Tuesday, April 05, 2011

செய்தி - தெரிஞ்சுகோங்க

உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி தொலைக்காட்சியில் அதிகம் பேர் பார்த்துசாதனை
மும்பையில் கடந்தசனிக்கிழமை நடைபெற்ற இந்தியா - இலங்கை இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நாடு முழுவதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இப்போட்டியில் இந்தியா பெற்ற வெற்றியை, தொலைக்காட்சியில் கண்டு ரசித்தவர்கள் குறித்த ஆய்வறிக்கையை, ஆடியன்ஸ் மெஷர்மென்ட் அண்டு அனலிட்டிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை, 6 கோடியே 76 லட்சம் பேர் சராசரியாக 4 மணிநேரத்திற்கும் அதிகமாக கண்டு ரசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.டி.வி.ஆர்., எனப்படும் தொலைக்காட்சி பார்வையாளர் மதிப்பீட்டின்படி, இப்போட்டி இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு 13.7 புள்ளிகளைப் பெற்றுள்ளது. போட்டியின் இறுதிக் கட்டத்தில், இது, 21.44 புள்ளிகள் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது. நாட்டில் கேபிள் மற்றும்சாட்டிலைட் வசதி மூலம் தொலைக்காட்சி பார்க்கும் இல்லங்களில் 64சதவீத குடும்பத்தினர், இறுதிப் போட்டியை கண்டு ரசித்துள்ளனர்.உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதி வரை தொலைக்காட்சியில் கண்டு ரசித்தோர் குறித்த மதிப்பீட்டின்படி, 3.7 புள்ளிகள் என்ற அளவில் குறைந்திருந்தது. இது காலிறுதியில் 5 புள்ளிகளாகவும், அரையிறுதி ஆட்டத்தில் 11 புள்ளிகளாகவும் உயர்ந்து இறுதிப் போட்டியில் 13.6 புள்ளிகள் என்றசாதனை அளவை எட்டியது. இது இதுவரை இல்லாத புதியசாதனையாகும். மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை தாக்கல், காமன்வெல்த் விளையாட்டு தொடக்க விழா, ஐ.பி.எல் சீசன் 3, உலகக் கோப்பை கால்பந்து போட்டி உள்ளிட்டவற்றை தொலைக்காட்சியில் பார்த்தவர்களை விட, உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை பார்த்தவர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

'டிவி'யில் அதிகம் பேர் பார்த்த ஐந்து நிகழ்ச்சிகள்

*2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி - 6.76 கோடி

*2011-12 மத்திய பட்ஜெட் தாக்கல் -3.70 கோடி

*காமன்வெல்த் விளையாட்டு தொடக்க விழா - 3 கோடி

*ஐ.பி.எல்., சீசன் 3 - 96 லட்சம்

*2010 உலகக் கோப்பை கால்பந்து போட்டி - 15 லட்சம்

No comments:

Post a Comment