Tamil Computer - Computers in Tamil Language. தமிழில் கணினியை அறிய, கற்க எனது முயற்சி. எங்கும் எதிலும் தமிழ்.
Tuesday, October 23, 2012
கூகிள் மூலம் எளிதில் தகவல் அறியும் முறை
நாம் கூகிள் மூலம் பல தகவல்களை பெறுகின்றோம். அப்படி பட்ட தகவல்களை எளிதில் பெற இதோ வழிமுறைகள்.
define:multiprocessor
இ து கொடுக்கப்பட்ட வார்த்தைக்கான விளக்கத்தை பல வெப்சைட்களில் இருந்து நமக்காக எடுத்து கொடுக்கும்.
time:chennai அல்லது time:india
குறிப்பிட்ட இடத்தின் நேரத்தை அறிய உதவுகின்றது. உள்ளீடாக எனவும் கொடுக்கலாம்.
1 USD in INR
நாடுகளுக்கிடையே பணபரிமாற்றத்தின் மதிப்பை தெரிந்து கொள்ள உதவுகின்றது.
உதாரணமாக இந்தியா மற்றும் அமெரிக்கா பணபரிமாற்ற மதிப்பை தெரிந்து கொள்ள கீழ்கண்டவாறு உள்ளீடு கொடுக்கவும்..
1 USD in INR
100 INR in USD
info:yahoo.com
இது ஒரு வெப்சைட்டின் குறுந்தகவல்கள் மற்றும் கூகிள் பிடித்து வைத்த அந்த வெப்சைட்டை பற்றிய தகவல்களை தருகின்றது.
map:chennai
குறிப்பிட்ட இடத்தின் கூகிள் மேப்பை காட்ட
weather:chennai
குறிப்பிட்ட இடத்தின் தட்பவெப்ப நிலையை அறிய
10 + 57 /2 *10+8%3
கூகிள் உதவியுடன் நாம் எளிதில் கூட்டல் கழித்தல் வகுத்தல் பெருக்கல் என கணக்குகளை எளிதில் பண்ணலாம்.மேலும் கால்குலேட்டர் செய்யக்கூடிய அனைத்து கணக்குகளையும் கூகிள் செய்கிறது.
1 meter = ? kilometer
1 மீட்டருக்கு எத்தனை கிலோமீட்டர் என காட்ட
120 kilometer/15 liter
என் டைப்செய்தால் 1 லிட்டர் எரிபொருளுக்கு எத்தனை கிலோமீட்டர் கிடைக்கும் என காட்டும்
இது போல் இன்னும் சில,
24 inch in feet
1 billion INR in $
1 million INR in $
1/2 kg in pounds
கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி-6
audiovisual - ஒளிக்கட்புல
audit trail - தணிக்கைச்சுவடு
author language - படைப்பாளர் மொழி
authoring system - படைப்பாளர் அமைப்பு
authorisation - நல்குரிமை
authorised program - நல்குரிமை நிரல்
author - பனுவலர் அல்லது ஆசிரியர்
auto chart - தன்னியக்க வரைவு
auto dial - தன்னியக்க அழைப்புவிடுப்பி
auto indexing - தன்னியக்க சுட்டல்
auto polling - தன்னியக்கப் பதிவு
auto answer - தன்னியக்க விடையளிப்பு
auto load - தன்னியக்க ஏற்றி
auto redial - தன்னியக்க மீள்அழைப்பு
auto repeat - தன்னியக்க மீள் செயல்
auto restart - தன்னியக்க மீள்தொடக்கம்
இனிய சரஸ்வதி ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்
Thursday, October 04, 2012
அவுட்லுக் 2000 ஷார்ட்கட் கீகள்
அவுட்லுக் 2000 முக்கிய ஷார்ட்கட் கீகள்( Outlook 2000 Shortcut Keys )
(inbox)இன்பாக்ஸிற்கு செல்ல
CONTROL+SHIFT+I
(outbox)அவுட்பாக்ஸிற்கு செல்ல
CONTROL+SHIFT+O
(send message)மெசேஜ் அனுப்ப
ALT+S
(reply)மெசேஜ் அனுப்பியவருக்கு ரிப்ளே செய்ய
CTRL+R
(reply to all)மெசேஜ்ல் உள்ள அனைவருக்கும் ரிப்ளே செய்ய
CTRL+SHIFT+R
(forward message)மேசேஜை பார்வேட் செய்ய
CTRL+F
மெசேஜை ஜங்க்(junk) இல்லை என சொல்ல
CTRL+ALT+J
(check new mail)புதிய மெசேஜ் வருகையை சோதிக்க
CTRL+M அல்லது F9
( create new message)புதிய மெசேஜ் உருவாக்க
CTRL+N அல்லது CTRL+SHIFT+M
(open a message)வந்த மெசேஜை திறக்க
CTRL+O
(address book)அட்ரஸ் புக்கை திறக்க
CTRL+SHIFT+B
(flag a message)மெசேஜை குறித்து வைக்க
INSERT
( mark as read ) மெசேஜை படித்ததாக குறிக்க
CTRL+Q
( mark as unread ) மெசேஜை படிக்காததாக குறிக்க
CTRL+U
(search)வார்த்தையை தேட
CTRL+E
(forward message as attachment)மெசேஜை அட்டாச்மென்டாக பார்வேட் செய்ய
CTRL+ALT+F
(multimedia)மட்டிமீடியா மெசேஜ் உருவாக்க
CTRL+SHIFT+U
(send text message)டெக்ஸ்ட் மெசேஜ் உருவாக்க
CTRL+SHIFT+T
(to display send/receive dialog if send or receive in progress)மெசேஜ் அனுப்புதல் பெறுதல் டயலாக்கை காட்ட
CTRL+B
மெயில் டேப்க்கு(tab) செல்ல
CTRL+1
காலாண்டருக்கு செல்ல
CTRL+2
(contacts)முகவரிக்கு செல்ல
CTRL+3
(task)டாஸ்க் டேப்க்கு செல்ல
CTRL+4
(notes)நோட்ஸ் டேப்க்கு செல்ல
CTRL+5
(folder)போல்டர் லிஸ்ட்க்கு செல்ல
CTRL+6
(shortcut)ஷார்ட்கட்டுக்கு செல்ல
CTRL+7
Wednesday, September 19, 2012
Thursday, September 13, 2012
Tuesday, September 11, 2012
விண்டோஸ் 7 ஸ்னிப்பிங் டூல்
இது விண்டோஸ் 7 உடன் இலவசமாக கிடைக்கின்றது. ஸ்கிரின் ஸாட்(screen shot) எடுப்பதற்கு இது மிகவும் உதவுகின்றது.
இதனை விண்டோஸ் சர்ச்ல்(search) “Snipping Tool“ என தேடினால் காணலாம். இதனை கிளிக் செய்து வரும் மெனுவில் நியு(new) என்பதை தேர்வு செய்து ஸ்கிரினின் எந்த பகுதியையும் நீங்கள் விரும்பும் அளவு கேப்சர்(capture) செய்யலாம்.
மேலும் இதனை JPEG, GIF, PNG, HTML வகைகளில் படங்களாக சேமிக்கலாம். மேலும் ஹைலைட்(highlight) மற்றும் பேனாவால்(pen) வரையும் வசதி இ-மெயில் அனுப்பும் வசதியும் உள்ளது.
கூகிள் அலர்ட்
கூகிளிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் குறிப்பிட்ட தேடு தகவலை( search info ) தினமும் பெற விருப்பமா? அந்த தேடுதல் விடையானது உங்களுடைய மெயில் பாக்ஸில் வந்தால் எப்படி இருக்கும்..அதற்காகதான் “கூகிள் அலர்ட்“..
நீங்கள் இங்கே http://www.google.com/alerts சென்று உங்களுக்கு வேண்டிய தேடலின் வாக்கியத்தையோ அல்லது வார்த்தையையோ நீங்கள் உள்ளீடு செய்துவிட்டு அப்படியே உங்கள் இ-மெயில் ஜடியையும் கொடுத்துவிடுங்கள்..
உங்களுக்கு மெயில் தினமும் வரவேண்டுமா அல்லது வாரம் ஒருமுறை வேண்டுமா அல்லது நீங்கள் கொடுத்த தேடுதலுக்கு விடை கிடைத்ததும் மெயில் வரவேண்டுமா என தேர்வு செய்து கொள்ளலாம்..
மேலும் நீங்கள் எதிர்பார்க்கும் தேடுதல் வீடியோ(video) வடிவிலா அல்லது செய்தி(news) வடிவிலா அல்லது பிளாக்(blog), புத்தகம்(book) வடிவிலா என்பதையும் தேர்வு செய்து கொள்ளலாம்..
உதாரணமாக ”Programming in C” என்று உள்ளீடு செய்துவிட்டால்..இதைப்பற்றிய செய்தி புதிதாக கிடைத்தால் உடனே கூகிள் நமக்கு மெயில் செய்து விடும்..
Sunday, September 09, 2012
கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி - 5
assignment statement - மதிப்பளிக் கூற்று
associative storage - தொடர்பு நினைவகம்
asterisk - உடுக்குறி
asynchronous - ஒத்தியங்கா
asynchronous communication- ஒத்தியங்காத் தொடர்பு
asynchronous computer - ஒத்தியங்காக் கணிப்பொறி
asynchronous input - ஒத்தியங்கா உள்ளீடு
asynchronous transmission- ஒத்தியங்காச் சேலுத்தம்
atomic - அணுநிலை
attenuation - ஒடுங்கல்
attribute - பண்பு
audio - ஒலியுணர்
audio cassette - ஒழிப்பேழை
audio device - ஒலியுணர் சாதனம்
audio output - ஒலியுணர் வெளியீடு
audio response device - ஒலியேற்ப்பு சாதனம்
தவிர்க்கவும்
முன்பு paisalive வெப்சைட்டைப்பற்றி இந்த http://tamilcomputer.blogspot.in/2011/03/9000.html லிங்க்கில் குறிப்பிட்டு இருந்தோம்..
தற்போது எனது அனுபவம் மற்றும் உபயோகித்தோ ரின் அனுபவங்களை வைத்து பார்க்கும் போது இந்த சைட்டில் கூறிஉள்ளவாரு வருமானம் பெற இயலவில்லை ஆகையால் இந்த வெப்சைட்டை மேலும் யாரும் உபயோகிக்க வேண்டாம் என்று ஆலோசனை கூறுகின்றோம்... இந்த பதிவை இத்துடன் முடித்துகொள்கின்றோம்..
Subscribe to:
Posts (Atom)


