Showing posts with label C புரோகிராமிங். Show all posts
Showing posts with label C புரோகிராமிங். Show all posts

Monday, April 18, 2011

C புரோகிராமிங் - பகுதி 3

சி 1969 முதல் 1973 இடையேயான காலத்தில் டென்னிஸ்ரிச்சி(Dennis Ritchie) என்பவரால் பெல் (AT&T Bell Telephone Laboratories) சோதனைக்கூடத்தில் உருவாக்கப்பட்டது.

யுனிக்ஸ் என்பது ஒரே நேரத்தில் பல வேலை செய்யக்கூடிய (Multi-tasking) மற்றும் பல பயனாளர்கள் (Multi-User) கையாளக் கூடிய இயக்குதளமாகும்(Operating System).1969ல் முதலில் யுனிக்ஸானது அஸம்பிளி லாங்குவெஜால் (Assembly Language) AT&T Bell Telephone Laboratories நிறுவன பணியாளர்களால் உருவாக்கப்பட்டது. அதில் டென்னிஸ் ரிச்சியும் ஒருவர்.

பின் 1973ல் யுனிக்ஸ் முழுமையும் சியால் மறுஉருவாக்கம் செய்யப்பட்டது. இதில் சியானது மேலும் பல சிறப்புகளை புகுத்த உதவியது. மேலும் வேறுபட்ட வன்பொருளிளும் யுனிக்ஸை எளிதாக புகுத்தி (Portable)இயங்கும்படி செய்வதில் சி உதவியது.

சியில் எழுதப்பட்ட புரோகிராமானது எந்தவொரு ஆப்பரேட்டிங்சிஸ்டத்திலும் கம்பைலர் உதவிகொண்டு மெசின் கோடாக மாற்றி நாம் இயக்கவல்லது. இதற்கு நாம் கோடில் ஒருசில மாற்றங்களை செய்தாலே போதுமானது.சியானது எளிதாக வன்பொருளின் நினைவகத்தை கையாளக்கூடியது. எனவேதான சி-யானது மைக்ரோ கண்ரோலர் (Micro Controller) முதல் சூப்பர் கம்யூட்டர் (Super Computer) வரை உபயோகிக்கப்படுகின்றது.

சி-யில் எழுதப்பட்ட புரோகிராமை இயக்க நமக்கு கம்பைலர் உதவியாக உள்ளது. டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் சி கம்பைலர்கள், விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் கம்பைலர்கள், யுனிக்ஸ் இயக்கத்தில் இயங்கும் கம்பைலர்கள் உள்ளன். இவற்றிற்குள்ள ஒரே வேறுபாடு பிராசசர் அளவு மட்டுமே.

நீங்கள் உங்களுக்கு பிடித்த, தகுந்த கம்பைலரை உபயோகித்து புரோகிராம் எழுதிபார்க்கலாம்.சில கம்பைலர்களை பற்றி அடுத்த பதிப்பில் பார்க்கலாம்..

Sunday, April 10, 2011

C புரோகிராமிங் பகுதி-2

ஹைகை லெவல் லாங்குவேஜ்(High Level Language)
இது படிப்பதற்கும் புரிந்து கொள்ளுவதற்கும் எளிதாக இருக்கும்.
புரோகிராமர்கள் எளிதில் புரிந்துகொண்டு கோடு எழுத வழிமுறைகளை(syntax) கொண்டுள்ளது. இதில் எழுதப்பட்ட புரோகிராமை மெஷின் கோடாக மாற்ற கம்பைலர்(compiler) உபயோகிக்கப்படுகின்றது.

லோ லெவல் லாங்குவேஜ்(Low Level language )
இது படிப்பதற்கும் புரிந்து கொள்ளுவதற்கு சற்று கடினமானது. பொதுவாக இதனுடைய புரோகிராம் கோடானது மெமோனிக் கோடால்(mnemonic code) எழுதப்பட்டிருக்கும்.

மைக்ரோபிராசசர்(microprocessor), மைக்ரோகன்ரோலர்(micro-controller) போன்றவை இந்த லாங்வேஜை உபயோகிக்கின்றன.நேரடியாக கம்யூட்டர் ரிஜிஸ்டர்(register), நினைவகத்துடன்(memory) தொடர்புடைய கோடுகளை கொண்டது. உதாரணமாக அஸம்பிளி லாங்வேஜை(assembly language) நாம் கூறலாம். இதில் எழுதப்பட்ட கோடை மெஷின் கோடாக மாற்ற அஸம்ளர்(assembler) உபயோகிக்கப்படுகின்றது.

சி லாங்குவேஜ்(C Language)
சியானது ஒரு ஹைகை லெவல்(highlevel) லாங்குவேஜ். சியில் நாம் எளிதாக மெம்மரியை(memory) கையாலுவதால் சியானது மிடில் லெவல் லாங்குவேஜ்(middle level language) எனவும் அழைக்கப்படுகின்றது. கம்பைலர் லாங்குவெஜ்(compiler language) எனவும் அழைக்கப்படுகின்றது.

Saturday, March 26, 2011

C புரோகிராமிங் பகுதி-1

சோர்ஸ் கோடு(Source Code)
சோர்ஸ் கோடு என்பது நாம் எழுதிய கட்டளைகள் அடங்கிய ஒரு பைல் ஆகும். சி பைலின் எக்ஸ்டேன்ஸன்(extension) .c ஆகும். இது போல் ஒவ்வோரு மொழிக்கும் ஒவ்வொரு எக்ஸ்டேன்ஸன்(extension) இருக்கும்.

உதாரணமாக சி பிளஸ் பிளஸ்( c++) மொழிக்கு .cpp என இருக்கும். நம்முடைய கட்டளைகளை சேமிக்க ஒரு டெக்ஸ்ட் எடிட்டர் தேவை. அது இவைகளுள் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்.
notepad
notepad++
DOS editior
vi editor( for linux/unix )

மேலே கூறப்பட்ட ஏதேனும் ஒரு எடிட்ரை சி புரோகிராம்( c program ) எழுத உபயோகிக்கலாம். சேமிக்கும் போது கீழ் வருமாறு சேமிக்க வேண்டும்.

filename.c


புகைப்பட இணைப்பு( notepad )

கம்ப்பைலர்( compiler )
கம்ப்பைலர் சோர்ஸ் கோடை( source code ) மெஷின் கோடாக( object code ) மாற்றுகின்றது.

லிங்கர்(Linker)
லிங்கர் ஒன்று அல்லது பல ஆப்ஜட் பைலை( Object file ) இணைக்கவும் மற்றும் இயக்கத்தகுந்த மெஷின் கோடை( Executable file ) உருவாக்கி கொடுக்கின்றது.