Thursday, March 03, 2011

லேப்டாப்களுக்கான 3ஜி சிம் கார்டை அறிமுகப்படுத்துகிறது ஏர்செல்

ஐதராபாத் : 3ஜி சேவையை , மற்ற முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களை விட இறுதியாக அறிமுகப்படுத்திய போதிலும், லேப்டாப், டேப்ளெட் கம்ப்யூட்டகளுக்கான 3ஜி சிம் கார்டை விரைவில் மற்றும் முதன் முறையாக அறிமுகப்ப‌டுத்துகிறது ஏர்செல். இதுதொடர்பாக, ஐதராபாத்தில், பத்திரிகையாளர்களை சந்தித்த ஏர்செல் நிறுவன உயர் அதிகாரி குர்தீப் சிங் ‌கூறியதாவது, இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் தாங்கள் அறிமுகம் செய்ய உள்ள 3ஜி சிம்கார்டு, லேப்டாப் மற்றும் டேப்ளெட் கம்ப்யூட்டர்களில் பயன்படத்தக்க வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. இதற்காக, டேப்லெட் மற்றும் ‌லேப்டாப் கம்ப்யூட்டர்களுடன் பேசி வருவதாகவும், அவர்களை, 3ஜி சேவையை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்ள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 23 சர்க்கிளகளில் 3ஜி சேவைக்கான அனுமதியைப் பெற்றுள்ள தாங்கள், இதுவரை 21 சர்க்கிள்களில் 3ஜி சேவையை துவக்கி உள்ளதாகவும், எஞ்சியுள்ள பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் இன்னும் 2 வாரங்களில் 3ஜி சேவையை துவக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment