Wednesday, January 18, 2012

யுனிக்ஸ்(UNIX) கட்டளைகள்

pwd தற்போது வேலை செய்து கொண்டிருக்கும் கோப்பகத்தைக் காட்டுகிறது
உபயோகிக்கும் முறை,
$pwd

mkdir ஒரு புதிய கோப்பகத்தை உருவாக்குகிறது
உபயோகிக்கும் முறை,
$mkdir test

cd கோப்பகத்தை மாற்றிக் கொள்ள உதவுகிறது
உபயோகிக்கும் முறை,
$cd test

rmdir ஒரு வெற்றுக் கோப்பகத்தை நீக்குகிறது
உபயோகிக்கும் முறை,
$rmdir test

rm கோப்புகளை நீக்கப் பயன்படுகிறது
உபயோகிக்கும் முறை,
rm test.txt


man ஒரு கட்டளைக்கான உதவிக் கையேட்டைக் காட்டுகிறது
உபயோகிக்கும் முறை,
$man ls

ls கோப்பகங்களையும் கோப்புகளையும் பட்டியலிட உதவுகிறது
உபயோகிக்கும் முறை,
$ls

find கோப்புகளையும் கோப்பகங்களையும் அவற்றின் பெயர் கொண்டு தேட உதவுகிறது
உபயோகிக்கும் முறை,
$find test.txt

cp கோப்புகளை நகலெடுக்க உதவுகிறது.
உபயோகிக்கும் முறை, 
$cp test.txt test1.txt

mv கோப்புகளை நகர்த்தவும் மாற்றுப்பெயரிடவும் உதவுகிறது.
உபயோகிக்கும் முறை,
$mv test.txt test2.txt

cat கோப்புகளை ஒன்றிணைக்க, புதிய கோப்பை உருவாக்க, ஏற்கனவே உள்ள கோப்பைத் திறந்து பார்க்க உதவுகிறது.
உபயோகிக்கும் முறை,
$cat test.txt

df வட்டில் உள்ள காலியிடத்தை அறிய உதவுகிறது.
உபயோகிக்கும் முறை,
$df

du வட்டின் பயன்படுத்தப்பட்ட இடத்தை அறிய உதவுகிறது.
உபயோகிக்கும் முறை,
$du

more கோப்புகளைப் பக்கம் பக்கமாகப் பார்க்க உதவுகிறது.
உபயோகிக்கும் முறை,
$more test.txt

less கோப்பின் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்க உதவுகிறது.
உபயோகிக்கும் முறை,
$less test.txt

head கோப்பின் முதல் 10 வரியை மட்டும் பார்க்கவுதவுகிறது.
உபயோகிக்கும் முறை,
$head test.txt

tail கோப்பின் இறுதி 10 வரியை மட்டும் பார்க்கவுதவுகிறது.,
உபயோகிக்கும் முறை,
$tail test.txt

history ஏற்கனவே செயலாக்கப்பட்ட கட்டளைகளைக் காட்டுகிறது.
உபயோகிக்கும் முறை,
$history

1 comment: