Saturday, August 27, 2011

இந்தியன் ரயில் இன்போ

'இந்தியன் ரயில் இன்போ' வெப்சைட் கூகுள் குரோமிற்கு( google chrome browser ) பிரவுசர் நீட்டிப்பு(extension) ஒன்றை வழங்குகின்றது. இதனை இன்ஸ்டால் செய்தபின்பு பிரவுசரின் வலது மேற்புறத்தில் அமர்ந்துகொள்கின்றது. நமக்கு தேவையான போது இதனை கிளிக் செய்து ரயில் டிக்கெட் தகவல்களை எளிதில் பெற்றுக்கொள்ளலாம். முயற்சித்து பாருங்கள்..

லிங்க்:





Thursday, August 25, 2011

விண்டோஸ் 7 வசதிகள்


பின் அப் (Pin Up): நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் போல்டர்களை, டாஸ்க் பாரில் வைத்து இயக்க விண்டோஸ் 7 வழி கொண்டுள்ளது. நீங்கள் விரும்பும் போல்டரில், மவுஸை வைத்து, ரைட் கிளிக் செய்து, அப்படியே டாஸ்க் பாருக்கு இழுத்து விட்டுவிடவும்.

அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றினை இயக்கிக் கொண்டிருக்கையில், எளிதாக அதில் வேலை செய்திட, இன்னொரு விண்டோவிலும் அதே அப்ளிகேஷன் புரோகிராமினை இயக்க விரும்புவீர்கள். இதற்கு அந்த அப்ளிகேஷன் புரோகிராம் இடம் தருமானால், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, டாஸ்க் பாரில் உள்ள அந்த புரோகிராமின் ஐகானில் கிளிக் செய்தி டவும்.

விண்டோஸ் 7 சிஸ்டத்தின் மூலம், மிகத் தெளிவான, துல்லியமான காட்சியைத் திரையில் பெறலாம். இதன் மூலம் டெக்ஸ்ட் மற்றும் படங்களில் உள்ள நுண்ணிய தகவல்களைத் தெளிவாகப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக, இந்த வசதி லேப்டாப் கம்ப்யூட்டர்களில் உதவியாய் இருக்கும். டெக்ஸ்ட் துல்லியமாகக் காட்டப்படவும், படங்கள் தெளிவாகத் தெரியவும் இரண்டு சிஸ்டம் பைல்கள் இதற்கு உதவுகின்றன. அவை cttune.exe (Clear Type Text Tuning) dccw.exe (Display Color Calibration): நேரடியாக இவற்றை இயக்கலாம்; அல்லது கண்ட்ரோல் பேனலில் இவற்றைக் காணலாம்.

டாஸ்க் பாரில் ஐகான்களை எந்த வரிசையில் அமைக்க வேண்டும் என விண்டோஸ் 7 சிஸ்டம் நமக்கு உதவிடுகிறது. அவற்றின் ஐகான் மீது, கர்சரைக் கொண்டு சென்று இழுத்து விடுவதன் மூலம் இதனை மேற்கொள்ள லாம். முதல் ஐந்து ஐகான்களில் உள்ள புரோகிராம்களை இயக்க, சில கீகளை அழுத்தி இயக்கநிலைக்குக் கொண்டு வரலாம். எடுத்துக்காட்டாக, முதலில் காணப்படும் ஐகானில் உள்ள புரோகிராமினை இயக்க, விண்டோஸ் கீ +1 அழுத்த வேண்டும். இரண்டாவது ஐகான் புரோகிராமினை இயக்க விண்டோஸ் கீ+2 அழுத்த வேண்டும்.

டாஸ்க் பாரில் கவனம் செலுத்தி, அங்கு இயக்கத்தினை மேற்கொள்ள, விண்டோஸ் கீ + T அழுத்த வேண்டும். இப்போது டாஸ்க் பார் மெனு கிடைக்கும். பின்னர் அம்புக் குறி கீகளைப் பயன்படுத்தி, புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து என்டர் செய்தால் போதும். இந்த விளைவிலிருந்து விடுபட எஸ்கேப் கீயை அழுத்தினால் போதும்.

