டி.என்.எஸ்.,( டொமைன் நேம் சிஸ்டம் ) என்பது நாம் வைத்துள்ள தளத்தின் முகவரியை கணினிக்கு புரியும் வகையில் ஐ.பி.எண்ணாக மாற்றி அந்த தளங்கள் திறக்க உதவுகிறது. தற்போது டி.என்.எஸ்.,சேஞ்சர் ( அலூரியன் மால்வேர் ) என்ற வைரஸ் உருவாக்கி இதன் மூலம் உங்கள் சிஸ்டத்தை செயல் இழக்கச்செய்யும் நாச வேலையில் அயல்நாட்டவர்கள் 7 பேர் இறங்கினர் . இது கடந்த நவம்பரில் பரப்பி விடப்பட்டது. இதன் மூலம் பல கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டன. மேலும் பாதிப்பில் இருந்து தப்பிக்க இதனை அமெரிக்க உளவு பிரிவு எப்.பி.ஐ., மாற்று சர்வரை நிறுவி உதவியது. இந்த சர்வரை நிறுத்திட முடிவு செய்திருப்பதால் இந்த வைரஸ் மீண்டும் 9 ம் தேதி(இன்று) செயல்பட துவங்கி விடுமாம். இதனால் உலகம் முழுவதும் பல லட்ச கம்யூட்டர்கள் செயல் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே டி.என்.எஸ்., சேஞ்சர் என்ற வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று அறிந்து முன்சோதனை செய்து கொள்ளவும். பெரும் கார்ப்ரேட் நிறுவனங்கள் ஆண்டி வைரஸ் வைத்திருப்பதால் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். நடுத்தரமானவர்கள் இது போன்று ஆண்டிவைரஸ் வைக்காத பட்சத்தில் பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம். எனவே தங்களின் கம்ப்யூட்டர்களில் இது போன்று வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறிய நீங்கள் www.dns-ok.us கிளிக் செய்தால் பாதிக்கப்டாமல் இருந்தால் பச்சைக்கலரில் வரும். பாதிக்கப்பட்டிருக்குமானால் சிவப்பு நிற இமேஜ் வரும். 9 ம்தேதி(இன்று) என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர் இன்டர்நெட் உபயோகிப்பாளர்கள்.
This site can no longer determine if your system is infected with the DNSchanger malware.what mean
ReplyDelete