Showing posts with label டிப்ஸ். Show all posts
Showing posts with label டிப்ஸ். Show all posts

Tuesday, January 10, 2017

வாட்ஸ் அப்பின் ட்ரிக்ஸ்

  • வார்த்தைக்கு முன்னும், பின்னும் * குறியை சேர்த்தால் போல்டாகவும்,  _  குறியை சேர்த்தால் சாய்வு எழுத்துக்களாகவும், ‍ ‍‍~ குறியை சேர்த்தால் அடித்துக்காட்டப்பட்ட எழுத்துக்களாகவும் இருக்கும்.


  • புதிய அப்டேட்டுடன் வாட்ஸ் அப் வைத்திருப்பவர்கள் போட்டோவை க்ரூப் அல்லது தனது நண்பருக்கு அனுப்பும் போது போட்டோவின் மேல் உள்ள எடிட் ஆப்ஷனை க்ளிக் செய்து அதனை கொண்டு படத்தின் மேல் கைகளாலேயே வரைய, எழுத முடியும்.


  • Account > Privacy-யில் சென்று  ‘Read Receipts’ ஆப்ஷனை ஆஃப் செய்தால் போதும் ப்ளூடிக் தெரியாது. 


  • (Group)க்ரூப்ல நீங்க யார்கிட்ட பேசணுமோ அவங்க பேர @ சிம்பளுடன் டைப் செய்தால் போதும் அவரை அது சரியாக ஞாபகப்படுத்தும்.


  • Account > Privacy > Last Seen Timestamp ல‌ ’Nobody’ செலக்ட் செஞ்சுட்டா உங்களோட லாஸ்ட் சீன் யாருக்குமே தெரியாது. 


Thursday, December 22, 2016

இந்தியாவிற்கான 'போகிமான் கோ'

இந்தியாவுக்கான போகிமான் கோ விளையாட்டு அப்ளிகேஷன் கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கின்றது.

https://play.google.com/store/apps/details?id=com.nianticlabs.pokemongo

Monday, October 17, 2016

கம்ப்யூட்டர் உபயோகித்த நேரம்

விண்டோஸில் கம்ப்யூட்டர் எவ்வளவு நேரம் 'ஆன்' செய்து இருந்தோம்( உபயோகித்த நேரம் ) என தெரிந்து கொள்ள வேண்டுமா?

விண்டோஸ் டாஸ்க் மேனேஸர்( Task Manager ) இதற்கு உதவுகின்றது


மேற்கண்ட படத்தின் படி 3:32 மணி நேரம் 42 வினாடிகள்.

Monday, May 23, 2016

டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களுக்கும் வாட்ஸ் அப்

விண்டோஸ் இயக்கத்திற்கான புதிய வாட்ஸ் அப் செயலி ஒன்றை வாட்ஸ் அப் வெளியிட்டுள்ளது. இதன் மூலம், வாட்ஸ் அப் வாடிக்கையாளர்கள், டாகுமெண்ட்களைத் தங்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளலாம். பி.டி.எப். பைல்களையும் இதன் வழியே அனுப்பலாம். வாட்ஸ் அப் தளத்திற்கு, விண்டோஸ் இயக்கம் ஒரு சிறந்த வழியாகும். ஏற்கனவே, விண்டோஸ் போன் இயக்கத்தில் இந்த வசதி தரப்பட்டிருந்தது. தற்போது, விண்டோஸ் சிஸ்டம் மட்டுமின்றி, மேக் கம்ப்யூட்டர்களிலும் இந்த வசதி தரப்பட்டுள்ளது. இவற்றை https://www.whatsapp.com/download என்கிற இணைய தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். 

