Wednesday, March 30, 2011

கம்ப்யூட்டர் சிரிப்பு


தமிழாசிரியர்: உனக்கு தெரிந்த பழமையான மொழிகள் மூன்று கூறு?

மாணவன்: பாஸ்கல், கோபால், சி

தமிழாசிரியர்: ??!! உக்காரு தம்பி..உன்ன கேட்டதுக்கு சும்மா இருந்திருக்கலாம்..

Tuesday, March 29, 2011

இனியாக்( ENIAC )

இனியாக்( ENIAC ) - இதுதான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பொதுநோக்கு(general purpose) மின் கணினி( electrical computer). இதன் விரிவாக்கம் Electronic Numerical Integrator And Computer என்பதாகும். ஒரு குறிப்பிட்ட கணக்குகளை சரிவர முடிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது. கூட்டல் கழித்தல் மட்டுமல்லாது 10 இலக்க எண்ணை நினைவகத்தில் நிறுத்தக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இது 1946 ஆம் ஆண்டு உபயோகத்திற்கு வந்தது.

அளவில் மிகப்பெரியதாக இருந்தது. கிட்டத்தட்ட 680 சதுர அடி அளவைக்கொண்டது. இதில் 17468 வேக்கம் டியூப்புகள்(vacuum tubes) 7200 படிக டயோடுகள் (crystal diodes) 70000 ரிஜிஸ்டர்கள் (registers) 10000 கெப்பாசிட்டர்கள் (capacitors) மற்றும் 5 மில்லியன் கைகளால் வடிவமைக்கப்பட்ட சர்க்யூட்டுகளும் அடக்கம்.

Saturday, March 26, 2011

C புரோகிராமிங் பகுதி-1

சோர்ஸ் கோடு(Source Code)
சோர்ஸ் கோடு என்பது நாம் எழுதிய கட்டளைகள் அடங்கிய ஒரு பைல் ஆகும். சி பைலின் எக்ஸ்டேன்ஸன்(extension) .c ஆகும். இது போல் ஒவ்வோரு மொழிக்கும் ஒவ்வொரு எக்ஸ்டேன்ஸன்(extension) இருக்கும்.

உதாரணமாக சி பிளஸ் பிளஸ்( c++) மொழிக்கு .cpp என இருக்கும். நம்முடைய கட்டளைகளை சேமிக்க ஒரு டெக்ஸ்ட் எடிட்டர் தேவை. அது இவைகளுள் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்.
notepad
notepad++
DOS editior
vi editor( for linux/unix )

மேலே கூறப்பட்ட ஏதேனும் ஒரு எடிட்ரை சி புரோகிராம்( c program ) எழுத உபயோகிக்கலாம். சேமிக்கும் போது கீழ் வருமாறு சேமிக்க வேண்டும்.

filename.c


புகைப்பட இணைப்பு( notepad )

கம்ப்பைலர்( compiler )
கம்ப்பைலர் சோர்ஸ் கோடை( source code ) மெஷின் கோடாக( object code ) மாற்றுகின்றது.

லிங்கர்(Linker)
லிங்கர் ஒன்று அல்லது பல ஆப்ஜட் பைலை( Object file ) இணைக்கவும் மற்றும் இயக்கத்தகுந்த மெஷின் கோடை( Executable file ) உருவாக்கி கொடுக்கின்றது.

Friday, March 25, 2011

கம்ப்யூட்டர் சிரிப்பு



நபர் 1: இந்த குழந்தை கம்ப்யூட்டர்ல பெரிய ஆளா வருவான்..

நபர் 2: எத வச்சு சொல்லுறீங்க?!

நபர் 1: அழுகும் போது 'குவா குவா' னு அழுறதுக்கு பதிலா 'ஜாவா ஜாவா' னுல அழறான்..

Wednesday, March 23, 2011

இணையத்தில் நேரடி கிரிக்கெட்


நாளை இந்தியா மற்றும் ஆஸ்திரிலியா இடையே நடக்கும் போட்டியை இணையத்தில் பார்க்க வேண்டுமா?

இதோ இணையதள முகவரிகள்..

www.cricket-365.tv

www.espnstar.com

www.crictime.com

www.cricket.bollym4u.com

ஒரு நாள் போட்டியில் சச்சின் 18,000 ரன்களை கடந்து சாதனை.

