ஃபேஸ்புக், வாட்ஸ் அப்க்கு போட்டியாக ‘ஆலோ’, ‘டியோ’ என இரு ஆப்களை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். இரண்டே ஆப்கள் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என வைத்துக்கொண்டு மொத்த டெக்னாலஜி உலகையும் ஆண்டுகொண்டிருக்கிறார் சூக்கர்பெர்க். ஒரு காலத்தில் உலகையே வியக்கவைத்துக் கொண்டிருந்த கூகுளால் சும்மா இருக்க முடியவில்லை.
மெசேஜிங் ஆப்பான ‘ஆலோ’வில் ,தற்போது வாட்ஸ் அப்பில் அப்டேட் ஆகியிருக்கும் மெசேஜ்களை பாதுகாக்கும் ‘என்கிரிப்ஷன்’ வசதியோடு, நமக்கு வரும் மெசேஜ்களுக்கு தானாக ரிப்ளை(auto reply) செய்யும் ஆல்ஷன்களும் உள்ளன. இதன்மூலம் நாம் ரிப்ளை செய்ய டைப் செய்ய வேண்டிய அவசியம் கூட இருக்காதாம். யாரேனும் ‘ எப்படி இருக்கிறாய்?’ என்று கேட்டால், ‘நன்றாக இருக்கிறேன்’ என்ற பதில் ஒரு ஸ்மைலியோடு ஸ்கிரீனில் சஜெஷனாகக் காட்டும்.
மிக மோசமான சூழ்நிலையில் கூட துல்லியமான வீடியோ காலிங்
செய்ய உதவுவதே டியோ ஆப்பின் மிகப்பெரிய பலம். பிற ஆப்களைப் போல் கால் செய்து சில நேரம் கழித்து லோட் ஆகாமல், உடனுக்குடனேயே கால்கள் இணைக்கப்படுகின்றன. இதனால் வீடியோ காலிங் ஆப்களில் டுவோ ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு ஆப்களும் ஆன்டிராய்டு மற்றும் ஐ-ஓஸ் மொபைல் தளங்களில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் அளவிற்கு வெற்றி பெரும் அளவிற்குப் பெரிதாக இந்த ஆப்களில் ஏதுமில்லை என்கிறார்கள் கேட்ஜெட் கில்லாடிகள்.
சூக்கர்பெர்க்கின் ஐடியாவைத் தாண்டி கூகுளால் ஏதேனும் சாதிக்க முடியுமா? பொருத்திருந்து பார்க்கலாம்..
No comments:
Post a Comment