தற்போது மீண்டும் வாக்மேன்zx2 என்ற பெயரில் ஆடியோ பிளேயரை ஆன்ட்ராய்டு உபயோகத்துடன் அறிமுகம் செய்துள்ளது சோனி நிறூவனம்.
இது ஐபேடுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ள புதிய கண்டுபிடிப்பாக விளங்குகிறது. அதன் சிறப்பம்சங்கள் என்னவெனில் இதன் நினைவக திறன் இன்டர்னல் மற்றும் எக்ஸ்டர்னல் இரண்டுமே 128 ஜிபி என்ற அளவிலும், என்எஃப்சி மற்றும் ப்ளூடூத் ஈனைப்பு ஆகிய வசதியுடன் உள்ளது.
இதில் எம்பி3, டபிள்யூஎம்ஏ, லீனியர் பிசிஎம் ஆகிய ஃபைல்களை பயன்படுத்தும் விதமாக இது உள்ளது மேலும் இதனை எளிதாக கணினியில் இணைத்து பாடல்களை பதிவேற்ரம், மற்றும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் பேட்ட்ரி அமைப்பு 3 மணிநேரம் சார்ஜ் செய்தால் 32 மணி நேரம் நீடிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் இயங்குதளம் ஆண்ட்ராய்டு 4.1 ஆகும். இதன் எடை 139 கிராம் என்று கூறப்படுகிறது.
முன்பு ஒளிநாடா அமைப்பில் இருந்து மாறி தற்போது டிஜிட்டல் வசதிகளுடன் மெமெரி கார்டு மற்றும் யூஎஸ்பி அமைப்புடன் வெளிவருவது இதன் சிறப்பம்சமாக உள்ளது. ஆப்பிள் நிறுவன தயாரிப்பான ஐபாடிற்கு இது சரியான போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே சமயம் விலை என்பது அதிகமாக இருப்பதால் இதனை நடுத்தர மக்கள் வாங்குவது சிரமம் என்கிரார்கள். ஐரோப்பிய சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ள இந்த வாக்மேன் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவில் இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 53000 ரூபாயாக உள்ளது.
No comments:
Post a Comment