Monday, April 11, 2011

வந்துவிட்டது யுஸ்பி 3


இதுவரை யுஸ்பி-2(USB-2) வை நாம் உபயோகித்து வந்த நமக்கு யுஸ்பி-3(USB-3) ஒரு வரப்பிரசாதம். யுஸ்பி-3யானது யுஸ்பி-2 வை விட 10 மடங்கு வேகத்துடன் இயங்கவல்லது. யுஸ்பி-3ல் சில பின்கள்(pins) புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இது நொடிக்கு 3.2 முதல் 4 ஜிகாபைட்(gigabyte) வேகத்திற்கு உதவுகின்றன. ஒரே நேரத்தில் டேட்டாவை வேகமாக அனுப்பவும் பெறவும் இதனால் முடியும்.

யுஸ்பி-2 ஹை ஸ்பீடு(Hi-Speed) என அழைக்கப்பட்டது. யுஸ்பி-3 சூப்பர் ஸ்பீடு(Super Speed) என அழைக்கப்படுகின்றது. யுஸ்பி-2 ல் சப்போர்ட் செய்த அனைத்து சாதனங்களும் யுஸ்பி-3யிலும் இயங்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் செப்டம்பர் மாதம் யுஸ்பி-3 சப்போர்டானது லினக்ஸ் கெர்னலில் (linux kernel)இணைக்கப்பட்டுவிட்டது. வின்டோசும் அதற்கான வேலைகளில் களம் இறங்கியுள்ளது. நாம் யுஸ்பி-3க்கு மாறும்காலம் வெகுதொலைவில் இல்லை. மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இப்போதே யுஸ்பி-3 சப்போர்ட் (support)செய்ய கூடிய சாதனங்கள் வர துவங்கிவிட்டன.

No comments:

Post a Comment