கூகிள் விளம்பர சேவையின்(google ads) மூலம் கூகிள் தனது விளம்பர வருவாயை தனது விளம்பரங்களை காட்டும் வெப்சைட் அல்லது பிளாக்கர் வைத்திருப்பவர்களுடன் பகிர்ந்தளிக்கின்றது. அதாவது கிட்டதட்ட தனது 50 சதவீத விளம்பர வருவாயை கூகிள் பகிர்ந்து கொள்கின்றது.
இந்த சேவையில் இணைய தேவையானது
1. செந்தமாக ஒரு வெப்சைட் அல்லது பிளாக்கர். அதில் உள்ள பக்கங்கள் கூகிள் கூறி உள்ளவாறு அதிக தகவல்களுடனும், சிறந்த கட்டமைப்புடனும் இருக்க வேண்டும்.
2. ஒரு ஜி-மெயில் ஐ.டி அல்லது ஏதேனும் ஒரு இ-மெயில் ஐ.டி.
தற்சமயம் தமிழில் உள்ள வெப்சைட் அல்லது பிளாக்கர்களை கூகிள் ஏற்பதில்லை. ஆக வெப்சைட் அல்லது பிளாக்கர் ஆங்கிலம் அல்லது பின்வரும் மொழிகளில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது கூகிள் நிபந்தனை. அப்படி இல்லாத பட்சத்தில் உங்கள் விண்ணப்பம் நிராகரிப்பு செய்யப்படும்.
பிளாக்கர் உருவாக்குவது எளிது மற்றும் இலவசம். ஆனால் சொந்தமாக வெப்சைட் துவங்க சில ஆயிரங்கள் செலவாகும்.
எப்படி விண்ணப்பிப்பது
இங்கே சென்று உங்களின் தகவல்களை பதிவு செய்யவும். உங்கள் வெப்சைட் அல்லது பிளாகரின் முகவரியை உள்ளீடு செய்ய வேண்டும். பதிவு செய்தவுடன் 1-2 வாரங்களில் கூகிள் உங்கள் வெப்சைட் அல்லது பிளாகரானது கூகிள் கூறியுள்ளவாறு நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளதா என பரிசோதித்து கூகிள் ஆட்ஸ்ஸை உங்கள் வெப்தளத்தில் காட்ட அனுமதி வழங்கும்.
அப்படி அனுமதி கிடைத்ததும்.https://accounts.google.com/ServiceLogin?service=adsense&rm=hide&nui=15&alwf=true<mpl=adsense&passive=true&continue=https://www.google.com/adsense/gaiaauth2?hl%3Den_US&followup=https://www.google.com/adsense/gaiaauth2?hl%3Den_US&hl=en_US இங்கே சென்று லாகின் செய்து கூகிள் தரக்கூடிய விளம்பர கோடை(code) உங்கள் வெப்சைட் அல்லது பிளாக்கரில் இணைக்கலாம். சில மணி நேரத்தில் உங்கள் வெப்சைட் கூகிள் விளம்பரங்களை காட்ட துவங்கி விடும்.
உங்கள் வெப்சைட்டில் அதிகமாக பார்க்ப்படும் விளம்பரங்கள் மற்றம் அதிகமாக கிளிக் செய்து பார்க்ப்பட்ட விளம்பரங்கள என கூகிள் உங்கள் கணக்கில் பணத்தை வரவு வைக்கும். உங்கள் கணக்கில் 100 அமெரிக்க டாலர் சேர்ந்தவுடன் நீங்கள் அதை இந்திய பண மதிப்பு காசேலையாக(செக்காக) அனுப்புமாறு கூகிளுக்கு கூறினால் உங்களுக்கு கூகிள் அதற்கான காசோலையை அனுப்பி வைக்கும். மேலும் தின(daily), வாரம்(weekly), மாதம் (monthly)வாரியாக உங்கள் வெப்சைட்டில் தோன்றும் ஆட்ஸை(ads) கிளிக் செய்தவர்தள் எத்தனை பேர் பார்த்தவர்கள் எத்தனை பேர் என்பதை கூகிள் ரிப்பேரர்ட்ஸ் மூலம் பார்த்துக்கொள்ளலாம்.
பின்பற்ற வேண்டியது
1. உங்கள் விளம்பரங்களை நீங்களே கிளிக் செய்யக் கூடாது.
2. மற்றவர்களிடம் கூறி கிளிக் பண்ணுமாறு செய்யக் கூடாது.
3. உங்கள் வெப்சைட்டில் விளம்பரத்தை கிளிக் செய்யும்படி கூறக்கூடாது.
அப்படி மீறும் பட்சத்தில் கூகிள் உங்கள் அக்கவுண்டை நீக்கிவிடும்.
நேர்மையாக நடந்து கொண்டால் கூகிள் விளம்பரம் மூலம் பணம் பண்ணலாம். விஜய்நெட்வெரர்க்.காம் கூகிளிடம் இருந்து ஓரு காசோலயை முதன் முதலாக பெற்றுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.
hi for search engine optimization click here
ReplyDeletethnks 4 ur nfrmation..iam xpcting more nfrmtion lyk dis... nd i wnt abt bloggr 2creat
ReplyDelete...