Sunday, June 28, 2015

ஆண்ட்ராய்ட்லிருந்து iOS க்கு

புதிய மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ஆப்பிள் நிறுவனம், ஆண்ட்ராய்ட் போன்களைப் பயன்படுத்துபவர்கள், ஆப்பிள் ஐபோனுக்கு மாறிக் கொள்ள வகை செய்திடும் செயலி ஒன்றை Move to iOS என்ற பெயரில் தந்துள்ளது. இதனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இதன் மூலம், வயர் இணைப்பு இல்லாமலேயே, பழைய ஆண்ட்ராய்ட் போனிலிருந்து, புதிய ஐபோனுக்கு டேட்டாவை மாற்றிக் கொள்ளலாம். Contacts, messages, photos, videos, mail, calendars , wallpapers and DRM-free music மற்றும் books ஆகியவற்றையும் மாற்றிக் கொள்ளலாம்.

இந்த செயலியை இயக்கினால், உங்களுடைய தற்போதைய ஆண்ட்ராய்ட் செயலிகளையும், ஐபோன் செயலிகளையும் ஒப்பீடு செய்கிறது. இலவச செயலிகள் அனைத்தும் தாமாகத் தரவிறக்கம் செய்யப்படுகின்றன.

iOS 9 வெளீயீட்டில் இந்த செய்தி வந்துள்ளது. இந்த வருட பிற்பகுதியில் Move to iOS செயலி மற்றும் iOS 9 வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Thursday, April 16, 2015

எக்ஸெல் - ஆல்ட்+ஷிப்ட் ஷார்ட் கட்


F1 +ALT+SHIFT : புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும்.
F2 +ALT+SHIFT :அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும்.
F3 +ALT+SHIFT :நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம்.
F6 +ALT+SHIFT :ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக் விண்டோக்கள் திறக்கப்பட்டிருப்பின் தற்போதைய ஒர்க்புக்கிற்கு முந்தைய ஒர்க்புக் விண்டோ திறக்கப்படும்.
F9 +ALT+SHIFT: திறந்திருக்கும் அனைத்து ஒர்க்ஷீட்களிலும் அனைத்து ஒர்க் புக்குகளிலும் அனைத்து கால்குலேஷன்களும் செயல்படுத்தப்படும்.
F10 +ALT+SHIFT: ஸ்மார்ட் டேக்கிற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட் டேக் திறக்கப்பட்டிருந்தால் அடுத்த டேக் சென்று அதற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும்.
F11 +ALT+SHIFT: மைக்ரோசாப்ட் ஸ்கிரிப் எடிட்டர் திறக்கப்படும்.
F12 +ALT+SHIFT : பிரிண்ட் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.

Sunday, December 14, 2014

கூகிளில் உள்ள சில வசதிகள்

கூகிளில் தேடலில் 6000000=english என டைப் செய்து என்டரை தட்டினால் எண்களை ஆங்கிலத்தில் வார்தைகளாக காட்டும்.







உங்களுக்கு தேவையான மொழியில் டைப் செய்ய,
http://www.google.com/inputtools/try/


கூகிளில் கவுண்ட் டவுன் டைமரை( Count Down Timer) இயக்க timer என டைப் செய்து என்டரை தட்டி, பின் வரும் மெனுவில் நீங்கள் உங்களுக்கு விரும்பிய நேரத்திற்கு டைமர் செட் செய்து கொள்ளலாம்.டைமர் முடிவடைந்ததும் உங்களது கம்ப்யூட்டரில் அலர்டாக சப்தம்(alert sound) கேட்கும்..


Saturday, July 19, 2014

பிக்ஸ் இட்

உங்கள் கம்ப்யூட்டரில் எதேனும் புரோகிராம் இன்ஸ்டால் அல்லது அன்-இன்ஸ்டால் செய்யும் போது பிரச்சனை உள்ளதா? அதாவது விண்டோஸ் ரிஜிஸ்ரியில்(registry) பிரச்சனை இருந்தாலோ அல்லது பாதிப்படைந்து இருந்தாலோ உங்களால் குறிப்பிட்ட புரோகிராமினை இன்ஸ்டால் செய்யவோ அல்லது அன்-இன்ஸ்டால்( Install/Uninstall ) செய்யவோ முடியாது. இதற்காகவே மைக்ரோசாப்ட்  நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 'பிக்ஸ் இட்' ( Fix It ) என்னும் மென்பொருளை. வழங்கியுள்ளது. இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் எற்படும் இன்ஸ்டால் அல்லது அன்-இன்ஸ்டால் பிரச்கனைகளை தீர்க்கலாம்.

