Saturday, June 08, 2013

கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி-8

auxiliary equipment - துணைக் கருவி
auxiliary function - துணை செயல்கூறு
auxiliary memory - துணை நினைவகம்
auxiliary operation - துணைச் செயல்பாடு
auxiliary storage - துணைத் தேக்ககம்
availability - கிடைத்தல்
available time - கிடைக்கும் நேரம்
average search length - சராசரித் தேடு நீளம்
axes - அச்சுகள்
babble - பிறழ்ச்சி
back panel - பின்புறப் பலகம்
back plane - பின்தளம்
back space - பின்நகர்வு

Thursday, May 16, 2013

முதல்வர் கணினித் தமிழ் விருது

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, கணினித் தமிழுக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குவோருக்கு, "முதல்வர் கணினித் தமிழ் விருது" வழங்கப்படும். இவ்விருது, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை கொண்டிருக்கும்.

Friday, May 10, 2013

சிறந்த போட்டோ வெப்சைட்ஸ்


www.shutterfly.com

  • அளவற்ற போட்டோ சேமிக்க இலவச இடம்
  • போட்டோ பிரிண்ட்( photo print )
  • வெப் ஆல்பம்


  • போட்டோ பிரிண்ட்( photo print )
  • அளவற்ற போட்டோ சேமிக்க இலவச இடம்
  • வெப் ஆல்பம்

http://www.photobucket.com/

http://www.smugmug.com/

http://picasa.google.com/


Saturday, February 23, 2013

டவுன்லோட் லிங்க்

‌இங்கே எந்த ஒரு டவுன்லோட் லிங்கையும்( வீடியோ,ஆடியோ,பைல்.. ) உள்ளீடாக கொடுத்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்..

http://www.file2hd.com/

Thursday, February 07, 2013

உங்களுக்கு தமிழில் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் வேண்டுமா?

இந்த லிங்கை கிளிக் செய்து அது என்ன என்று கூறுங்கள்..

https://docs.google.com/forms/d/1eRPic7cTzfVR4vx3NOD1DDMj8DiFxBqb7yGJqfP6xns/viewform

நீங்கள் விரும்பும் அப்ளிகேஷன் சாத்தியம் என்றால் உங்களுக்கு விரைவில் கிடைக்கலாம்..

அதிகம் விரும்பப்படும் தமிழ் ஆன்ராய்டு அப்ளிகேஷன் வெளியிட இது உதவும்..

நன்றி..

Friday, January 11, 2013

ஐ பெர்ரி அறிமுக சலுகை Auxus CoreX2 3G


 விலை ரூபாய் 10,990.

iberry சிறப்பம்சங்கள்
  • 3G அழைப்பு
  • ஆன்ட்ராய்டு 4.1
  • 7 இஞ்ச் 1280x800 தொடுதிரை
  • 1.6 GHz Dual Core Arm Cortex A9 பிராசஸர்
  • 1GB RAM நினைவகம்
  • 8GB உள்ளியக்க நினைவகம்
  • 2MP கேமரா
  • AGPS
  • IPS Display
  • USB
திரையின் காட்சியமைப்பு தெளிவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கேமிரா 2MP என்பதை தவிர 10990 ரூபாய்க்கு  நேர்த்தியான சிறப்பம்சங்களை கொண்டுள்ள பட்ஜெட் டேப்லெட் என்றே கூறலாம். 

http://www.facebook.com/iberryindia
http://deals.ebay.in/deals/iberry.html

கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி-7

automata - தன்னியக்க எந்திரங்கள்
automated data processing - தன்னியக்கத் தரவு செயலாக்கம்
automated flow chart -  தன்னியக்கச் செயல்வழிப் படம்
automatic - தன்னியக்க
automatic carriage - தன்னியக்க ஏற்றி
automatic check - தன்னியக்கச் சரிபார்ப்பு
automatic coding - தன்னியக்கக் குறிமுறையாக்கம்
automatic controller - தன்னியக்கக் கட்டுப்படுத்தி
automatic digital network - தன்னியக்க லக்க வலையமைப்பு
automatic error correction - தன்னியக்க பிழைதிருத்தம்
automatic message switching - தன்னியக்கச் செய்தி மாற்றம்
automatic quality control - தன்னியக்கத் தர கட்டுப்பாடு
automatic shutdown - தன்னியக்கப் பணி நிறுத்தம்
automatic teller machine - தன்னியக்கக் காசளிப்பு எந்திரம்
automation - தன்னியக்க முறை
automonitor - தன்னியிக்கக் கண்காணிப்பு
autopilot -  தன்னியிக்க வலவன்
autoscore - தன்னியிக்க அடிகோடிடல்

Thursday, November 08, 2012

கூகிள் விளம்பரம் வழியில் பணம் பண்ணுவது எப்படி?


