Tuesday, March 29, 2011

இனியாக்( ENIAC )

இனியாக்( ENIAC ) - இதுதான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பொதுநோக்கு(general purpose) மின் கணினி( electrical computer). இதன் விரிவாக்கம் Electronic Numerical Integrator And Computer என்பதாகும். ஒரு குறிப்பிட்ட கணக்குகளை சரிவர முடிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது. கூட்டல் கழித்தல் மட்டுமல்லாது 10 இலக்க எண்ணை நினைவகத்தில் நிறுத்தக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இது 1946 ஆம் ஆண்டு உபயோகத்திற்கு வந்தது.

அளவில் மிகப்பெரியதாக இருந்தது. கிட்டத்தட்ட 680 சதுர அடி அளவைக்கொண்டது. இதில் 17468 வேக்கம் டியூப்புகள்(vacuum tubes) 7200 படிக டயோடுகள் (crystal diodes) 70000 ரிஜிஸ்டர்கள் (registers) 10000 கெப்பாசிட்டர்கள் (capacitors) மற்றும் 5 மில்லியன் கைகளால் வடிவமைக்கப்பட்ட சர்க்யூட்டுகளும் அடக்கம்.

No comments:

Post a Comment