லிங்க்:
http://support.microsoft.com/mats/program_install_and_uninstall/en

Monday, June 09, 2014

திரை கீ போர்ட்( On-Screen Keyboard )

எப்பொழுதாவது உங்கள் கீ போர்டை உடனடியாக உபயோகிக்க முடியாமல் போனால் வின்டோஸ்ல் உள்ளமைந்துள்ள(inbuilt) திரை  கீ போர்டை( On-Screen Keyboard ) மவுஸ் வழியாக உபயோகிக்கலாம்..அதனை கொண்டு வர வழிமுறைகள் இங்கே..ரன் மெனுவில் 'osk' என டைப் செய்து என்ட்டரை(enter) தட்டவும்..உடனே மவுஸ் வழி இயங்கும் கீ போர்டானது தோன்றும்..இதை உபயோகித்து டைப் செய்து கொள்ளலாம்.

Tuesday, May 27, 2014

இன்டர்நெட் இன்பர்மேசன் சர்விஸ் ( IIS ) @ Win 7

இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தே .ASP , .AXD, .SOAP, ASPX, .SHTML, .STM, .AXD, .ASMX, .PHP போன்ற பைல்களை சோதனை செய்து கொள்ளலாம்..

வெப் டிசைன்(web design) செய்பவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.. இதனை Windows 7 ல் இன்ஸ்டால் செய்ய பின்வரும் லிங்கை கிளிக் செய்து அதில் கூறிய படி செய்யவும்..

லிங்க்..
http://www.iis.net/learn/install/installing-iis-7/installing-iis-on-windows-vista-and-windows-7

Wednesday, May 14, 2014

கடவுள்முறை( GOD MODE ) Win7

 விண்டோஸ் 7 டிப்ஸ்

விண்டோஸ் 7 ல் கீழ்காணும் பெயரில் போல்டர் புதியதாக உருவாக்கினால் , அது உங்களை கடவுள்முறைக்கு( GOD MODE ) எடுத்துச்செல்லும்.. அதில் அனைத்து விண்டோஸ் அமைப்புகள்(Settings) அனைத்தும் காட்டப்படும். உங்களுக்கு வேண்டியவற்றை தேர்வு செய்துகொள்ளலாம்..அதாவது கிட்டதட்ட Control Panelல் வரும் அனைத்து அமைப்புகளும் ஒரே இடத்தில் காட்டப்படும்..

GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}

Sunday, September 08, 2013

தமிழ் பங்குச்சந்தை

இந்திய பங்கு சந்தை பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்ள இந்த முகபுத்தக பக்கம்(facebook page) துவங்கப்பட்டுள்ளது..

லிங்க்:
தமிழ்-பங்குச்சந்தை

விருப்பம் உள்ளவர்கள் லைக்(like) பட்டனை கிளிக் செய்து இணைந்து கொள்ளலாம்.. நாட்டு நடப்பு,எந்த பங்குகளை வாங்கலாம் விற்கலாம்,கம்பெனிகளை பற்றிய செய்திகள்,தங்கம் விலை,டாலர் விலை, சந்தையை பாதிக்கும் காரணிகள், மற்ற பிற சந்தை தொடர்பான செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம்....