கூகிள் விளம்பர சேவையின்(google ads) மூலம் ‌கூகிள் தனது விளம்பர வருவாயை தனது விளம்பரங்களை  காட்டும்  வெப்சைட் அல்லது பிளாக்கர் வைத்திருப்பவர்களுடன் பகிர்ந்தளிக்கின்றது. அதாவது கிட்டதட்ட தனது 50 சதவீத விளம்பர வருவாயை கூகிள் பகிர்ந்து கொள்கின்றது. 

இந்த சேவையில் இணைய தேவையானது

1. செந்தமாக ஒரு வெப்சைட் அல்லது பிளாக்கர். அதில் உள்ள பக்கங்கள் கூகிள் கூறி உள்ளவாறு அதிக தகவல்களுடனும், சிறந்த கட்டமைப்புடனும் இருக்க வேண்டும்.
2. ஒரு ஜி-மெயில் ஐ.டி அல்லது ஏதேனும் ஒரு இ-மெயில் ஐ.டி.

தற்சமயம் தமிழில் ‌உள்ள வெப்சைட் அல்லது பிளாக்கர்களை கூகிள் ‌ஏற்பதில்லை. ஆக வெப்சைட் அல்லது பிளாக்கர் ஆங்கிலம் அல்லது பின்வரும் மொழிகளில் ‌ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது கூகிள் நிபந்த‌னை. அப்படி இல்லாத பட்சத்தில் உங்கள் விண்ணப்பம் நிராகரிப்பு செய்யப்படும்.


பிளாக்கர் உருவாக்குவது ‌எளிது மற்றும் இலவசம். ஆனால் சொந்தமாக வெப்சைட் துவங்க சில ஆயிரங்கள் செலவாகும்.

எப்படி விண்ணப்பிப்பது
இங்கே சென்று உங்களின் தகவல்களை பதிவு செய்யவும். உங்கள் வெப்சைட் அல்லது பிளாகரின் முகவரியை உள்ளீடு செய்ய வேண்டும். பதிவு செய்தவுடன் 1-2 வாரங்களில் கூகிள் உங்கள் வெப்சைட் அல்லது பிளாகரானது கூகிள் கூறியுள்ளவாறு நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளதா ‌என பரிசோதித்து கூகிள் ஆட்ஸ்ஸை உங்கள் வெப்தளத்தில் காட்ட அனுமதி வழங்கும்.

அப்படி அனுமதி கிடைத்ததும்.https://accounts.google.com/ServiceLogin?service=adsense&rm=hide&nui=15&alwf=true&ltmpl=adsense&passive=true&continue=https://www.google.com/adsense/gaiaauth2?hl%3Den_US&followup=https://www.google.com/adsense/gaiaauth2?hl%3Den_US&hl=en_US இங்கே சென்று லாகின் செய்து கூகிள் தரக்கூடிய விளம்பர கோடை(code) உங்கள் வெப்சைட் அல்லது பிளாக்கரில் இணைக்கலாம். சில மணி நேரத்தில் உங்கள் வெப்சைட் கூகிள் விளம்பரங்களை காட்ட துவங்கி விடும். 

உங்கள் வெப்சைட்டில்  அதிகமாக பார்க்ப்படும் விளம்பரங்கள் மற்றம் அதிகமாக கிளிக் செய்து பார்க்ப்பட்ட விளம்பரங்கள என கூகிள் உங்கள் கணக்கில் பணத்தை வரவு வைக்கும்.  உங்கள் கணக்கில் 100 அமெரிக்க டாலர்  சேர்ந்தவுடன் நீங்கள் அதை இந்திய பண மதிப்பு காசேலையாக(செக்காக) அனுப்புமாறு கூகிளுக்கு கூறினால் உங்களுக்கு கூகிள் அதற்கான காசோலையை அனுப்பி வைக்கும். மேலும் தின(daily), வாரம்(weekly), மாதம் (monthly)வாரியாக உங்கள் வெப்சைட்டில் தோன்றும் ஆட்ஸை(ads) கிளிக் செய்தவர்தள் எத்தனை பேர் பார்த்தவர்கள் எத்தனை பேர் என்பதை கூகிள் ரிப்பேரர்ட்ஸ் மூலம் பார்த்துக்கொள்ளலாம்.

பின்பற்ற வேண்டியது
1. உங்கள் விளம்பரங்களை நீங்களே கிளிக் செய்யக் கூடாது.
2. மற்றவர்களிடம் கூறி கிளிக் பண்ணுமாறு செய்யக் கூடாது.
3. உங்கள் வெப்சைட்டில் ‌விளம்பரத்தை கிளிக் செய்யும்படி கூறக்கூடாது.

அப்படி மீறும் பட்சத்தில் கூகிள் உங்கள் அக்கவுண்டை நீக்கிவிடும். 

நேர்மையாக நடந்து கொண்டால் கூகிள் விளம்பரம்   மூலம் பணம் பண்ணலாம். விஜய்நெட்வெரர்க்.காம் கூகிளிடம் இருந்து ஓரு காசோலயை முதன் முதலாக  பெற்றுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.