Wednesday, February 16, 2011

கோபக்காரப் பறவைகள்



காச்மூச்செனக் கத்திக்கொண்டு இருக்கும் பறவையைக் கவணில் அமர்த்தி, லேசாக இழுத்துச் செலுத்த... அது, எதிரே தேமே என உட்கார்ந்திருக்கும் பன்றிகளின் மேல் விழுந்து, வீர மரணம் எய்துகிறது. காரணம், இந்த சோம்பேறிப் பன்றிகள் தங்களது முட்டைகளைத் திருடிச் சென்றுவிட்டனவாம். இந்த தற்கொலைப் படையில் சில பறவைகள் ஏவுகணைபோலத் தாக்கி மரணம் அடையும்; சில குண்டு வீசும்.

2010-ல் மிகச் சிறந்த மொபைல் விளையாட்டாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பது இந்த 'கோபக்காரப் பறவைகள்’தான்! ஐ-பேட் சாதனத்தில் தரவிறக்கம் செய்துகொள்ள 5 அமெரிக்க டாலர்கள் கட்டணம். ஆப்பிளின் மொபைல் சாதனங்கள் மட்டும் அல்லாமல், கூகுளின் ஆண்ட்ராயிட், நோக்கியா, பாம் எனப் பல தளங்களில் கிடைக்கும் கோபக்காரப் பறவைகளை 2010-ல் மட்டும் 35 மில்லியன் மக்கள் வாங்கியிருக்கிறார்கள். பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ரோவியோ மொபைல் என்ற சிறிய நிறுவனத்தின் தயாரிப்பான இந்த விளையாட்டின் மகத்தான வெற்றியை அவர் களே எதிர்பார்க்கவில்லை. இந்தியாவில் 2010-ல் வாங்கப்பட்ட #1 மொபைல் விளையாட்டு இதுதான் என்று ஆப்பிள் வலைதளம் சொல்வதால், இதைப் படிக்கும் சிலராவது, கோபக்காரத் தற்கொலைப் படையைப் பன்றிகளைக் கொல்லப் பயன்படுத்தி இருப்பீர்கள் என்பது எனது யூகம்.

கோபக்காரப் பறவைகளின் விக்கி உரலி -
http://en.wikipedia.org/wiki/Angry_Birds

Download:

Monday, February 14, 2011

உட்கார்ந்த இடத்திலிருந்தே பணத்தைச் சம்பாதிக்கலாம்..

Blog
நீங்கள் நினைக்கும், கேட்கும், படிக்கும், பார்க்கும் அத்தனை விஷயங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தொடங்குங்கள் ஒரு ப்ளாக்கை. அதில் உங்கள் கருத்துக்களையும் எண்ணங்களையும் சிந்தனை களையும் கொட்டுங்கள். ப்ளாக் ஆரம்பிப்பது மிகச் சுலபம். ஆங்கிலத்தில்தான் ஆரம்பிக்க வேண்டும் என்றில்லை. தாராளமாக தமிழிலேயே ஆரம்பிக்கலாம். உங்கள் ப்ளாக்குக்கு வரவேற்பு இருக்கும்பட்சத்தில் கூகுள் ஆட்சென்ஸ் மூலம் விளம்பரம் கிடைக்கும். பார்வையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே வருமானம் எகிறும்.



You Tube

உங்களது திறமை களை வீடியோ படமாக எடுத்து அதை யூ.டியூப்-ல் பதிவு செய்து வெளியிடுங்கள். உங்களது வீடியோவைப் பார்க்க அதிகளவில் பார்வையாளர்கள் வரும்போது விளம்பரங்களும் தேடிவரும். இதற்கு யூ.டியூப்-க்குச் சென்று ஒரு அக்கவுன்ட் ஆரம்பியுங்கள். ஜி-மெயில் அக்கவுன்ட் தொடங்குவது போல இதுவும் சுலபமானதே. நீங்கள் எடுக்கும் வீடியோக்களை அதில் 'அப்லோட்’ செய்து, அதை நம் வெப்சைட்டிலோ அல்லது ப்ளாக்கிலோ சேர்க்க வேண்டும். இதற்கு விளம்பரங்கள் வர நீங்கள் விரும்பினால் adsense எனும் சைட்டுக்கு சென்று உங்களது யூ.டியூப் பற்றிய விவரங்களைக் கொடுத்தால் அவர்கள் தகுதியிருப்பின் விளம்பரங்கள் தருவார்கள். ஃபிளிக்ஸ்யா (flixya) மற்றும் மீடியாஃபிளிக்ஸ் (mediaflix) போன்ற இணையதளங் களில் மற்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

புகைப்படங்கள்

உங்களுக்கு புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் என்றால் அதன் மூலமும் சம்பாதிக்கலாம். .ஃபோடோலியா, ட்ரீம்ஸ்டைம், ஸட்டர்ஸ்டாக் போன்ற புகைப்பட ஏஜென்ஸிகள் புகைப்படங்களைப் பெற்றுக் கொண்டு அதற்குத் தகுந்த தொகையைக் கொடுக்கின்றன.

மற்றவர்களுக்காகத் தேடுங்கள் (Researching for Other)
மற்றவர்களுக்குத் தேவையான தகவல்களைத் தேடிக் கொடுப்பது, டிசைன் செய்து கொடுப்பது என ஆன்லைனிலேயே வேலைகளைச் செய்து கொடுக்கலாம். வாரத்தில் கொஞ்ச நேரம் செலவழித்தால் போதும் இதற்கு. பல அமைப்புகள், நிறுவனங்களுக்கு இது போன்ற தகவல்களை ஆன்லைனிலிருந்து தேடிக் கொடுப்பவர்களுக்கு அதற்குத்தகுந்த தொகை கொடுக் கப்படுகிறது. கல்லூரி மாணவர்கள் இதன் மூலம் எளிதாகச் சம்பாதிக்கலாம்.

இ-டியூசன்ஸ்


உங்களுக்கு கற்றுத் தரும் திறமை இருந்தால் இ-டியூசன் மூலம் நிறையவே சம்பாதிக்கலாம். கற்றுத் தருவதில் நீங்கள் எக்ஸ்பர்ட் என்றால் உடனே tutorvista, e-tutor, smartthinking, tutor.comபோன்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்களது கற்பிக்கும் திறன் சிறப்பாக இருந்தால் இணையதளத்தில் வெப்பினார் (Webinar) மூலம் செமினார் எடுக்கலாம். மாணவர்கள் நீங்கள் நடத்தும் பாடத்தை வெப்பினார் மூலம் பார்க்க கட்டணம் கட்ட வேண்டும். அதன் மூலம் உங்களுக்கு வருமானம் கிடைக்கும். ஆசிரியர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க அரிய வாய்ப்பு.

அஸிஸ்டென்ட்

சிறு தொழில் செய்யும் நிறுவனங்களால் பலரை முழு நேர வேலையாட்களாக நியமித்து சம்பளம் தர முடியாது. அப்படிப்பட்ட நிறுவனங்களுக்குத் தேவையான சின்னச் சின்ன வேலைகளைச் செய்து தரலாம். இதன் மூலம் கணிசமான பணம் பார்க்கலாம். வேலையில்லா பட்டதாரிகள் இந்த வாய்ப்பை அதிகம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மறுவிற்பனை

உங்களது இணைய முகவரி யிலோ அல்லது உங்கள் இணைப்பிலிருக்கும் நண்பர்களின் இணையதளத்திலோ பொருட் களை விற்பனை செய்வதன் மூலம் வருமானம் ஈட்டலாம். அது உங்களின் சொந்தப் பொருளாக தான் இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. பிற நிறுவனங்கள் தயாரிக்கும் பொருளை உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் விற்றுத் தந்து, கமிஷன் பெறலாம். நேரமும் தொடர்பும் உள்ள யார் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம்.


ஆப்பரேட்டிங் சிஸ்டம்

ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்றால் என்ன?
உலோகங்களாலும், பிளாஸ்டிக்குகளாலும் ஆன உயிரற்ற ஒரு பொருள்தான் கம்ப்யூட்டர். கார், பைக், மிக்ஸி, "டிவி' போன்ற பொருட்களை எடுத்துக் கொண்டால், இன்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்று வரையறுக்கப்பட்டு வடிவ மைக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்ன வேலையைச் செய்ய வேண்டும் என்று கம்ப்யூட்டருக்கு வரையறுக்கப்படவில்லை. தருகிற ஆணைகளை (Instruction) ஒழுங்காகப் பின் பற்றும்படி அதற்குக் கூறப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் பின்பற்ற வேண்டிய ஆணைகள் அடங்கிய பட்டியலை புரோகிராம் என அழைக்கிறோம். புரோகிராமை கம்ப்யூட்டர் இயக்குகிறது (Execute) எனச்சொல்லுவது, ஒவ்வொரு ஆணையையும் வரிசையாக மேற்கொள்வதைத்தான் குறிக்கிறது.