Sunday, August 18, 2013

யூடியுப் விளம்பரங்களை தடை செய்ய

யூடியுப்பில்(youtube) வீடியோ ஓடும் போது குறுக்கே வரும் விளம்பரங்கள் இடையூறு செய்கின்றதா? கூகிள் குரோம் பிரவுசர் உபயோகிப்பவரா நீங்கள்?குரோம் பிரவுசர்கென ஒரு யெக்டென்ஸன்(extension) உள்ளது. அதுதான் ஆட்பிளாக் பிளஸ்(Adblock plus). இதை கூகிள் குரோம் பிரவுசரில் இன்ஸ்டால் செய்தால் போதுமானது..இதுவே வீடியோ ஓடும் போது வரும் விளம்பரங்களை தடுத்துவிடும். விளம்பர தொந்தரவின்றி வீடியோ பார்க்கலாம்..

லிங்க்
https://chrome.google.com/webstore/detail/adblock-plus/cfhdojbkjhnklbpkdaibdccddilifddb?hl=en-US

Tuesday, October 23, 2012

கூகிள் மூலம் எளிதில் தகவல் அறியும் முறை



நாம் கூகிள் மூலம் பல தகவல்களை பெறுகின்றோம்.  அப்படி பட்ட தகவல்களை எளிதில் பெற இதோ வழிமுறைகள்.

define:multiprocessor
இ து கொடுக்கப்பட்ட வார்த்தைக்கான விளக்கத்தை பல வெப்சைட்களில் இருந்து நமக்காக எடுத்து கொடுக்கும்.

time:chennai அல்லது time:india
குறிப்பிட்ட இடத்தின் நேரத்தை அறிய உதவுகின்றது. உள்ளீடாக ‌எனவும் கொடுக்கலாம்.

1 USD in INR
நாடுகளுக்கிடையே பணபரிமாற்றத்தின் மதிப்பை தெரிந்து கொள்ள  உதவுகின்றது.
உதாரணமாக இந்தியா மற்றும் அமெரிக்கா பணபரிமாற்ற மதிப்பை தெரிந்து கொள்ள கீழ்கண்டவாறு உள்ளீடு கொடுக்கவும்..
1 USD in INR
100 INR in USD

info:yahoo.com
இது ஒரு வெப்சைட்டின் குறுந்தகவல்கள் மற்றும் கூகிள் பிடித்து வைத்த அந்த வெப்சைட்டை பற்றிய தகவல்களை தருகின்றது.


map:chennai
குறிப்பிட்ட இடத்தின் கூகிள் மேப்பை ‌காட்ட

weather:chennai
குறிப்பிட்ட இடத்தின் தட்பவெப்ப நிலையை அறிய

10 + 57 /2 *10+8%3
கூகிள் உதவியுடன் நாம் எளிதில் கூட்டல் கழித்தல் வகுத்தல் பெருக்கல் என கணக்குக‌ளை எளிதில் பண்ணலாம்.மேலும் கால்குலேட்டர் செய்யக்கூடிய அனைத்து கணக்குக‌ளையும் கூகிள் செய்கிறது.


1 meter = ? kilometer
1 மீட்டருக்கு எத்தனை கிலோமீட்டர் என காட்ட

120 kilometer/15 liter
என் டைப்செய்தால் 1 லிட்டர் ‌எரிபொருளுக்கு ‌எத்தனை  கிலோமீட்டர் கிடைக்கும் என காட்டும்

இது போல் இன்னும் சில,
24 inch in feet
1 billion INR in $
1 million INR in $
1/2 kg in pounds

Thursday, October 04, 2012

அவுட்லுக் 2000 ஷார்ட்கட் கீகள்


அவுட்லுக் 2000 முக்கிய ஷார்ட்கட் கீகள்(  Outlook 2000 Shortcut Keys )

(inbox)இன்பாக்ஸிற்கு செல்ல
CONTROL+SHIFT+I

(outbox)அவுட்பாக்ஸிற்கு செல்ல
CONTROL+SHIFT+O

(send message)மெசேஜ் அனுப்ப
ALT+S

(reply)மெசேஜ் அனுப்பியவருக்கு ரிப்ளே செய்ய
CTRL+R

(reply to all)மெசேஜ்ல் உள்ள அனைவருக்கும் ரிப்ளே செய்ய
CTRL+SHIFT+R

(forward message)மேசேஜை பார்வேட் செய்ய
CTRL+F

மெசேஜை ஜங்க்(junk) இல்லை என சொல்ல
CTRL+ALT+J

(check new mail)புதிய மெசேஜ் வருகையை சோதிக்க
CTRL+M அல்லது F9

( create new message)புதிய மெசேஜ் உருவாக்க
CTRL+N அல்லது CTRL+SHIFT+M

(open a message)வந்த மெசேஜை திறக்க
CTRL+O

(address book)அட்ரஸ் புக்கை திறக்க
CTRL+SHIFT+B

(flag a message)மெசேஜை குறித்து வைக்க
INSERT

( mark as read ) மெசேஜை படித்ததாக குறிக்க
CTRL+Q

( mark as unread ) மெசேஜை படிக்காததாக குறிக்க
CTRL+U

(search)வார்த்தையை தேட
CTRL+E

(forward message as attachment)மெசேஜை அட்டாச்மென்டாக பார்வேட் செய்ய
CTRL+ALT+F

(multimedia)மட்டிமீடியா மெசேஜ்  உருவாக்க
CTRL+SHIFT+U

(send text message)டெக்ஸ்ட் மெசேஜ்  உருவாக்க
CTRL+SHIFT+T

(to display send/receive dialog if send or receive in progress)மெசேஜ் அனுப்புதல் பெறுதல் டயலாக்கை காட்ட
CTRL+B


மெயில் டேப்க்கு(tab) செல்ல
CTRL+1

காலாண்டருக்கு செல்ல
CTRL+2

(contacts)முகவரிக்கு செல்ல
CTRL+3

(task)டாஸ்க் டேப்க்கு செல்ல
CTRL+4

(notes)நோட்ஸ் டேப்க்கு செல்ல
CTRL+5

(folder)போல்டர் லிஸ்ட்க்கு செல்ல
CTRL+6

(shortcut)ஷார்ட்கட்டுக்கு செல்ல
CTRL+7

Tuesday, September 11, 2012

விண்டோஸ் 7 ஸ்னிப்பிங் டூல்


இது விண்டோஸ் 7 உடன் இலவசமாக கிடைக்கின்றது. ஸ்கிரின் ஸாட்(screen shot) எடுப்பதற்கு இது மிகவும் உதவுகின்றது. 

இதனை விண்டோஸ் சர்ச்ல்(search) “Snipping Tool“ என தேடினால் காணலாம். இதனை கிளிக் செய்து வரும் மெனுவில் நியு(new) என்பதை தேர்வு செய்து ஸ்கிரினின் எந்த பகுதியையும் நீங்கள் விரும்பும் அளவு கேப்சர்(capture) செய்யலாம்.

 மேலும் இதனை JPEG, GIF, PNG, HTML வகைகளில் படங்களாக சேமிக்கலாம். மேலும் ஹைலைட்(highlight) மற்றும் பேனாவால்(pen) ‌வரையும் வசதி இ-மெயில் அனுப்பும் வசதியும் உள்ளது.

கூகிள் அலர்ட்


கூகிளிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் குறிப்பிட்ட தேடு தகவலை( search info ) தினமும் பெற விருப்பமா? அந்த தேடுதல் விடையானது உங்களுடைய மெயில் பாக்ஸில் வந்தால் எப்படி இருக்கும்..அதற்காகதான் “கூகிள் அலர்ட்“.. 

