Friday, July 05, 2013

அமேஸான் இந்தியா

ஜீன் மாதத் தொடக்கத்தில் செயல்படத் தொடங்கிய அமேஸான் இந்தியா டாட் இன்(amazon.in) இணைய வர்த்தகத் தளத்தில், மொபைல் போன்களும் அவற்றிற்கான துணை சாதனங்களும் விற்பனைக்கு இடம் பெற்றுள்ளன. நோக்கியா, எச்.டி.சி., மைக்ரோமேக்ஸ், பிளாக்பெரி, சாம்சங், ஸென்ஹெய்சர் போன்ற நிறுவனங்களின் மொபைல் போன்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றுடன்,

 டேப்ளட் பிசிக்கள்( Tablet PC ), போர்ட்டபிள் மீடியா பிளேயர்கள், கேமராக்கள் மற்றும் போட்டோகிராபி சார்ந்த துணை சாதனங்களுடன் இடம் பெற்றுள்ளன. ஏறத்தாழ, 200 நிறுவனங்களிடமிருந்து, 20 ஆயிரம் சாதனங்கள் விற்பனைக்குப் பட்டிலிடப்பட்டுள்ளன. வாங்கப்படும் பொருட்கள், வாடிக்கையாளர்களின் வீடுகளிலேயே வழங்கப்படும் வசதி, வாங்கப்பட்ட பொருட்கள், வீடுகளுக்கு அனுப்பப் படும் வழியைக் கண்காணிக்கும் வசதி, பொருட்கள் பிடிக்கவில்லை எனில் திரும்ப அளிப்பதற்கான வசதி போன்ற அமேஸான் இணையதளம் வழக்கமாக தரும் அனைத்து வசதிகளையும், இந்த தளத்தில் தங்கள் பொருட்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்கள் தருகின்றன. தொடக்கத்தில், நூல்கள் மற்றும் திரைப்படங்கள் மட்டுமே இந்த தளத்தில் விற்பனைக்கு இருந்தன. 

தொடக்க காலச் சலுகையாக, குறிப்பிட்ட மொபைல் போன் மாடல்களுக்கு, அமேஸான் 10 சதவித விலை தள்ளுபடி அளிக்கிறது. ஒருவருக்கு ஒரு மொபைல் போனுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி கிடைக்கும். சில டிஜிட்டல் கேமராக்களுக்கு 15 சதவீதத் தள்ளுபடி தரப்படுகிறது.



No comments:

Post a Comment