குறிப்பிட்ட தேவையை நிறைவேற்ற ஒரு புரோகிராம் எழுதப்படலாம். எடுத்துக்காட்டாக தேதியையும், நேரத்தையும் காட்ட ஒரு புரோகிராம் எழுதலாம். வேர்ட் பிராசசிங் வேலையை செய்ய ஒரு நீண்ட புரோகிராம் தேவைப்படலாம்.
நாம் இயக்குகிற எல்லா புரோகிராம்களும் கொண்ட தொகுப்பை சாப்ட்வேர் என்கிறோம். கம்ப்யூட்டருக்கு உயிரைக் கொடுப்பது சாப்ட்வேரின் ஒரு பிரிவான ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அப்ளிகேஷன் சாப்ட்வேர், சிஸ்டம் சாப்ட்வேர் என இரு வகையாக சாப்ட்வேரைப் பிரிப்பார்கள். சிஸ்டம் சாப்ட்வேரின் மறு பெயர்தான் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். கம்ப்யூட்டருக்கும், அப்ளிகேஷன் சாப்ட்வேர்களுக்கும் இடையில் இருந்து ஒரு பாலமாக செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும்.

ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன வேலைகளைச் செய்கிறது?
கம்ப்யூட்டரில் பல பணிகளை மேலாண்மை (Management) செய்வது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அவை என்ன வெனப் பாருங்கள்.
1) உள்ளீடு / வெளியீடு (Input/ Output)
2) நினைவக (Memory) மேலாண்மை
3) பணி (Task) மேலாண்மை
4) பைல் மேலாண்மை
கீபோர்டு, மானிட்டர், பிரின்டர் போன்ற ஹார்ட்வேர் உறுப்புக் களைக் கண்காணித்து அவற்றிடம் வேலை வாங்குவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. எடுத்துக்காட்டாக ஒவ்வொரு தடவையும் கீபோர்டில் உள்ள கீகளை நீங்கள் அழுத்தும் பொழுது, ஆப்பரேட்டிங் சிஸ்டம் கண்காணித்து, அந்த கீகள் குறிக்கிற எழுத்துக்களை மானிட்டரில் வெளிப்படுத்துகிறது.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள நினைவகத்தின் அளவை அறிந்து அதைப் புத்திசாலித்தனமாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்திக் கொள்ளும். நினைவகத்தில் தான் தங்குவதற்கான இடம், அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் தங்குவதற்கான இடம், நீங்கள் டைப் செய்கிற விவரங்களை இருந்த இடம், டிஸ்க்கிலுள்ள பைலை படிக்கும் பொழுது அதன் விவரங்களை வைக்க வேண்டிய இடம் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே தீர்மானிக்கிறது.
பல ஆப்பரேட்டிங் சிஸ்டங் களில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்க முடியும். Multitask என இதை அழைப்பார்கள். இவ்வாறு பல பணிகளில் ஈடுபடும்போது ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே பிணக்கு எதுவும் ஏற்படாமல், சிக்கலின்றி வழி நடத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட பணியை இரு சிறு கூறுகளாகப் பிரித்து இரண்டு சிபியுக்களிடம் (CPU) கொடுத்து வேலையை முடிக்கவும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தெரியும்.

நீங்கள் உருவாக்கும் பைல்கள், மற்றும் அப்ளிகேஷன்களுக்கான பைல்கள் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே பராமரிக்கிறது. பைலைச் சேமிக்க, அழிக்க, வேறிடத்துக்கு நகர்த்த, பெயர் மாற்றம் செய்ய போன்ற வேலைகளை நீங்கள் மேற்கொள்கையில் ஆப்பரேட்டிங் சிஸ்டமே அவற்றை மேற்கொள் கிறது.

ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வகைகள்
எவ்வளவு நபர்கள், எவ்வளவு பணிகள் ஒரு நேரத்தில் பயன்படுத்த மேற்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பிரிக்கிறார்கள். மூன்று வகைகள் நமக்கு கிடைக்கின்றன:
1) ஒரு பயனாளர் - ஒரு பணி (Single User Single task)
2) ஒரு பயனாளர் - பல பணி (Single User Multi task)
3) பல் பயனாளர் / பல பணி (Multy User Multi task)
ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே அதுவும் ஒரு பணி யினை மட்டுமே ஒரு பயனாளர்/ஒரு பணி என்ற வகை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் செய்ய முடியும். அடுத்த பணியை செய்ய விரும்பினால், முதல் பணியை அவர் மூட வேண்டும். DOS ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான எடுத்துக்காட்டாகும்.

