Wednesday, December 28, 2011

இலவச பார்மேட் பேக்டரி( Format Factory )


வீடியோ.ஆடியோ,படங்களை நீங்கள் விரும்பிய பார்மேட்டுக்கு மாற்றவேண்டுமா? பழுதடைந்த வீடியோ,ஆடியோ பைல்களை சரிசெய்யவேண்டுமா? மீடியா பைல்களின் அளவினை குறைக்க வேண்டுமா? ஐ-போன்,ஐ-பாட் பார்மேட் பைல்களை உருவாக்க வேண்டுமா?

இதற்கெல்லாம் பதில்தான் இலவச பார்மேட் பேக்டரி சாப்ட்வேர் தொகுப்பு,

1.  அனைத்து வீடியோவை(video)  MP4/3GP/MPG/AVI/WMV/FLV/SWF பார்மேட்டுக்கு (format)மாற்றலாம்..
2.  அனைத்து  ஆடியோவை(audio)  MP3/WMA/AMR/OGG/AAC/WAV பார்மேட்டுக்கு மாற்றலாம்..
3. அனைத்து  படத்தையும்(Pictures) JPG/BMP/PNG/TIF/ICO/GIF/TGA பார்மேட்டுக்கு மாற்றலாம்..



இயங்குதளம்: விண்டோஸ்

டவுன்லோட் லிங்க்



Monday, December 26, 2011

கூகுள் ஸ்ட்ரீட் வியூ


கூகுள் ஸ்ட்ரீட் வியூ எனப்படும் தெருப் பார்வை நமக்கு என்ன வழங்கும்? இது அமல்படுத்தப்படும் நகரின் தெருக்களை மிகவும் நெருக்கமாகக் காட்டும். கூகுள் மேப்ஸ் சென்று தெருக்களை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மேப்பின் இடது பக்கம் ஆரஞ்ச் வண்ணத்தில் உள்ள “Pegman” ஐகானை இழுத்துவந்து நீல நிற வண்ணத்தில் உள்ள தெருவில் இட வேண்டும். உடன் அந்த தெருவின் தெளிவான தோற்றம் நமக்குக் கிடைக்கும்.

இந்தியாவிலும் இந்த வசதி அறிமுகப் படுத்தப்பட இருக்கிறது. முதல் முறையாக பெங்களூருவில் இது தொடங்கப்படுகிறது. கூகுள் நிறுவனம் பெங்களூருவில் முதலில் தெருக்களைத் தன் கேமராவிற்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளது. கார்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும் கூகுள் கேமராக்களை அமைத்து, படங்களைப் பிடித்து வருகிறது.

லிங்க்,
http://maps.google.com/intl/en/help/maps/streetview/index.html

Monday, December 19, 2011

செய்தி - கூகுள் மங்காத்தா!!

அஜீத் நடிப்பில் வெளியான 50வது படம் 'மங்காத்தா'. அஜீத் நடிப்பில் வெளியான அனைத்து படங்களின் வசூல் சாதனையும் 'மங்காத்தா' படம் முறியடித்தது. இந்நிலையில் GOOGLE நிறுவனம் 2011 ஆண்டு தங்களது இணையத்தில் அதிகமுறை தேடப்பட்ட படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதன் முறையாக தமிழ் படமான 'மங்காத்தா' இந்த வரிசையில் 7ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. அஜீத், த்ரிஷா, அர்ஜுன், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்த இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். GOOGLE படங்களின் வரிசையில் சல்மான்கான் நடிப்பில் வெளியான 'பாடிகார்ட்' முதல் இடத்தை பிடித்திருக்கிறது. ' ரா.ஒன்' 2ம் இடத்திலும், 'ஹாரி பாட்டர்' 3ம் இடத்திலும் உள்ளன. மற்றவை
 4. டெல்லி பெல்லி
5.இந்தி 'சிங்கம்'
 6. ரெடி
 7. மங்காத்தா
 8. TRANSFORMERS-3
 9. தோக்குடு ( தெலுங்கு )
 10. Zindagi Na Milegi Dobara ( இந்தி )

 GOOGLE இணையத்தின் தேடலிலும் ' மங்காத்தா' படம் சாதனை படைத்துள்ள விஷயம் அஜீத் ரசிகர்களையும் படக்குழுவினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Monday, December 05, 2011

நாம் ஜெயிப்போமா?




பரிஸ்தமிழ்.கொம் நடாத்தும் மாபெரும் போட்டி 31 December 2011




போட்டியில் இணைந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை சொடுக்கவும்.




http://www.paristamil.com/contest/share-ref-10068-fed-ta1.htm



பரிசுகள்
1ம் பரிசு உங்கள் பெயர் பொறிக்கப்பட்ட Iphone 4S
2ம் பரிசு மடிக்கணனி Laptop
3 முதல் 10ம் இடம் வரை வென்றவர்களுக்கு 2Gb Apple iPod shuffle Digital Player

பிட்மீட்டர் OS


சில பிராட் பேண்ட் (broadband) இன்டர்நெட் இணைப்பு( airtel, tata, bsnl.. ) நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவு வரை பேண்ட்வித் (bandwidth) இலவசமாக வழங்கும் பின் கட்டணம் வசூலிக்கத் தொடங்கிவிடுவார்கள்..சிலவற்றில் 10GB வரை 3MBPS என்றும் அதற்குமேல் 256KBPS வேகம் என்றும் இருக்கின்றது..

இது போன்ற பிராட் பேண்ட் இன்டர்நெட் இணைப்பில் எவ்வளவு டவுன்லோட் செய்தீர்கள்?நாம் டவுன்லோட் லிமிட்டை மீறிவிட்டோமா என்ற கேள்வி நம்மிடையே இருக்கும்..அதற்கு விடையளிக்க இலவச சாப்ட்வேர் தொகுப்பு கிடைக்கின்றது..

அதுதான் பிட்மீட்டர் OS ( BitMeter OS )

டவுன்லோட் செய்ய..
http://codebox.org.uk/bitmeterOs

இயங்கு தளங்கள்
வின்டோஸ், லினக்ஸ், மேக்