ஹெல்ப் டெஸ்க் எனப்படும் உதவிடும் குறிப்புகளை விண்டோஸ் 7 சிஸ்டம் நமக்கு கம்ப்யூட்டரிலேயே வழங்குகிறது. “fix” அல்லது “Troubleshoot” என ஸ்டார்ட் மெனுவில் டைப் செய்தால், பலவகையான பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் பிரிவுகள் காட்டப்படுகின்றன. இவற்றில் எந்த பிரச்னைக்குத் தீர்வு வேண்டுமோ, அந்தப் பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து, தீர்வைத் தெரிந்து கொள்ளலாம்.

Sunday, August 21, 2011

கம்ப்யூட்டர் சிரிப்பு


நபர் 1: அவரு பெரிய கஞ்சன்..

நபர் 2: எப்படி சொல்ற?

நபர் 1: கம்ப்யூட்டர்ல மவுசுக்கு(mouse) பதிலா ஒரு எலிய கட்டி போட்டுருக்காருனா பாத்துக்கோங்களேன்..

கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி - 3

adaptive system = தகவேற்பு அமைப்பு
add-in = செருகு
add-on = கூட்டு உறுப்பு
adder = கூட்டி
address = முகவரி
address bus = முகவரிப் பாட்டை
address decoder = முகவரிக் கொணரி
address modification = முகவரி மாற்றம்
address space = முகவரிக் களம்
address translation = முகவரிப் பெயர்ப்பு
addressing = முகவரியிடல்
adjacent matrix = அண்டை அணி
administrative data processing = நிருவாகத் தரவுச் செயலாக்கம்
Automatic Data Processing = தன்னியக்க தரவுச் செயலாக்கம்
Artificial Intelligence = செயற்கை நுண்ணறிவு

Thursday, August 18, 2011

இணைய வேக கண்காணிப்பு கருவி

இணைய வேக கண்காணிப்பு கருவி( Net Speed Monitor )இந்த டூல் இண்டர்நெட்டின் தரவிறக்க வேகம்( Download Speed ) மற்றும் தரவேற்ற வேகம்( Upload Speed ) ஆகியவற்றை கண்டறிய உதவுகின்றது. இது டாஸ்க்பாரில் அமர்ந்துகொண்டு நமக்கு தேவையான போது வேகத்தை காண உதவுகின்றது.

கீழ்க்காணும் இயங்கு தளங்களில்( Operating System ) இயங்குகின்றது.
Windox XP,
Windows Server 2003,
Windows Vista or Windows 7

தரவிறக்கம்செய்ய




Friday, August 12, 2011

தமிழ் மொழிபெயர்ப்பு

Google Translate ஆங்கிலம் வழியாக தமிழ் அல்லது தமிழ் வழியாக ஆங்கிலம் மொழிபெயர்க்க உதவுகிறது. ஒருமுறை முயற்சிக்கவும்.

இது ஒரு ஆல்பா வெளியீடு.

இணைப்பு

Tuesday, August 09, 2011

தொழில்நுட்பம்


Google Wallet என்று அழைக்கப்படும் தொழில்நுட்பம் அடுத்த இரண்டு ஆண்டு களில் நமது வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரலாம். அல்லது வேவ், பஸ் போல சில மாதங்களில் புஸ்ஸென்றும் போகலாம். அதாவது மொபைலை கடன் அட்டையாக பயன்படுத்திக்கொள்ளலாம். ஆர்வம் தாங்கவில்லை என்றால், இப்போதைக்கு இந்த உரலியைப் பாருங்கள்




Tuesday, August 02, 2011

கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி - 2

accuracy - துல்லியம்
acoustic coupler - கேட்பொலிணைப்பி
acoustical sound enclosure- கேட்பொலி தடுப்பு உறை
action - செயல்
action entry - செயல் பதிவு
action oriented management report - செயல் நோக்கு மேலாண் அறிக்கை
action statement - செயல் கூற்று
action stub - செயல் டம்
active cell - யங்கு கலன்
active file - நடப்புக் கோப்பு
activity - செயற்பாடு
activity ratio - செயற்பாட்டு விகிதம்
adaptor - பொருத்தி
adaptor board - பொருத்துப் பலகை
adaptor card - பொருத்து அட்டை