Tuesday, September 11, 2012

கூகிள் அலர்ட்


கூகிளிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் குறிப்பிட்ட தேடு தகவலை( search info ) தினமும் பெற விருப்பமா? அந்த தேடுதல் விடையானது உங்களுடைய மெயில் பாக்ஸில் வந்தால் எப்படி இருக்கும்..அதற்காகதான் “கூகிள் அலர்ட்“.. 

நீங்கள் இங்கே http://www.google.com/alerts சென்று உங்களுக்கு வேண்டிய தேடலின் வாக்கியத்தையோ அல்லது வார்த்தையையோ நீங்கள் உள்ளீடு செய்துவிட்டு அப்படியே உங்கள் இ-மெயில் ‌‌ஜடியையும் கொடுத்துவிடுங்கள்.. 
உங்களுக்கு மெயில் தினமும் வரவேண்டுமா அல்லது வாரம் ஒருமுறை வேண்டுமா  அல்லது நீங்கள் கொடுத்த தேடுதலுக்கு விடை கிடைத்ததும் மெயில் வரவேண்டுமா என தேர்வு செய்து கொள்ளலாம்..

மேலும் நீங்கள் எதிர்பார்க்கும் தேடுதல் வீடியோ(video) வடிவி‌லா அல்லது செய்தி(news) வடிவிலா அல்லது பிளாக்(blog), புத்தகம்(book) வடிவிலா என்பதையும் தேர்வு செய்து கொள்ளலாம்..

உதாரணமாக ”Programming in C” என்று உள்ளீடு செய்துவிட்டால்..இதைப்பற்றிய செய்தி புதிதாக கிடைத்தால் உடனே கூகிள் நமக்கு மெயில் செய்து விடும்..

No comments:

Post a Comment