ஒரு நேரத்தில் ஒருவரை மட்டுமே அவர் எவ்வளவு பணிகளை வேண்டுமானாலும் செய்யும்படி அனுமதிக்கிற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ஒரு பயனாளர் / பலபணி எனலாம். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான எடுத்துக்காட்டாகும். ஒரே நேரத்தில் பல பயனாளர்கள் நுழையும் படியும், அவரவர்கள் தங்களுக்கு வேண்டிய பல பணிகளை செய்யும்படியும் தயாரிக்கப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பற்பயனாளர்-பலபணி எனலாம். யுனிக்ஸ், லினக்ஸ், விண்டோஸ் என்டி ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இதற்கான எடுத்துக்காட்டுக்களாகும்.

கிரிக்கெட் உலகக் கோப்பை 2011

அட்டவணை பார்க்க
http://www.cricbuzz.com/cricket-schedule/series/228/icc-world-cup-2011

Friday, November 19, 2010

கூகுள் லோகோஸ்


உங்கள் பிரவுசரில் Google.com செல்லுங்கள். அங்கு தேடுதல் கட்டத்தில் “Google Logos” என டைப் செய்திடவும். கிடைக்கும் லிங்க்ஸ் பட்டியலில், முதலில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்து செல்லவும். உடனே, 2000 ஆண்டு முதல், கூகுள் காட்டிய அனைத்து லோகோக்களும் வைத்திருக்கும் தளத்திற்குச் செல்வீர்கள். பார்த்து ரசியுங்கள்.

Tuesday, October 26, 2010

நம் கண்கள்


நம்மில் பெரும்பாலானோர், சில மணி நேரமாவது, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பதை வழக்கமாகவும், நம் வாழ்க்கைத் தேவையாகவும் கொண்டுள்ளோம். இது ஒரு உலகளாவிய நடைமுறையாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதனாலேயே, நம் கண்கள், கம்ப்யூட்டர் சார்ந்து எப்படி இயங்குகின்றன, எந்த வகை இடையூறுகள் ஏற்படுகின்றன, அவற்றை எப்படி தடுக்கலாம் என்பது குறித்த ஆய்வுகள் அதிகம் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த
ஆய்வுகள் கூறும் சில பயனுள்ள தகவல்களை இங்கு பார்ப்போம்.

1. கம்ப்யூட்டர் இடம்: முதலில் உங்கள் கம்ப்யூட்டர், கீ போர்டு மற்றும் டைப் செய்திட வைத்துள்ள அச்சடித்த தாள்களைச் சரியான இடங்களில் வைத்திட வேண்டும். உங்கள் கண்களிலிருந்து, கம்ப்யூட்டர் மானிட்டர், ஒரு கை அளவு தூரத்தில் இருக்க வேண்டும். உங்கள் கண்கள் பார்வைக் கோட்டிற்கு 20டிகிரி கீழாக இருக்க வேண்டும். இதே போல கை மணிக்கட்டு மற்றும் கால்கள் இருக்கும் இடங்கள், வசதியாக, வலி எதுவும் ஏற்படுத்தா வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

2. ஒளி அமைப்பு: அறையில் ஒளி அமைப்பு நம் கண்களுக்கு பலவகையில் சோதனைகளைத் தரும். அறை வெளிச்சமானது பரவலாக இருக்க வேண்டும். நேரடியாக உங்கள் மீதோ, கம்ப்யூட்டர் மீதோ பாயக் கூடாது. இதனால் ஒளி பிரதிபலிப்பு தடுக்கப்படும். அதற்கேற்ற வகையில் மானிட்டரின் வண்ணம் மற்றும் ஒளி தன்மை அமைக்கப்பட வேண்டும். நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், பிரதிபலிப்புகளைத் தடுக்கும் பூச்சுகளை உங்கள் கண்ணாடியில், கண் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அமைத்துக் கொள்ளலாம். எனவே கண் மருத்துவரிடம் செல்கையில், நாளொன்றுக்கு சராசரியாக எத்தனை மணி நேரம் கம்ப்யூட்டரில் பணி புரிவீர்கள் என்று கூறவும். இப்போது இந்த மருத்துவர்கள், அதற்கேற்ற வகையில் உங்கள் கண்ணாடியினை வடிவமைப்பார்கள்.

3. 20:20:20 விதி: மானிட்டர் திரையைத் தொடர்ந்து பார்த்தவாறே பணி புரிந்து கொண்டிருந்தால், அதிக பட்சம் ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், தலையைத் திருப்பி, வேறு வகை ஒளியில் பொருட்களைப் பார்க்க வேண்டும். நீங்கள் பார்க்கும் பொருளும் 20 அடி தூரத்தில் இருப்பது நல்லது. இதனால் உங்கள் கண்களின் பார்வை குவியும் தூரத்தில் மாறுதல் ஏற்படும். இது கண்களுக்கு புத்துணர்வைத் தரும்.

பொதுவாக ஒரு நிமிடத்தில் நாம் 12 முறை சிமிட்டுகிறோம். ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், 5 முறை தான் சிமிட்டுகிறோம். இதனால் கண்களில் உலர் தன்மை ஏற்படுகிறது. எனவே கண்களை ஈரமாக்க தொடர்ந்து 20 முறை சிமிட்டவும்.

ஒரே இடத்தில், நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால், உடல் இயற்கைக்கு மாறான நிலையில் வலுக்கட்டாயாமாக அமைக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், எழுந்து 20 அடிகள் எடுத்து வைத்துப் பின்
திரும்ப பணியாற்ற வரவும்.

3. இதமான சூடு தேவை: கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், கண்களில் சோர்வு ஏற்பட்டால், அமர்ந்து பணியைத் தொடங்கும் முன்னரும், பின்னர் அவ்வப்போதும், கரங்கள் இரண்டையும் இணைத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள். இளஞ்சூடு பரவிய பின்னர், அதனை கண்களில் ஒத்தி வைத்து எடுங்கள். இது ஒரு இதமான சூட்டைக் கண்களுக்குத் தரும். வெந்நீரில் நனைத்த துணியைக் கண்களில் ஒற்றி எடுப்பது போன்ற நிலையைக் கண்களுக்கு வழங்கவே இந்த ஆலோசனை. அப்படியே கரங்களைக் கொண்டு கண்களை 60 விநாடிகள் பொத்தி வையுங்கள். விநாடிகளை உங்கள் மனதிற்குள்ளாக எண்ணுங்கள். இதனால் புது உற்சாகம் கிடைக்கும்.

4. தண்ணீர் கொண்டு அடித்தல்: இடை இடையே எழுந்து சென்று, கண்களை மூடிய நிலையில், தண்ணீரை எடுத்து முகம் மீது அடிக்கவும். இதனால் கண்களுக்கும், உங்களுக்கும், முழுமையான புத்துணர்ச்சி கிடைக்கும்.

5. தேயிலை பைகள்: பயன்படுத்திய இரண்டு தேயிலை பைகள், அல்லது அந்த அளவில் மென்மையான மடிக்கப்பட்ட நனைக்கப்பட்ட துணியை, அலுவலகத்திற்குச் செல்கையில் பிரிஜ்ஜில் வைத்து செல்லவும். பின்னர், அங்கிருந்து வந்தவுடன், அதனை எடுத்து, கண்களின் மீது சில நிமிடங்கள் வைத்திருக்கவும். இது வேலை மிகுதியால், கண்களில் ஏற்படும் சிறிய வீக்கத்தினைக் கட்டுப்படுத்தும்.

6. வைட்டமின்கள்: ஊட்டச் சத்து மிகவும் அவசியம். வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியன உள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும்.
கேரட், தக்காளி, பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று அவ்வப்போது சாப்பிடவும்.

PDF பைல் தயாரிக்க இலவச மென்பொருள்

PDF பைல் தயாரிக்க வேண்டுமா? இங்கே சென்று http://www.dopdf.com/ இறக்குமதி செய்து கொள்ளுங்கள்.

Thursday, October 14, 2010

புதிய ஆபரேட்டிங் சிஸ்டம் - விண்டோஸ் போன் 7

மைக்ரோசாப்ட் நிறுவனம், மொபைல் போனுக்கான புதிய ஆப்ப ரேட்டிங் சிஸ்டத்தினை அண்மையில், தன்னுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள மொபைல் போன் தயாரிப்பாளர்களுக்கு வழங்கியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயல்பாடு களில் இது ஒரு பெரிய சாதனை என அனைவரும் எண்ணுகின்றனர். மொபைல் போன் தயாரிப்பாளர்களுக்கு இதனை வழங்கும் முன், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மொபைல் மாடல்களில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் சோதனை செய்து பார்க்கப்பட்டது.