செய்தி - தெரிஞ்சுகோங்க

மும்பை: நாட்டின் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சேவையில் உங்களுக்குத் திருப்தி இல்லையா.. ஒரு எஸ்எம்எஸ் போதும். அடுத்த 48 மணி நேரத்தில் உங்கள் அதிருப்திக்கான காரணத்தைத் தெரிந்து கொண்டு சரி செய்வார்கள் அதிகாரிகள் என அறிவித்துள்ளது அந்த வங்கி.

13 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் மிகப் பெரிய அரசு வங்கியாகத் திகழும எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ள புதிய சேவை இது. இனி புகார் செய்ய பேப்பர், பேனா என்றெல்லாம் தேடிக் கொண்டிருக்க வேண்டாம்.

குறிப்பிட கிளையில் உங்களுக்கு திருப்தியான சேவை கிடைக்கவில்லை என்றால், உடனே உங்கள் மொபைலௌ எடுத்து Unhappy என்று டைப் செய்து 8008202020 என்ற எண்ணுக்கு அனுப்பினால் போதும். அடுத்த 48 மணி நேரத்துக்குள் உங்கள் பிரச்சினை சரி செய்யப்பட்டுவிடுமாம்.

கடந்த அக்டோபர் மாதம் இந்த சேவை சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் திருப்தி ஏற்பட்டதால், இப்போது நாடு முழுவதும் அறிமுகமாகிறது.

Sunday, March 20, 2011

கம்ப்யூட்டர் சிரிப்பு


நபர் 1: எதுக்கெல்லாம் போராட்டம் நடதனும்கிறது இல்லாம போச்சு?
நபர் 2: ஏன்? என்னாச்சு?
நபர் 1: முதியோர் கல்வி மாணவர்களான எங்களுக்கும் 'இலவச லேப்டாப்' கொடுக்கணும் அப்பதான் தேர்தல்ல ஒட்டு போடுவோம்னு சொல்லி போராட்டம் பண்ணுறாங்க.

இணையத்தில் இலவச SMS


இலவச SMS சேவையை indyarocks.com வழங்குகிறது. இந்தியா முழுவதும் நீங்கள் SMS அனுப்பலாம். நீங்கள் இந்த தளத்திற்கு சென்று உங்கள் மொபைல் நம்பர்ஐ கொடுத்து கணக்கை ஆரம்பிக்க வேண்டும்.

மேலும் facebook போன்று இந்த இணையம் அமைந்துள்ளது. இங்கு நீங்கள் இணைக்கும் ஒவ்வொரு வீடியோ (youtube வீடியோ லிங்க் கூட )லிங்கிற்கு 0.05 பைசாவும், நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு வீடியோவிற்கு 0.05 பைசாவும் வழங்கப்படுகிறது. அதாவது அவர்கள் தங்கள் 'google adsense' வருமானத்தை வாடிகையளர்களுடன் ( members ) பகிர்த்துகொள்வதாக இத்தளம் தெரிவிக்கின்றது.

வாரம் தோறும் இத்தளத்தில் ஆரம்பிக்கப்படும் சிறந்த blog, photos, video விற்கு சன்மானம் வழங்கப்படுகின்றது.

சில பொருட்களுக்கு இலவச பிட்டிங் ( free bidding ) வழங்குகிறது. இத்தளத்தில் உள்ள விளையாட்டுகளை விளையாண்டு அதிக மதிப்பெண் (score) பெருபவருகளுக்கு சன்மானம் வழங்கப்படுகின்றது.

Friday, March 18, 2011

பீப் ஒலி

கணினி ஆன் செய்தவுடன் bios ஆனது booting ஆகும் நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி ஏதாவது ஒரு சில பாகங்கள் சரியில்லை என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி ஒலிக்க தொடங்கும்.

அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைத்தே நாம் எதில் சிக்கல் இருக்கிறது என கண்டுபிடிக்கலாம்.......

1 , 2 , 3 , முறை- ram அல்லது motherboard

4 , முறை - டைமர் (motherboard ) இனை சரி செய்யவும்

5 , முறை - ப்ராசசரில் சிக்கல்

6 , முறை - key board , key போர்டு கண்ட்ரோல் , key போர்டு கண்ட்ரோல் ஷிப்

7 , முறை - motherboard இல் உள்ள ஜம்பர்கள் சரியாக உள்ளாதா என பார்க்கவும்.