நீங்கள் இங்கே http://www.google.com/alerts சென்று உங்களுக்கு வேண்டிய தேடலின் வாக்கியத்தையோ அல்லது வார்த்தையையோ நீங்கள் உள்ளீடு செய்துவிட்டு அப்படியே உங்கள் இ-மெயில் ‌‌ஜடியையும் கொடுத்துவிடுங்கள்.. 
உங்களுக்கு மெயில் தினமும் வரவேண்டுமா அல்லது வாரம் ஒருமுறை வேண்டுமா  அல்லது நீங்கள் கொடுத்த தேடுதலுக்கு விடை கிடைத்ததும் மெயில் வரவேண்டுமா என தேர்வு செய்து கொள்ளலாம்..

மேலும் நீங்கள் எதிர்பார்க்கும் தேடுதல் வீடியோ(video) வடிவி‌லா அல்லது செய்தி(news) வடிவிலா அல்லது பிளாக்(blog), புத்தகம்(book) வடிவிலா என்பதையும் தேர்வு செய்து கொள்ளலாம்..

உதாரணமாக ”Programming in C” என்று உள்ளீடு செய்துவிட்டால்..இதைப்பற்றிய செய்தி புதிதாக கிடைத்தால் உடனே கூகிள் நமக்கு மெயில் செய்து விடும்..

Thursday, August 30, 2012

இம்மேஜ் ரிசைஸ் & கிராப் இம்மேஜ் ..


ஆன்லைன் மூலம் இம்மேஜை ரிசைஸ்(image resize) ‌மற்றும் கிராப்(crop) செய்ய வேண்டுமா? பின்வரும் வெப்சைட்களுக்கு சென்று எளிதில் மாற்றிக்கொள்ளலாம்..
அதோடு பல்வேறு வசதிகளையும்( contrast, darkness, sharpness, frames, border..etc ) தருகின்றது. இம்மேஜ் ரிசைஸ் உடன் வரும் இந்த வசதியை பயன்படுத்தி உங்கள் இம்மேஜை மெருகேற்றுங்கள்..
http://www.picresize.com
http://www.cutmypic.com
http://www.resize.it
http://www.webresizer.com

Friday, August 17, 2012

சாம்சங் கேலக்ஸி நோட் 8000 - முன்பதிவு


சாம்சங் இந்தியா 'சாம்சங் கேலக்ஸி நோட் 8000' க்கு முன்பதிவுவினை ஆரம்பித்துவிட்டது.. இதற்கு நீங்கள் ரூபாய் 2000 செலுத்தி முன்பதிவினை செய்துகொள்ளலாம்..
இத்துடன் ரூபாய் 3,249 மதிப்புள்ள கவர் இலவசமாக கிடைக்கும். இதன் விலை ரூபாய்.30000 தாண்டும் என தெரிகின்றது. இது இந்தியாவில் வரும் 24ம் தேதி வெளியிடப்படும் என சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது.

வெப்சைட் லிங்க்:
https://www.samsungindiaestore.com/Products/ProductDetails?X00O000V1764UtGkkXXX10O14Z872395030agsft5f6dhdj557jkslf3627fhd3g3gh34dsrie378037hU7hu9pppTYI0Yi76gfm9vtzr182oNn0SNzH1OdMY29pZ6atSRQovA==BxJIIIIX987fs62h0yr9df4g380ty0tt32r45en674Oty00ui0

சிறப்பம்சங்கள்

  • Android 4.0 (Ice Cream Sandwich)
  • 10.1-inch PLS TFT (Transistor Liquid Crystal) touchscreen
  • பிராசசர் Quad-core 1.4 GHz
  • 1280x800 pixel resolution
  • நினைவகம் RAM 2GB
  • உள்கட்ட நினைவகம் 16/32/64 GB வகைகளில் கிடைக்கும்
  • 5MP rear camera with autofocus, geo-tagging and LED flash, captures video at 1080p@30fps; 1.9MP rear snapper
  • Wi-Fi, 3G, LTE, Bluetooth 4.0, USB 2.0, MHL, infrared