Friday, May 20, 2016

பெங்களூரில் ஆப்பிள் டெவலப்மென்ட் சென்டர்

ஆப்பிள் ஐபோன் விற்பனையை அதிகரிக்க அதன் சிஇஓ டிம் குக் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இங்கு மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலுக்குச் சென்ற அவர் பின்னர் பெங்களூருவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் டிசைன் மற்றும் டெவலப்மென்ட் சென்டர் ஒன்றை நிறுவப் போவதாகக் கூறியுள்ளார்.

வரும் 2017-ம் வருடத்தின் தொடக்கத்தில் அந்த மையம் தொடங்க இருப்பதாகவும் கூறினார். முக்கியமாக அவர் இந்தியா வருகை தந்ததற்கு காரணமே ஆப்பிள் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதுதான். ஏனெனில் சீனாவில் ஆப்பிள் விற்பனைக் குறைந்துள்ளது.

உலகில் சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக ஸ்மார்ட் போன் புழக்கம் இந்தியாவில்தான் இருக்கிறது. எனவே ஆப்பிள் தனது சந்தையை விரிவுபடுத்த இந்தியாவைத் தேர்ந்தெடுத்துள்ளது.

No comments:

Post a Comment