Thursday, April 07, 2011

பிரவுசர் புதிய பதிப்பு

கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசர் தன் பத்தாவது பதிப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளது. மூன்று வார சோதனைத் தொகுப்பு காலத்திற்குப் பின் இது வெளியாகியுள்ளது. ஆறு வார காலத்திற்கு ஒருமுறை குரோம் பிரவுசர் புதுப்பிக்கப்படும் என்ற கூகுள் நிறுவனத்தின் உறுதி மொழி மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு புதிய வசதிகளுடனும் மாற்றங்களுடனும் இந்த பதிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டில், குரோம் பிரவுசர் முதல் முறையாக வெளிவந்தது. பலர் இந்த பிரவுசரின் வேகத்தைப் பார்த்து, பயன்படுத்த முனைந்தனர். பின்னர், பழகிப்போன சில வசதிகளுக்காக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசரையும் பயன்படுத்தினர். ஆனால் இந்த புதிய குரோம் 10 பயன்படுத்தத் தொடங்கினால், மற்றவற்றை நாட மாட்டார்கள் என்ற பொதுக் கருத்து இப்போது நிலவுகிறது. இந்த புதிய குரோம் பிரவுசரின் சிறப்புகளை இங்கு பார்க்கலாம்.
முதல் அம்சமாக, மீண்டும் அதன் வேகத்தைக் கூறலாம். முதல் முதலாக வந்த குரோம் பிரவுசரைக் காட்டிலும் இதன் வேகம் பத்து மடங்கு கூடுதலாக இருப்பதாக, இதனைச் சோதித்துப் பார்த்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. Crankshaft JavaScript இதற்குத் துணை செய்கிறது. குறிப்பிட்ட ஒரு செயல்பாட்டினை மேற்கொண்ட போது, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பதிப்பு 1,184 மில்லி விநாடிகளில் இணையப் பக்கத்தினை இறக்கிக் காட்டியது. அதே சோதனையை மற்றவற்றில் நடத்திய போது, பயர்பாக்ஸ் (பதிப்பு 3.6.15) 945 மில்லி செகன்ட்ஸ், ஆப்பிள் சபாரி 422.1 மில்லி செகண்ட்ஸ், பயர்பாக்ஸ் (பதிப்பு 4 பீட்ட 12) - 388 மில்லி செகண்ட்ஸ், புதிய குரோம் (பதிப்பு 10)321 மில்லி செகண்ட்ஸ் வேகத்தைக் காட்டின.

குரோம் பிரவுசரை இலவசமாக http://www.google.com/chrome என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் பிரவுசரைப் பயன்படுத்தக் கூடாது என்று மக்களைக் கேட்டுக் கொள்வதற்காக, ஓர் இணைய தளத்தை உருவாக்கி உள்ளது.
http://www.ie6countdown.com/ என்ற தளம் அதைத்தான் செய்கிறது. "பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிரவுசர் ஒன்று பிறந்தது. அதன் பெயர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6. இப்போது அதற்கு விடை கொடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது' என்ற வாசகத்துடன் இந்த தளம், மக்களை இன்டர்நெட் பிரவுசர் பதிப்பு 6லிருந்து விலகிச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறது. இந்த பிரவுசரைப் பயன்படுத்துவதனால் என்ன என்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று எச்சரிக்கப்படுகிறது. ஏன் பிரவுசரை அப்கிரேட் செய்து, பின்பு வந்த பிரவுசர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று விவரமாக எடுத்துச் சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment