தன் புதிய ஐபோன்களை வெளியிட்டதனைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம், ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் பயன்படுத்த, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐ.ஓ.எஸ்.8 னையும் வெளியிட்டது. சென்ற ஜூன் மாதத்தில் நடந்த, தன் உலகளாவிய டெவலப்பர் கருத்தரங்கில், ஆப்பிள் புதிய மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த தகவலை வெளியிட்டது. சென்ற செப்டம்பர் 17ல், புதிய ஐ.ஓ.எஸ். 8 சிஸ்டத்தினை, தன் வாடிக்கையாளர்கள் தரவிறக்கம் செய்திட தந்தது. வழக்கம் போல, இது இலவசமாகவே கிடைக்கிறது.
2013 ஆம் ஆண்டில், ஐ.ஓ.எஸ். 7 வெளியான போது, அது ஆப்பிள் நிறுவனத்தின், ஐபோன், ஐபாட் டச் மற்றும் ஐ பேட் சாதனங்களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மிகப் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தது. இப்போது வந்திருக்கும் ஐ.ஓ.எஸ்.8, அந்த அளவிற்கு புதிய மாற்றங்களைத் தரவில்லை என்றாலும், பல புதிய வசதிகளைத் தந்துள்ளது.
No comments:
Post a Comment