தும்பி
www.tumbhi.comஇந்த இணையதளத்தில் உங்களின் தனித் திறமைகளை உலகுக்கு சொல்ல வாய்ப்பளிக்கிறது. இசை, ஆவணப்படம், போட்டோகிராபி, அனிமேஷன், எழுத்து, ஃபைன் ஆர்ட்ஸ், ஃபேஷன், கலை போன்ற எட்டு துறைகளிலிருந்து படைப்புகளை அனுமதிக்கிறது இத்தளம்.
இதற்கென தனியாக ஆலோசனை குழு இருக்கிறது. போட்டோகிராபி, மியூசிக், ஆவணப்படம் என ஒவ்வொன்றுக்கும் தனி குழு செயல்படுகிறது. அந்தந்த குழுவில் இடம் பெற்றிருப்பவர்கள் அந்த துறையைச் சார்ந்த வல்லுனர்கள். இவர்கள் இந்த இணையதளத்திற்கு வரும் படைப்புகளை ஆராய்ந்து, இந்த வலைதளத்தில் வெளியிடுகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் அவர்களது திறமையை வெளிக்கொணர மாதத்திற்கு ஒருமுறை போட்டியும் நடத்துகிறார்கள்.
விஸ்காபுலரி
http://www.wizcabulary.com/ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கான, ஆங்கிலச் சொல் அறிவினைச் சோதித்து வளர்த்திடும் தளமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. வெளியே வெய்யிலோ அல்லது மழையோ இருப்பின், சிறுவர்களை வீட்டுக்குள் கட்டிப் போடும் வகையில், சவால் விடும் தளமாகவும் இது அமைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment