Monday, June 20, 2011

செய்தி - ஜூன் 30 முதல் 25 பைசா செல்லாது


மும்பை:இந்தியாவில், ஜூன் 30ம்தேதிக்கு பிறகு 25 பைசா செல்லாது என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:25 பைசா மற்றும் அதற்கு குறைந்த மதிப்புள்ள நாணயங்கள், வரும் ஜூன் 30ம்தேதிக்கு பிறகு செல்லாது. இந்த நாணயங்களை வைத்திருப்@பார், அவற்றை ரிசர்வ் வங்கி அல்லது பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள், குறிப்பிட்ட அன்னிய வங்கிகள், கிராம மற்றும் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் ஜூன் 29ம்தேதிக்குள் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். வங்கிகள் அவற்றின் கிளைகளில் உள்ள சில்லரை நாணய மாற்று பிரிவில், 25 பைசா மற்றும் அதற்கு குறைந்த மதிப்பு கொண்ட நாணயங்களை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யவேண்டும். ஜூன் 30ம்தேதிக்கு பிறகு 25 பைசா நாணயங்கள் செல்லாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அனைத்து வங்கிகளிலும்சேகரிக்கப்படும் 25 பைசா நாணயங்கள் உருக்கப்படும். உருக்கிய உலோகத்தை என்ன செய்வது என்பது குறித்து மத்திய அரசு பின்பு முடிவு செய்யும்.

No comments:

Post a Comment