Wednesday, February 16, 2011

கோபக்காரப் பறவைகள்



காச்மூச்செனக் கத்திக்கொண்டு இருக்கும் பறவையைக் கவணில் அமர்த்தி, லேசாக இழுத்துச் செலுத்த... அது, எதிரே தேமே என உட்கார்ந்திருக்கும் பன்றிகளின் மேல் விழுந்து, வீர மரணம் எய்துகிறது. காரணம், இந்த சோம்பேறிப் பன்றிகள் தங்களது முட்டைகளைத் திருடிச் சென்றுவிட்டனவாம். இந்த தற்கொலைப் படையில் சில பறவைகள் ஏவுகணைபோலத் தாக்கி மரணம் அடையும்; சில குண்டு வீசும்.

2010-ல் மிகச் சிறந்த மொபைல் விளையாட்டாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பது இந்த 'கோபக்காரப் பறவைகள்’தான்! ஐ-பேட் சாதனத்தில் தரவிறக்கம் செய்துகொள்ள 5 அமெரிக்க டாலர்கள் கட்டணம். ஆப்பிளின் மொபைல் சாதனங்கள் மட்டும் அல்லாமல், கூகுளின் ஆண்ட்ராயிட், நோக்கியா, பாம் எனப் பல தளங்களில் கிடைக்கும் கோபக்காரப் பறவைகளை 2010-ல் மட்டும் 35 மில்லியன் மக்கள் வாங்கியிருக்கிறார்கள். பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ரோவியோ மொபைல் என்ற சிறிய நிறுவனத்தின் தயாரிப்பான இந்த விளையாட்டின் மகத்தான வெற்றியை அவர் களே எதிர்பார்க்கவில்லை. இந்தியாவில் 2010-ல் வாங்கப்பட்ட #1 மொபைல் விளையாட்டு இதுதான் என்று ஆப்பிள் வலைதளம் சொல்வதால், இதைப் படிக்கும் சிலராவது, கோபக்காரத் தற்கொலைப் படையைப் பன்றிகளைக் கொல்லப் பயன்படுத்தி இருப்பீர்கள் என்பது எனது யூகம்.

கோபக்காரப் பறவைகளின் விக்கி உரலி -
http://en.wikipedia.org/wiki/Angry_Birds

Download:

No comments:

Post a Comment