Saturday, January 21, 2012

HD டிவி/வீடியோ என்றால் என்ன?


ஹை டெபனிசன் டிவி( High Definition TV ) என்பது டிஜிடல் டிவியின்( Digital TV) வரையறைக்குட்பட்டது. இதுவரை நாம் அனலாக்(Analog) எனப்படும் முறையிலேயே டிவி சேனல்களின் வீடியோகளை நம் வீட்டு அனலாக் டிவியில்(Analog TV) பார்த்து வந்தோம். தற்போது டிஜிட்டல் முறைக்கு நாம் சென்று கொண்டிருக்கின்றோம். அதாவது டிஜிட்டல் டேட்டாக்களை நேரடியாக வாங்கி நமக்கு வீடியோவை கொடுக்கக் கூடிய டிவிக்கள்( LCD, LED, Plasma  ) தற்போது வந்துவிட்டன. இதற்கு நமக்குத் தேவை HD TV மற்றும் ஹைச் டி செட்டாப் பாக்ஸ்(HD Set-top box).செட்டாப் பாக்ஸ்ல் உள்ள HDMI போர்ட் மூலம் நாம்முடைய HD டிவியானது வீடியோவை துள்ளியமாக காண்பிக்கின்றது. 

அனலாக் முறையிலான வீடியோவை நாம் AV அல்லது RF கேபிள்வழியாக டிவிக்கு இணைத்து பார்க்கின்றோம். அதேபோல் HDMI கேபிளானது HD டிவியுடன் இணைந்து துள்ளியமான வீடியோவை( Digital Video ) நமக்குத்தருகின்றது. HD டிவியில் நாம் காணும் வீடியோவில்  முந்தைய அனலாக் டிவியை விட 5 அல்லது 6 மடங்கு துள்ளியமாக காணவும் கேட்கவும் முடியும்.
HDடிவி 720p 1080i, 1080p வகையான நீள அகலமுடைய வீடியோவை நமக்கு காண கொடுக்கின்றது. அதாவது அகன்ற திரை(16:9) வீடியோவினை நாம் காணலாம்.

720p, 1080i, 1080p நீள அகலத்தை கீழே இருக்கும் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நடுவில் இருப்பது அனலாக் வீடியோ அதாவது நாம் தற்போது அனலாக் டிவிகளில் பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோவாகும். படத்தைப்பார்த்தாலே எவ்வளவு அளவிலான வீடியோவை HDடிவி மூலம் நாம் காணலாம் என்பது உங்களுக்குப்புரியும்.

1080i அல்லது 1080p யை காண்பிக்கத்தகுந்த டிவிகள் சந்தையில் ஏராளம். குறிப்பக 1080p ல் வீடியோ தெளிவு சிறப்பாக இருக்கும்..




HD வீடியோ பார்க்க உங்களிடம் இருக்க வேண்டியது ஹைச் டி செட்டாப்பாக்ஸ்( HD set-top box ) மற்றும் அதற்கான HD டிவி, HDMI கேபிள். HD செட்டாப் பாக்ஸ் அதிக கொள்ளளவு உடைய டிஜிட்டல் வீடியோவை( HD Video ) HD டிவிக்கு கொடுக்கின்றது. HD டிவியானது அதனை நமக்கு காண்பிக்கின்றது. மேலும் HD சேனலில் 5.1 ஆடியோ(audio) வசதியும் உண்டு.

1 comment:

  1. மானிட்டர் மூலமாக கூட பார்க்கும் வசதி செய்ய லாமா? Monitor as T.V.?

    ReplyDelete