ள அனுமதியை, நீங்கள் விரும்பினால் ரத்து செய்திடலாம். ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இணைய தளத்திற்கு மட்டும் இத்தகைய அறிவிப்புகள் தருவதற்கு நீங்கள் அனுமதி தர வேண்டும் என எண்ணினால், இந்த “Manage Exceptions” என்ற பிரிவிற்குச் சென்று, அதற்கான அனுமதியைத் தரலாம். 

Tuesday, January 10, 2017

ஐஆர்சிடிசி புதிய ஆப் அறிமுகம்!

ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய புதிய செயலியை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தொடங்கி வைத்தார்.

ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில், விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகிறது. பயனாளர்கள் மற்றும் ஏஜென்டுகளுக்கு தனித் தனி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐஆர்சிடிசி புதியசெயலியை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தொடங்கி வைத்தார். இந்த புதிய செயலில், டிக்கெட் முன்பதிவு, தட்கல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெறலாம்.


வாட்ஸ் அப்பின் ட்ரிக்ஸ்

  • வார்த்தைக்கு முன்னும், பின்னும் * குறியை சேர்த்தால் போல்டாகவும்,  _  குறியை சேர்த்தால் சாய்வு எழுத்துக்களாகவும், ‍ ‍‍~ குறியை சேர்த்தால் அடித்துக்காட்டப்பட்ட எழுத்துக்களாகவும் இருக்கும்.


  • புதிய அப்டேட்டுடன் வாட்ஸ் அப் வைத்திருப்பவர்கள் போட்டோவை க்ரூப் அல்லது தனது நண்பருக்கு அனுப்பும் போது போட்டோவின் மேல் உள்ள எடிட் ஆப்ஷனை க்ளிக் செய்து அதனை கொண்டு படத்தின் மேல் கைகளாலேயே வரைய, எழுத முடியும்.


  • Account > Privacy-யில் சென்று  ‘Read Receipts’ ஆப்ஷனை ஆஃப் செய்தால் போதும் ப்ளூடிக் தெரியாது. 


  • (Group)க்ரூப்ல நீங்க யார்கிட்ட பேசணுமோ அவங்க பேர @ சிம்பளுடன் டைப் செய்தால் போதும் அவரை அது சரியாக ஞாபகப்படுத்தும்.


  • Account > Privacy > Last Seen Timestamp ல‌ ’Nobody’ செலக்ட் செஞ்சுட்டா உங்களோட லாஸ்ட் சீன் யாருக்குமே தெரியாது.