பல்வேறு சோதனைகள் 35 லட்சம் மணி நேரப் பயன்பாட்டில் மேற்கொள்ளப் பட்டன. வெகு விரைவில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் மொபைல் ஃபோன்கள் நமக்குக் கிடைக்க இருக்கின்றன. ஒரு மாதத்திற்குள் இவை வெளிவரலாம். எந்த நிறுவனம் நமக்கு இந்த புதிய அனுபவத்தினைத் தரப்போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்ப்போம்.

AVG Antivirus Free Edition 2011

ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு என்ற அளவில் மிகவும் பிரபலமான ஒரு நிறுவனம் ஏவிஜி நிறுவனம் ஆகும். கட்டணம் செலுத்திப் பெறும் தொகுப்புடன், இலவசமாகப் பயன்படுத்தவும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை, இந்த நிறுவனம் தந்து வருகிறது. அந்த வரிசையில், அண்மையில் இதன் மேம்படுத்தப்பட்ட இலவச தொகுப்பு வெளியாகியுள்ளது.

'AVG Antivirus Free Edition 2011' என அழைக்கப்படும் இந்த தொகுப்பில், வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு, ஸ்பைவேர் தொகுப்பு,இமெயில் ஸ்கேனர்,ரெசிடென்ட் ஷீல்ட் என்னும் பாதுகாப்பு வளையம், இணைய தள தொடர்புகளை அலசிப் பார்த்து எச்சரிக்கும் லிங்க் ஸ்கேனர், ஆண்ட்டி ரூட் கிட் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர் ஸ்கேனர் ஆகியவை அடங்கியுள்ளன. இதற்கு முன் வெளியான ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளுடன் இணைந்து இயங்கும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது.

இதனை இலவசமாகத் தரவிறக்கம் செய்திட http://free.avg.com/in-en/download-avg-anti-virus-free என்ற இணைய முகவரிக்குச் செல்லவும்.

Saturday, October 02, 2010

கம்ப்யூட்டரைப் பராமரிக்கும் சாப்ட்வேர் தொகுப்புகள்

கம்ப்யூட்டரைப் பராமரிக்கும் சாப்ட்வேர் தொகுப்புகள் பல இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அந்த வகையில் அண்மையில் கிடைக்கும் ஒரு தொகுப்பு மிகப் பயனுள்ள வகையில் பல பராமரிப்பு பணிகளை, எளிதாக மேற்கொள்கிறது. இதனை இயக்க, நமக்கு தொழில் நுட்ப உத்திகள் எதுவும் தெரிந்திருக்க வேண்டியதில்லை. இதன் பெயர் ஸ்லிம் கிளீனர் (Slim Cleaner). இதன் சோதனைத் தொகுப்பு தான் இப்போது வந்துள்ளது. இருப்பினும் செயல்பாட்டில் எந்த குறையும் இல்லாமல் இது பயனுள்ள முறையில் இயங்குகிறது.

இந்த வகையில் ஏற்கனவே பலருக்குத் தெரிந்த தொகுப்பான CCleaner போலவே இந்த புரோகிராமும் செயல்படுகிறது. சுத்தப்படுத்துவதற்கென நீக்கப்படும் டேட்டாவினை Windows, Applications மற்றும் Browsers என்ற மூன்று பிரிவுகளில் காட்டுகிறது. இந்த டேப்கள் மேலும் சில பிரிவுகளாக (Windows History, Productivity மற்றும் FileSharing) அமைக்கப் படுகின்றன.

ஒவ்வொரு பிரிவிலும் ஒரே புரோகிராமில் உள்ள தேவையற்ற டூப்ளிகேட் டேட்டாக்கள் காட்டப்பட்டு நீக்கப்படுகின்றன. Analyze என்ற பட்டனில் கிளிக் செய்தால், கம்ப்யூட்டர் சிஸ்டம் முழுமையாக ஸ்கேன் செய்யப்படுகிறது. இறுதியில் ஒவ்வொரு புரோகிராம் பிரிவிலும், நீக்கப்பட வேண்டிய டேட்டா காட்டப்படுகிறது. இப்படி ஒவ்வொரு பிரிவிலும் டேட்டாவினைப் பார்த்திடாமல், நேரடியாகவே அனைத்து வேண்டாத டேட்டாக்களையும் நீக்கும் வழியும் உள்ளது.

இந்த புரோகிராமினை http://slimcleaner.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக, டவுண்லோட் செய்திடலாம்.