கூகுளின் ஜி-மெயில் வசதி பற்றி அனைவருக்குமே தெரிந்திருக்கும். தற்போது கூகுள் நெக்சஸ் போனில் ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த இருக்கும் கூகுள். அதன் ஜி-மெயில் வசதியிலும் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கூகுளிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகத நிலையில் ஜி-மெயிலின் புதிய மாற்றங்கள் குறித்த தகவல்கள் ஒரு குறும் வீடியோ பதிவாக வெளியாகியுள்ளன. இந்த வீடியோ பதிவின் படி கூகுள் மெயிலான ஜி-மெயிலுக்காக தனி ஆப்ஸ் ஒன்றை கூகுள் உருவாக்கியுள்ளது. இதில் மற்ற மின்னஞ்சல் சேவைகளான யாகூ, ஹாட்மெயில் போன்றவற்றில் ஒருவர் வைத்திருக்கும் கணக்குகளையும் இணைத்துக்கொள்ள முடியும்.
இதன் மூலம் ஒரே ஆப்ஸில் அனைத்து இ-மெயில்களயும் இணைத்து கொள்வதால் இந்த ஆப்ஸ் வாடிக்கையாளர்களை கவரும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பேரோ எனும் மல்டி மெயில் ஆப்ஸை கூகுள் விலைக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment