உலகளவிலான பங்குதாரர் கண்காட்சி கனடாவில் உள்ள டோரன்டோவில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது புதிய இயங்குதளமான விண்டோஸ்-8 வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது.மைக்ரோசாஃப்டின் இந்த புதிய விண்டோஸ்-8 இயங்குதளம் 2,233 டாலர் இருக்கும் என்றும், விண்டோஸ்-8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் 231 சர்வதேச சந்தைகளில் வெளியிட உள்ளதாகவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகப் புகழ் பெற்ற கூகுள் இணையதள நிறுவனமானது ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், அமேசான் நிறுவனங்களுக்கு போட்டியாக தனது முதல் டேப்லட்டை அறிமுகம் செய்துள்ளது. 7 அங்குல திரை அகலம் கொண்ட இந்த டேப்லட்டானது, கூகுளின் ஜெல்லிபீன் மென்பொருள், அதிநவீன கேமரா உள்ளிட்ட சிறப்பு வசதிகளை கொண்டுள்ளது. மேலும், ஜெல்லிபீன் மென்பொருளானது வேகமாக செயல்படும் திறன் கொண்டது என்றும், குரல் தேடல் போன்ற புதிய வசதிகளை கொண்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்துக்குப் போட்டியாக சர்ஃபேஸ் டேப்லெட்டுகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் நிலையில், கூகுள் நிறுவனம் நேற்று வெளியிட்ட நெக்சஸ் 7 டேப்லெட்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment